புதன், 24 செப்டம்பர், 2014

மங்கள்யான், இன்று செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில்நுழைந்தது.

இந்தியாவின் "பட்ஜெட்"விண்கலமான மங்கள்யான், இன்று செவ்வாய் கிரகத்தின்
சுற்றுப் பாதையில்நுழைந்தது. காலை 7.41மணிக்கு செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில்
நிலைநிறுத்தப்பட்டது.கடந்த 2013ல் செப்.,5ல் துவங்கிய 325 நாள் பயணம்
நிறைவடைந்து செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் வெற்றிகரமாக நுழைந்து பலபுதிய சாதனைகளையும் அது படைக்கும். செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் விண்கலத்தை நிலை நிறுத்த திரவ இயந்திரம்தொடர்ந்து 24 நிமிடங்கள் இயக்கப்பட்டது. நேற்றைய சோதனையின் மூலம்இரண்டு விஷயங்களை இஸ்ரோ சாதித்துள்ளது. அதாவது என்ஜினும், விண்கலமும் சரியாக
இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். 2வது மங்கள்யான் விண்கலத்தை செவ்வாயின் சுற்றுப்பாதைக்கு வெகு அருகே கொண்டு செல்ல முடிந்துள்ளது.பெரிய ராக்கெட் மோட்டார் தவிர, எட்டு சிறிய ரகதிரஸ்டர்களும் மங்கள்யானுடன் இணைக்கப்பட்டுள்ளன. பெரிய ராக்கெட் மோட்டார் செயல்படாமல் போனால், இந்த திரஸ்டர்களை இயக்கி அதன் உதவியுடன், செவ்வாய்கிரக சுற்றுப் பாதையில் மங்கள்யானை விஞ்ஞானிகள் நிலை நிறுத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

செவ்வாய்கிரகத்தின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் நிலை நிறுத்தப்படுவதால் அதன் குறைந்தபட்ச
தூரமானது செவ்வாயிலிருந்து 423 கிலோமீட்டர் உயரமாக இருக்கும். அதிகபட்ச தூரமானது 80,000கிலோமீட்டராக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகசுற்றுப் பாதைக்குள் நுழைந்த முதல் விண்கலம் என்ற பெருமையும் மங்கள்யானுக்கு கிடைகத்துள்ளது.இதை சரியாக செயல்படுத்திய நான்காவது நாடு என்ற பெருமையும்நமக்குக் கிடைத்துள்ளது. இதற்கு முன்பு அமெரிக்கா, ரஷ்யா ஆகியவைதான் இதை சாதித்துள்ளன.

நேரில் பார்வையிட்டார் பிரதமர் மோடி :மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் நிலைநிறுத்தப்படும்நிகழ்ச்சியை இஸ்ரோ விண்வௌ ஆராய்ச்சி மையத்தில் இருந்து நேரடியாக பார்வையிட்டார் நரேந்திரமோடி. அவருடன் கர்நாடக முதல்வரும் உடன் இருந்தார்.

பிரதமர் வாழ்த்து : செவ்வாய் சுற்றுவட்டபாதையில் மங்கயான் விண்கலம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட உடன்,அதற்காக பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக