அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக
ஒரு லட்சம் உயர் கல்வி வழிகாட்டி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களிடம் உயர் கல்வி வாய்ப்புகள் தொடர்பாக பரவலானவிழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்தப் புத்தகங்கள்
அச்சிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன்தெரிவித்தார்.
பொறியியல், மருத்துவம், கலை, அறிவியல் படிப்புகள், சட்டப் படிப்புகள்,கல்விக் கடன் பெறுவது தொடர்பான விவரங்கள், வேலைவாய்ப்புக்கு உதவும்படிப்புகள், மாணவர்களுக்கு பயனுள்ள இணையதளங்கள் உள்ளிட்ட விவரங்கள் இந்த வழிகாட்டி புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக