புதன், 24 செப்டம்பர், 2014

சென்னை ஐகோர்ட் பிறப்பித்தஉத்தரவுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மாற்று பணி வழங்கலாம் என்ற சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் 12ஆயிரத்து 600 பேர் கவலையுற்றுள்ளனர். தமிழகத்தில்பணியாற்றி வந்த 12,618 மக்கள் நலப்பணியாளர்கள்அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

கடந்த 3 ஆண்டு காலத்திற்கு மேலாகதங்களுக்கு பணி வழங்க வேண்டுமென்று அவர்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். அவர்களது வழக்கை பரிசீலித்த சென்னை உயர் நீதிமன்றம் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள 12,618 மக்கள் நலப்பணியாளர்களுக்கும் மாற்றுப் பணி வழங்க வேண்டுமென்றும், இருக்கும் காலியிடங்களில் அவர்களை நியமிக்க
வேண்டும் என்றும், வயது வரம்பை கணக்கிடாமல் கல்வித் தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கு அக்டோபர்31 ஆம் தேதிக்குள் பணி வழங்க வேண்டுமென்றும் தீர்ப்பளித்தது. அக்டோபர் 31க்குள் மாற்றுப்பணி வழங்காவிட்டால் பணி வழங்கப்படும் வரை அவர்கள் மக்கள் நலப்பணியாளராகப் பணி புரிந்தபோது கடைசியாகப் பெற்ற ஊதியத்தை அவர்களுக்கு மாதா மாதம் வழங்க வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மக்கள் நலப்பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதில், மக்கள் நலப்பணியாளர்கள்தற்காலிக ஊழியர்கள் என்பதால் அவர்களுக்கு மாற்றுப் பணி வழங்க முடியாது என்று தமிழக
அரசு தெரிவித்திருந்தது. இதனை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டது.
சென்னை ஐகோர்ட் பிறப்பித்தஉத்தரவுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக