புதன், 6 நவம்பர், 2013

டி.இ.டி., தேர்வு முடிவு 27,092 பேர் தேர்ச்சி

டி.ஆர்.பி., மூன்றாவது முறையாக, ஆகஸ்ட்டில் நடத்திய டி.இ.டி., தேர்வு முடிவை, நேற்றிரவு வெளியிட்டது. தேர்வெழுதிய, 6.6 லட்சம் பேரில், வெறும், 4.09 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். முந்தைய தேர்வை விட, 1.1 சதவீதம் பேர், கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்

ஆகஸ்ட், 17,18 தேதிகளில், டி.இ.டி., தேர்வுகள் நடந்தன. தமிழகத்தில், முதல் தாள் தேர்வை (இடைநிலை ஆசிரியர் பணி), 2.62 லட்சம் பேரும், இரண்டாம் தாள் தேர்வை (பட்டதாரி ஆசிரியர் பணிக்கானது), 4 லட்சம் பேரும் எழுதினர். விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவுகள் தயாராக இருந்தன. இரு வாரங்களாக, தேர்வு முடிவை, தேர்வர் எதிர்பார்த்து வந்த நிலையில், நேற்றிரவு, தேர்வு முடிவை, டி.ஆர்.பி., வெளியிட்டது.
 தேர்வு. தேர்வெழுதிய, 6.6 லட்சம் பேரில்,இத் தேர்வில் அதிக அளவில் தேர்ச்சிபெறுவர் என எதிர்பார்க்க்கப்பட்ட நிலையில் 27,092 பேர் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட, 60 சதவீத மதிப்பெண் மற்றும் அதற்கு அதிகமான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.இது , 4.09 சதவீதம்  தேர்ச்சி விகிதம்ஆகும் கடந்த ஆண்டு, அக்டோபரில் நடந்த தேர்வை விட, 1.1 சதவீதம் பேர், கூடுதாலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த தேர்வில், 2.99 சதவீதம பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக