ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த ஆக. 17, 18ம் தேதிகளில் இடைநிலை
ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு
நடந்தது. இதில் சுமார் 6.5 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதற்கான முடிவு
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியானது.
"டிவி' நிகழ்ச்சிகளை தவிர்த்ததால், ஆசிரியர் தகுதித்தேர்வில் மாநில முதலிடம் பெற முடிந்தது,'' என, தூத்துக்குடி சண்முகபுரத்தையை சேர்ந்த வினுஷா, 23, தெரிவித்தார். இவரது தந்தை ஆசிரியர் ராமச்சந்திரன். வினுஷா, 150 க்கு 126 மதிப்பெண் பெற்று மாநில முதலிடம் பெற்றார். அவர் கூறியதாவது தாய் ராஜேஸ்வரியின் வழி காட்டுதல் தான், மாநிலத்தில் முதலிடம் பெற வைத்தது. தந்தை இறந்து விட்டார். எனது மூன்று சகோதரிகள், ஆசிரியர்கள் தான். ஏரல் அருகே சிறுதொண்ட நல்லூர் அரசுப்பள்ளி; தூத்துக்குடியில் பி.ஏ., (ஆங்கில இலக்கியம்), பி.எட்., படித்தேன். தற்போது, எம்.ஏ., ஆங்கில இலக்கியம் படித்து வருகிறேன். கடந்த முறை ஆசிரியர் தகுதித்தேர்வில், அறிவியல் பிரிவு தேர்வு செய்தேன்; கடினமாக இருந்தது. அப்போது 88 மதிப்பெண் பெற்றேன். எனது தாய் தான், சமூக அறிவியல் பிரிவு தேர்வு செய்ய அறிவுறுத்தினார். ஆறு மாதங்கள் கடுமையாக உழைத்தேன்; "டிவி' பார்ப்பதை தவிர்த்தேன். இதனால், முதலிடம் பெற முடிந்தது. இவ்வாறு தெரிவித்தார்.
""தொடர் முயற்சியால் தான், டி.இ.டி., தேர்வில் மாநில இரண்டாம் இடம் பிடிக்க முடிந்தது,'' என, திண்டுக்கல் கோபால்நகரை சேர்ந்த பி.சத்யா தெரிவித்தார். முதல் தாள் தேர்வில் இவர், 150 க்கு 122 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தார். இடைநிலை ஆசிரியர் பயிற்சியை 2008 ல் முடித்த இவர், தொலைதூர கல்வி மூலம் பி.எஸ்சி., கணிதம் படித்தார். ஏற்கனவே இரண்டு முறை, டி.இ.டி., தேர்வு எழுதி, தேர்ச்சி பெறவில்லை. இவரது கணவர் ராமசாமி, ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். ஒரு வயதில் குழந்தை உள்ளது.சத்யா கூறியதாவது வீட்டு வேலைகளை முடித்த பின், ஓய்வு நேரங்களில் படிப்பேன். ஏற்கனவே இரண்டு முறை தேர்வு எழுதியது, அனுபவத்தை தந்தது. அதில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு இந்த முறை எப்படியும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் படித்தேன். சைக்காலஜி, தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலை அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களையும் முழுமையாக படித்ததால், அனைத்து பாடக் கேள்விகளிலும், சராசரியாக 20 மதிப்பெண்ணுக்கு மேல் எடுக்கமுடிந்தது.
படிக்கும் போதே முக்கிய குறிப்புக்களை எழுதி வைத்து, அவற்றை நினைவில் கொள்ள, மீண்டும் ஒரு முறை திருப்பி பார்ப்பது அவசியம். தொடர் முயற்சியால்தான், இந்த மதிப்பெண் எடுக்க முடிந்தது. விடாமுயற்சி
இருந்தால், அனைவரும் சாதிக்கலாம்,என்றார்.
ராமநாதபுரம்"கடந்த தேர்வில் ஒரு மதிப்பெண்ணில் ஏற்பட்ட தோல்வியே, என்னை சாதிக்க தூண்டியது' என, டி.இ.டி., தேர்வு இரண்டாம் தாளில், மாநில 2 ம் இடம் பிடித்த, ராமநாதபுரம் அபிராமம் மாணவி ராஜகாளீஸ்வரி கூறினார். இவரது தந்தை போஸ், சத்துணவு அமைப்பாளர். ராஜகாளீஸ்வரி, அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2; அண்ணாமலை பல்கலை தொலைதூரக்கல்வியில் பி.ஏ., (ஆங்கில இலக்கியம்); மானாமதுரையில் பி.எட்., முடித்தார். அவர் கூறியதாவது 2012 ஆகஸ்டில், டி.இ.டி., தேர்வை முதல் முறையாக எழுதினேன். 89 மதிப்பெண் எடுத்து தோல்வி அடைந்தேன். "ஆசிரியர் கனவு தகர்ந்தது' என நினைத்து கவலை அடைந்தேன். ஒரு மதிப்பெண்ணில் தோல்வி, பெற்றோர் கொடுத்த ஊக்கம் ஆகியவை என்னை சாதிக்க தூண்டியது. தினமும், 16 மணி நேரத்திற்கு குறையாமல் படித்தேன். மூன்று மாதங்கள், கடும் பயிற்சி செய்தேன். "நம்மால் முடியும்' என நினைத்தால் நிச்சயம் ஜெயிக்கலாம். ஆசிரியர் பணியில், திறமையான மாணவர்களை உருவாக்குவேன், என்றார்.
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக