செவ்வாய், 16 செப்டம்பர், 2014

DETAIL NEWS : சென்னை நீதிமன்றத்தில் TET வழக்கு விசாரணை

இன்று சென்னை நீதிமன்றத்தில் நீதியரசர்கள்அக்னிஹோத்ரி எம்.எம் சுந்தரேஸ் ஆகியோரடங்கிய அமர்வுக்குமுன் TET வழக்குகள் மீது வாதம் தொடர்ந்து நடைபெற்றது துவங்கியது.வாதிகளின் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் வாதிட்டனர்அரசு சார்பாக அட்வகெட் ஜெனரல் சோமயாஜி. வாதாடினார்

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்.5% தளர்வினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது,வெயிட்டேஜ் முறையினால் பாதிப்பு ஏற்பட்ட நிலை,பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் உள்ள ஆசிரியர் தேர்வு முறைகள், வேலைவாய்ப்பக பதிவுக்கு ,பணி அனுபவத்துக்கு வெயிட்டேஜ் கொடுக்கப்படவேண்டும்.ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்து, தகுதி மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் போன்ற வெவ்வேறு விதமான வாதங்களை முன்வைத்தனர். அனைவரும் ஒரே விதமான வாதங்களை முன்வக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு தரப்பில் ஆஜரான அட்வகெட் ஜெனரல் சோமயாஜி.5% தளர்வினை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. தற்போதைய வெயிட்டேஜ் முறை நீதிமன்றத்தின் பரிந்துரைப்பட்யே நடைமுறைப்படுதப்பட்டுள்ளது. அதிகம்பேர் தேர்ச்சிபெற்று காலிப்பணியிடங்கள் குறைவாக உள்ளநிலையில் பணிநியமனத்துக்கு வெயிட்டேஜ் முறை கடைபிடிக்கவேண்டியது அவசியம் என தெரிவித்தார்.

இருதரப்பினரும் நேரடி வாதங்களை முடித்த நிலையில்,இனி எழுத்துப்பூர்வ வாதங்களை அளிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.அதன் பின்னர் தீர்ப்பு வழங்கப்படும்.
தீர்ப்புக்குப் பின்னரே பணிநியமனம் நடைபெறக்கூடும் எனவும் அதுவரை பணிநியமனம் நடைபெற வாய்ப்பில்லை என நீதிமன்ற நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக