திங்கள், 29 செப்டம்பர், 2014

திமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சார்பில் ஆஜராகிறார் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி

சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சார்பில் ஆஜராகிறார் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி. இதற்காக லண்டனில் இருந்து அவர் தாயகம் திரும்புகிறார். திங்கள்கிழமை அவர் இந்தியா வந்தடைகிறார்.

அவர் இங்கு வந்தடையும் முன்னர் ஜெயலலிதா சார்பில், ஜாமீன் வழங்கக் கோரியும் தண்டனைக்கு தடை விதிக்கக் கோரியும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கும்.

வருமானத்துக்கு பொருந்தாத வகையில் ரூ 66.65 கோடி சொத்துக் குவித்த வழக்கில், முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா குற்றவாளி என பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா அறிவித்தார்.

அவர் வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும், சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத ்தண்டனையும் ரூ.10 கோடி அபராதமும் விதித்தார்.

இதனைத் தொடர்ந்து நால்வரும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.