புதன், 21 மே, 2014

முனுசாமியிடம் இருந்த அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது

அம்மா பிடித்து வைத்தால் பிள்ளையார்;தூக்கி எறிந்தால் சாணி' என,பொதுக்குழுவில் முழங்கிய,முனுசாமியிடம் இருந்த பதவிகள்அனைத்தும்,நேற்று அடுத்தடுத்து பறிக்கப்பட்டது. கடைசியில், மந்திரி பதவியில் இருந்தும்நீக்கப்பட்டார்.
அ.தி.மு.க.,வில், கட்சி நிர்வாகிகள்மீது வரும் புகார்களை விசாரிக்க,முதல்வர் ஜெயலலிதா, 2013 ஜூன், 6ம் தேதி, ஒழுங்கு நடவடிக்கை குழு அமைத்தார்.இக்குழுவில், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம்விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம்ஆகியோர், இடம் பெற்றனர். அவர்கள், 'நால்வர் அணி' என,அழைக்கப்பட்டனர். இக்குழுவினர், தொண்டர்கள் தரும் புகார்களை விசாரித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை தேவைப்பட்டால், பொதுச் செயலருக்கு பரிந்துரை செய்தனர். தேர்தல் பணியிலும், நால்வர் அணியினர் முக்கிய பங்காற்றினர்.

தேர்தல் முடிவில், தர்மபுரி,கன்னியாகுமரி தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளை, அ.தி.மு.க., கைப்பற்றியது. தர்மபுரியில், பா.ம.க,சார்பில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றார். இத்தொகுதிக்குட்பட்ட, பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிபெட்டி, ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளில், பா.ம.க., கூடுதல்ஓட்டு பெற்றுள்ளது. இங்கு அ.தி.மு.க., வெற்றிக்கு, வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த முனுசாமி,ஒத்துழைக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, அவரிடம் இருந்த உள்ளாட்சித் துறை பறிக்கப்பட்டு, முக்கியத்துவம் இல்லாத, தொழிலாளர் நலத் துறை அமைச்சராக, நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். நேற்று காலை, கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழுவில் இருந்தும் நீக்கப்பட்டார். பின்னர்,அவரிடம் இருந்த, மாவட்டச் செயலர் பதவி பறிக்கப்பட்டது. இச்செய்தி வெளியான சிறிது நேரத்தில், அவரிடம்
இருந்த அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது.

முனுசாமியிடம் இருந்த, அ.தி.மு.க., ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் பதவி, அமைச்சர் பதவி, மாவட்டச்செயலர் பதவி, ஒரே நேரத்தில் பறிக்கப்படாமல், ஒவ்வொன்றாக, சில மணி நேர இடைவெளியில் பறிக்கப்பட்டது,கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முனுசாமிக்கு ஒதுக்கப்பட்ட தொழிலாளர் நலத்துறை,தற்போது அமைச்சர் மோகனுக்கு கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டிருக்கிறது. சட்டதுறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டு, பதவி இழந்த 6வது நபர் முனுசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக