தமிழ் இலக்கியம்-1
அறிவோம் அழகியத் தமிழை!
கபிலர்
* மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் பிறந்தவர் கபிலர். குறிஞ்சிக் கவி பாடுவதில் வல்லவர்.
* புலன் அழுகற்ற அந்தணன் என்று இவரைப் பாராட்டியவர் நப்பசலையார்.
* நல்லிசை வாய்மொழிக் கபிலன் என்று நக்கீரரால் பாராட்டப்பெற்றவர்.
* பரணர், இடைக்காடர், பாரி வள்ளல் ஆகியோரின் நண்பர்கள் கபிலர்.
* பாரி வள்ளலின் அவைப் புலவராகவும் கபிலர் திகழ்ந்தார்.
* பாரி மகளிரை அழைத்துச் சென்று இருங்கோவேள், விச்சுவக்கோ ஆகிய மன்னர்களிடம் அப்பெண்களை மணந்து கொள்ள வேண்டியவர் கபிலர்.
* வரலாற்றுச் செய்திகளை மிகுதியாக பாடிய பரணர் கபிலரின் நண்பர் ஆவார்.
கோவூர் கிழார்
* உறையூர் சோழருக்கும் (நெடுங்கிள்ளி) புகார் சோழருக்கும் (நலங்கிள்ளி) இடையில் போர் நிகழாமல் இருக்கத் தூது சென்றவர் கோவூர் கிழார்.
* மலையமான் திருமுடிக்காரியின் குழந்தைகளை கிள்ளி வளவன் யானைக்காலில் இரட்டுக் கொல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தியவர் இவர்.
சோறும் நீரும் இரு மருந்து என்று பாடியவர் கோவூர் கிழார்.
ஒளவையார்
* ஒளவை என்பதற்கு தாய் என்று பொருள் வழங்கப்படுகிறது. அதியமானின் அவைப்புலவர் மற்றும் நண்பராகத் திகழ்ந்தவர்.
* அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் இடையே தூது சென்றவர் ஒளவையார்.
* நீல மணிமிடற்று ஒருவன் போல மன்னுக பெரும என்று நெல்லிக்கனி தந்தபோது அதியமானை வாழ்த்தியவர் ஒளவையார்.
* இலக்கிய வரலாற்றில் நான்கு ஒளவையார்கள் உள்ளனர். 1. சுட்ட கனி வேண்டுமா, சுடாத கனி வேண்டுமா என்று கேட்ட புராண ஒளவையார். 2. அதியமானைப் பாடிய புறநானூற்று ஒளவையார். 3 ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் மூதுரை, நல்வழி போன்ற சிறுவர் நீதி நூல்களைப் பாடிய சோழர் கால ஒளவையார். 4.தனிப்பாடல் திரட்டில் உள்ள சில பாடல்களைப் பாடிய இடைக்கால ஒளவையார்.
பிசிராந்தையார்
* பாண்டிய நாட்டுப் புலவரான பிசிராந்தையார் தலைமுடி நரைக்காமல் இருக்கக் காரணம் உரைத்தவர் ஆவார்.
* கோப்பெருஞ்சோழனின் நண்பர் இவர். இருவரும் முகம் காணாமலே நட்பு கொண்டிருந்தனர்.
* கோப்பெருஞ்சோழனுடன் வடக்கிலிருந்து உயிர் துறந்தவர் பிசிராந்தையார் ஆவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக