வியாழன், 25 செப்டம்பர், 2014

அமைச்சர், எம்எல்ஏக்கள் பரிந்துரைத்த பள்ளிக் காவலர்கள் பணி நியமனம் ரத்து

மதுரை, உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 2012-ம் ஆண்டில் 8 காவ லாளி பணியிடங்களும், 20 துப்புரவு தொழி லாளர் பணியிடங்களும் நிரப்பப்பட்டன. இதை எதிர்த்து திருப்பரங்குன்றத்தை சேர்ந்த கணேசன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் உசிலம்பட்டி மாவட்ட கல்வி அதிகாரி பதில் மனு தாக்கல் செய்தபோது, அதில் தகுதி அடிப்படையிலும், அமைச்சர் கள், எம்எல்ஏக்கள் சிபாரிசு அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்கள் என தனிப்பட்டியல் இருந்தது.

8 காவலாளி பணியிடங்களில் கூட்டுற வுத் துறை அமைச்சர் பரிந்துரையில் ஒரு வரும், மதுரை வடக்கு எம்எல்ஏ பரிந்துரை யில் இருவர், உசிலம்பட்டி எம்எல்ஏ பரிந்துரையில் 2 பேர், மதுரை மாவட்ட அதிமுக செயலர் பரிந்துரையில் ஒருவரும், தகுதி அடிப்படையில் இருவரும் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். 20 துப்புரவு தொழிலாளர் பணியிடங்களில் 10 இடங்கள் அமைச்சர், எம்எல்ஏக்கள் சிபாரிசின் பேரிலும், 10 இடங்கள் தகுதி அடிப்படையிலும் நிரப்பப்பட்டன. இதையடுத்து இது குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி சி.வி.சங்கரை நீதிமன்றம் நியமித்தது. அவர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார். அவரது அறிக்கை மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதி, சி.வி.சங்கர் புதன்கிழமை நேரில் ஆஜராக உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.நாகமுத்து முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. சி.வி.சங்கர் நேரில் ஆஜரானார். அவரிடம் நீதிபதி கேள்வி எழுப்பியபோது, அரசுப்பணிக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சிபாரிசு என்பது வழக்கமான ஒன்று தான் எனத் தெரிவித்தார்.
அரசு தலைமை வழக்குரைஞர் சோமையாஜி ஆஜராகி, அறிக்கையில் திருப்தி இல்லை என்றால், வேறு ஓர் அதிகாரி விசாரிக்க உத்தரவிட்டால் ஏற்பதாகத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நீதிபதி எஸ்.நாகமுத்து பிறப்பித்த உத்தரவு:இந்த வழக்கில் விசாரணை அதிகாரியை அரசு தான் நியமித்தது. ஆனால், அவர் தாக்கல் செய்த அறிக்கை திருப்திகரமாக இல்லை.அரசியல்வாதிகள் தொடர்பு, இயக்குநரகத்தில்இருந்துவந்த தொலைபேசி அழைப்பு போன்றவை குறித்தும் அவர் விசாரிக்கவில்லை. எனவே, எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர போன்றோர் பரிந்துரை அடிப்படையிலான 6 பள்ளிக் காவலர்கள் நியமனம் ரத்து செய்யப்படுகிறது.இந்தப்பணியிடங்களை புதிதாகத் தேர்வு நடத்தி நிரப்ப வேண்டும். மேலும், இந்த விவகாரம் குறித்து தென் மண்டல லஞ்ச ஒழிப்புப்
பிரிவு கண்காணிப்பாளர் சேவியர் தனராஜ் விசாரிக்க வேண்டும்.அவர் 6 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கத் தடையில்லை. மனு முடித்து வைக்கப்படுகிறது என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்."

பரிந்துரைக் கடித முறையை ஒழிக்க யோசனை'
நீதிபதி உத்தரவில், நாட்டில் ஏராளமான ஏழ்மை நிலையில் உள்ள இளைஞர்கள் சாதாரண அரசுப் பணிகளை நாடுகின்றனர். அரசியலமைப்பு சட்டப்படி சமவாய்ப்புகிடைக்கும் என நம்புகின்றனர்.ஆனால், அந்தப் பணிகளும் பரிந்துரை செய்யப்படுவோருக்கு ஒதுக்கப்படும்போதுஇளைஞர்களின் கனவு தகர்கிறது. பணிக்கு பரிந்துரைக் கடிதம் கொடுப்பதும் லஞ்சம் கொடுப்பதற்கு சமமானதுதான். மக்களின் தேவைக்காக பள்ளிகள்,பாலங்கள், குடிநீர் வசதி போன்ற பணிகளை செய்ய வேண்டும் என பரிந்துரை கொடுப்பதில் தவறில்லை. ஆனால்,அரசு வேலைக்கு பரிந்துரை செய்வது கூடவே கூடாது.இந்த முறையை ஒழிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக