சனி, 24 மே, 2014

தருமபுரியைச் சேர்ந்த முதலிடம் பிடித்த 9 மாணவிகளின் எதிர்கால இலட்சியம் என்ன?

தருமபுரி மாவட்டத்தில் 3 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 9 மாணவிகள்,
எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் தலா 499 மதிப்பெண்கள் பெற்று மாநில
அளவில் முதலிடத்தைப் பிடித்தனர்.
தருமபுரி காந்திநகர் விஜய் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த
ர.அக்ஷயா, இ.சந்தியா, ரா.ஸ்ரீவந்தனா, பி.மைவிழி, செந்தில் மெட்ரிக்
மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ர.கயல்விழி, ஆ.தீப்தி, தருமபுரி பென்னாகரம்
சாலையில் உள்ள விஜய் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவிகள்
கோ.கிருத்திகா, அ.தீப்தி, பி.கே.ரேவதி அபர்ணா ஆகியோர் தலா 499
மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழில் 99 மதிப்பெண்களும், ஆங்கிலம், கணிதம், அறிவியல்,
சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண்களும் பெற்றனர்.

மாநில அளவில் முதலிடம் பெற்ற தருமபுரி காந்திநகர் விஜய்
வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவிகளைப் பற்றிய விவரம்:
தருமபுரி பாரதிபுரத்தைச் சேர்ந்த மாணவி அக்ஷயாவின் தந்தை ரமேஷ்
பிஎஸ்என்எல் ஊழியர். எதிர்காலத்தில் மருத்துவராக விரும்புவதாக
அக்ஷயா தெரிவித்தார்.
மாணவி இ.சந்தியாவின் தந்தை இளங்கோவன் கால்நடைத்
துறை உதவி இயக்குநராகவும், தாய் தேன்மொழி வேளாண்மைத் துறையிலும்
பணியாற்றி வருகின்றனர். தருமபுரி பாரதிபுரத்தில் வசித்து வரும்
சந்தியா இருதய மருத்துவராகி மக்களுக்கு சேவையாற்றப் போவதாக
தெரிவித்தார்.
மாணவி ஸ்ரீ வந்தனாவின் தந்தை ராமகிருஷ்ணன் ரயில்வே ஊழியர். தாய்
ஸ்ரீதேவி ஆசிரியை. எதிர்காலத்தில் மருத்துவராக ஆசைப்படுவதாக ஸ்ரீ
வந்தனா தெரிவித்தார். மாணவி பி.மைவிழியின் தந்தை பூவேடியப்பன்
ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். எதிர்காலத்தில் பொறியாளராகப்
போவதாக மைவிழி தெரிவித்தார்.
தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ர.கயல்விழியின்
தந்தை ரமேஷ்குமார் செல்பேசி கடையில் பணியாற்றி வருகிறார்.
கயல்விழி எதிர்காலத்தில் மருத்துவராகி மக்களுக்கு சேவையாற்றப் போவதாக
தெரிவித்தார். இதே பள்ளியைச் சேர்ந்த மற்றொரு மாணவி ஆ.தீப்தியின் தந்தை ஆனந்தன்,தாய் ராஜேஸ்வரி. எதிர்காலத்தில் நன்றாகப் படித்து மாவட்ட
ஆட்சியராகுவதே லட்சியம் என தீப்தி தெரிவித்தார்.
முதலிடம் பெற்ற தருமபுரி பென்னாகரம் சாலையில் உள்ள விஜய்
வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவிகளைப் பற்றிய விவரம்: மாணவி ரேவதி அபர்ணாவின் தந்தை பெரியகருப்பன் என்ற கண்ணன் தனியார்
பேருந்து நிறுவனத்தில் மேலாளராகவும், தாய் லதா தனியார் பள்ளியில்
ஆசிரியையாகவும் பணியாற்றி வருகின்றனர். ரேவதி அபர்ணா, மருத்துவராக
விருப்பம் தெரிவித்தார்.
மாணவி அ.தீப்தியின் தந்தை அனந்தராமன் விஜயரங்கன் பாலக்கோட்டில்
வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றி வருகிறார். எதிர்காலத்தில்
மருத்துவராக விரும்புவதாக தீப்தி தெரிவித்தார். மாணவி கோ.கிருத்திகாவின் தந்தை கோபி அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக உள்ளார். மருத்துவராகி மக்களுக்கு சேவையாற்றப் போவதாக கிருத்திகா தெரிவித்தார்.


Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக