புதன், 2 மார்ச், 2016

தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் காலியாக உள்ள தமிழாசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

சென்னை தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் காலியாக உள்ள தமிழாசிரியர் பணியிடம், ஓட்டுநர் பணியிடம், அலுவலக உதவியாளர் உட்பட 5 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் ஒழிவாக உள்ள கீழ்க்காணும் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் 10.03.2016க்குள் வரவேற்கப்படுகின்றன.

தமிழாசிரியர் பணியிடம்: 2

*

ஊதிய ஏற்றமுறையில் அகவிலைப்படி மற்றும் பிற படிகளுடன் கூடிய இரண்டு முதல்நிலை தமிழாசிரியர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொதுப்போட்டி-1 (முன்னுரிமை பெற்றவர்), ஆதிதிராவிடர்-1 (அருந்ததியர்) (முன்னுரிமை பெற்றவர்) எனும் இன சுழற்சி முறையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான கல்வித் தகுதி (1) தமிழ் இளங்கலை பட்டப்படிப்பு (பி.ஏ) மற்றும் இளநிலைக் கல்வியியல் (தமிழ்)-(பி.எட்) (2) இளங்கலை தமிழ் இலக்கியம் (பி.லிட்) மற்றும் இளநிலைக் கல்வியியல் தமிழ் (பி.எட்)அதிகபட்ச வயது வரம்பு மற்றும் நடைமுறையிலுள்ள விதிகளுக்கிணங்கவும் தகுதிவாய்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விதிமுறைகளின்படி வயது வரம்பு தளர்வு செய்யப்படும்.

ஓட்டுநர் பணியிடம் - 1

*

தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் ரூ.5200-20200 + தரஊதியம் ரூ.2400 என்னும் ஊதிய ஏற்றமுறையில் அகவிலைப்படி மற்றும் பிற படிகளுடன் கூடிய ஒரு ஓட்டுநர் பணியிடத்திற்காகத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆதிதிராவிடர் (முன்னுரிமை பெற்றவர்) எனும் இன சுழற்சி முறையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான கல்வித் தகுதி 8 ஆம் வகுப்புத் தேர்ச்சி மற்றும் கண்கண்ணாடி இன்றி வெறும் கண்ணால் பார்க்கும் திறனும் மற்றும் காது நன்கு கேட்கும் திறன் உள்ளவராகவும் ஊர்தியை நன்கு இயக்கக் கூடிய நிலையில் உள்ளவராகவும் இருக்க வேண்டும். இலகுரக வாகனம் மற்றும் கனரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமைகள் பெற்றிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 45க்குள் இருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர் பணியிடம் - 2

*

சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் ரூ.4800-10000 + தரஊதியம், ரூ.1300 என்னும் ஊதிய ஏற்றமுறையில் அகவிலைப்படி மற்றும் பிற படிகளுடன் கூடிய 2 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொதுப்போட்டி – 1 (முன்னுரிமையற்றவர்), ஆதிதிராவிடர் - 1 (முன்னுரிமை பெற்றவர்) எனும் இன சுழற்சி முறையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான கல்வித் தகுதி 8 ஆம் வகுப்புத் தேர்ச்சி. அதிகபட்ச வயது வரம்பு 01.07.2015 அன்றுள்ளபடி - நடைமுறையிலுள்ள விதிகளுக்கிணங்கவும் தகுதிவாய்ந்தவர்கள் தமிழ்நாடு அரசின் விதிமுறைகளின்படி வயது வரம்பு தளர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

*

மேற்காணும் பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கடவுச்சீட்டு அளவிலான நிழற்படத்தை விண்ணப்பத்தில் ஒட்டி, பெயர், முகவரி, பிறந்தநாள், மதம், இனம், கல்வித்தகுதி, முன்னுரிமை கோருவதற்கான சான்று ஆகிய விவரங்களுடன் தேவையான சான்றிதழ்களின் ஒளிப்படிகளைச் சுய சான்றொப்பத்துடன் இணைத்து, வரும் 10.03.2016 பிற்பகல் 5.30 மணிக்குள் நேரிலோ, அஞ்சலிலோ கீழ்க்கண்ட அலுவலக

முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-28190412044-28190413 என்னும் தொலைபேசி எண்களில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். அலுவலக முகவரி, இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை-600 008" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.