தமிழக காவல்துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிறப்புக் காவல் இளைஞர் படைக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெறுகிறது.
இந்தத் தேர்வை 94 மையங்களில் 1.37 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
காவல்துறையின் பணிச் சுமையைக் குறைக்கவும், சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கவும் காவல்துறைக்கு துணையாக தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
மாவட்ட எஸ்.பி. மற்றும் காவல் ஆணையர்களால் உருவாக்கப்படும் இந்தப் படை, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துதல், கூட்ட நெரிசல்களை சரி செய்தல் போன்ற வேலைகளோடு இரவு ரோந்துப் பணியிலும் ஈடுபடுத்தப்படும் என தமிழக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர்களுக்கு பணிக் காலத்தில் மாதந்தோறும் ரூ.7500 ஊதியம், காவலர்கள் சிறப்பு அங்காடிகளை பயன்படுத்தும் உரிமை வழங்கப்படும். இது தவிர மானிய விலையில் அவர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருள்களும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.
இந்தப் படையில் நடப்பு ஆண்டில் பத்தாயிரம் பேரையும், அடுத்த ஆண்டு 15 ஆயிரம் பேரையும் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. படிப்படியாக இந்த படையில் இருப்போரின் எண்ணிக்கையை அதிகரித்து மொத்தம் சுமார் 50 ஆயிரம் பேரைக் கொண்டதாகக் கட்டமைக்க தமிழக காவல்துறை திட்டமிட்டுள்ளது. இந்தப் படைக்கு இளைஞர்களைத் தேர்வு செய்யும் பணியை தமிழ்நாடு சீருடையாளர் பணியாளர் தேர்வு குழுமம் செய்து வருகிறது.
இந்த குழுமம் அந்தந்த மாநகர, மாவட்டத்துக்கு தேவையான அளவில் இளைஞர்களை தேர்வு செய்ய அங்குள்ள எஸ்.பி. அளவிலான அதிகாரிகளை நியமித்துள்ளது.
எழுத்துத் தேர்வு: இளைஞர் படைக்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 10-ஆம் தேதி நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 94 மையங்களில் 1.37 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.
காலை 10 மணிக்குத் தொடங்கி மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெறும். தேர்வர்கள் அரை மணி நேரத்துக்கு முன்னதாக தேர்வு மையத்துக்கு வந்துவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 7 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது.
இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், உடல் தகுதி தேர்வுக்கு தகுதி பெற வேண்டும். உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களே, தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக