"அரசு துவக்கப் பள்ளிகளில், 10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள, பள்ளிகளை மூட, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது; இதே நிலை நீடித்தால், அரசுப்பள்ளிகளே இருக்காது' என, ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.
தமிழக அரசு, சமீப காலமாக, கல்வித்துறையில் நவீன பாட முறைகளையும், இலவச திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது; இருந்தும், மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. பெற்றோகளின் ஆங்கிலக் கல்வி மோகமே, இதற்கு காரணம். இதனால், அரசுப்பள்ளிகளை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது உள்ள, 23,576 துவக்கப்பள்ளிகளில், 1268 பள்ளிகளை மூட, அரசு முயற்சித்து வருவதாக, ஆசிரியர் சங்கத்தினர் கவலை தெரிவிக்கின்றனர். அவர்கள் கூறுகையில்,"முதல் கட்டமாக, 10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள, பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு மூடப்பட உள்ளன. இப்பள்ளிகளில், தற்போது, இரண்டு ஆசிரியர்கள், ஒரு சத்துணவு மேலாளர், இரண்டு ஆயாக்கள் பணிபுரிகின்றனர். இப்பள்ளிகளை மூடிவிட்டு, அருகில் உள்ள பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஒன்றியத்திற்கு, மூன்று முதல், நான்கு பள்ளிகள் மூடப்படும். இதே நிலை நீடித்தால், அரசுப்பள்ளிகளே, இருக்காது' என்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக