மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில்,TET/TRB pg தேர்வெழுதிய ஆசிரியர்கள் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள்எப்போது முடிவுக்கு வரும்? என எதிர்பார்ப்பில் உள்ளனர்
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்தல்நடத்தை விதிமுறைகளை தளர்த்துவது தொடர்பாக ஓரிரு நாளில்அறிவிப்பு வெளியாகலாம் என தமிழகத் தலைமை தேர்தல்அதிகாரி பிரவீண்குமார் கூறினார்.
மக்களவைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு கடந்த மார்ச் 5-ஆம்தேதி வெளியிடப்பட்டது. தேர்தல்தேதி அறிவிப்பு வெளியானதிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள்
அமலில் உள்ளன. இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள் புதிய அறிவிப்புகளை வெளியிடக்
கூடாது, அமைச்சர்கள் சொந்த பயன்பாட்டுக்கு அரசு வாகனங்களைப்பயன்படுத்தக் கூடாது, அரசு அதிகாரிகளின் கூட்டங்களை நடத்தக்கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. வாக்குப் பதிவு நிறைவடைந்த பிறகு, ஏற்கெனவே அறிவித்த
திட்டங்களை நிறைவேற்றுவது, ஒப்பந்தப்புள்ளிகளைக் கோருவது ஆகிய நடவடிக்கைகளுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்திருந்தது.நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் முழுமையாகவெளிவந்துள்ளன.
இந் நிலையில், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள்எப்போது முடிவுக்கு வரும் என தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம் கேட்டபோது, ""தேர்தல் நடத்தை விதிமுறைகள்முழுமையான அளவில் திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பை மத்திய தேர்தல்
ஆணையம்தான் வெளியிட வேண்டும். இது தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது'' என்றார்.
புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நாடு முழுவதும் தேர்தல்நடத்தை விதிமுறைகள் முழுமையாக தளர்த்தப்படும்என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக