சனி, 24 மே, 2014

தறிப்பட்டறை குழந்தைத் தொழிலாளி: பத்தாம்வகுப்பு தேர்வில் 4-ஆம் இடம்

தறிப்பட்டறை குழந்தைத் தொழிலாளி: பத்தாம்வகுப்பு தேர்வில் 4-ஆம் இடம்

தறிப்பட்டறை தொழிலாளியாக இருந்து 8 ஆண்டுகளுக்கு முன் மீட்கப்பட்ட
அகிலா இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 496 மதிப்பெண்கள்
பெற்று மாநிலத்திலேயே 4-ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இவரைப் போல் தமிழகம் முழுவதும் மீட்கப்பட்ட 10-க்கும் மேற்பட்ட குழந்தைத்
தொழிலாளர்கள் 500-க்கு 470 மதிப்பெண்ணுக்கு மேலும், 50-க்கும்
மேற்பட்டோர் 400 மதிப்பெண்ணுக்கு மேலும் எடுத்து சாதித்துள்ளனர். தமிழகம் முழுவதிலும் இருந்து மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள்11,000 பேர் 330 பள்ளிகளில் படித்து வருகின்றனர். இவர்களில் 390 பேர்அண்மையில் நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத் தேர்வை எழுதி, அதில் 370பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்றவர்களில் 27 பேர் 1,200-க்கு 1,000-க்கு மேலும், 66 பேர் 900-க்கு மேலும் மதிப்பெண் பெற்றும்தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதுபோல் பத்தாம் வகுப்புத் தேர்வை தமிழகம் முழுவதும் 800-க்கும்அதிகமான குழந்தைத் தொழிலாளிகள் எழுதி, அவர்களில் 720 பேர்தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் பலர் அதிக மதிப்பெண்பெற்று சாதனை படைத்துள்ளனர். சேலத்தைச் சேர்ந்த அகிலா 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில்4-ஆம் இடம் பெற்று சாதனைப் படைத்துள்ளார். இவர் சேலம் குமராபாளையத்தில் தறிப் பட்டறையிலிருந்து 8 ஆண்டுகளுக்கு முன் மீட்க்கப்பட்டவர்.
இதுகுறித்து அகிலாவின் ஆசிரியை ஏ.ஆர். சுமதி கூறியது: சேலம் குமாரபாளையத்தில் பெற்றோருடன் தறிப்பட்டறையில் பணியில்ஈடுபட்டிருந்த அகிலாவை 8 ஆண்டுகளுக்கு முன் மீட்டோம். 5-ஆம்வகுப்பு வரை குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளியில் படிக்க
வைத்தோம். அரசு உயர் நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு சேர்த்தோம். அப்போது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அவருடைய பெற்றோர்அகிலாவை ஆங்கில வழிப் பள்ளியில் சேர்க்கக் கோரினர். அதன்படி,குமாரபாளையத்திலுள்ள ரிலையன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்
சேர்த்தோம். இப்போது அவர் 496 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளார்.
இது எங்களுக்கும் பெருமையாக உள்ளது என்றார். இதுபோல் எடப்பாடியைச் சேர்ந்த தேன்மொழி 483 மதிப்பெண்ணும்,சேலத்தைச் சேர்ந்த பத்மப்பிரியா 482 மதிப்பெண்களும்
பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்களும் விசைத் தறி தொழிலில்
இருந்து மீட்கப்பட்டவர்கள். சேலத்தில் மட்டும் மொத்தம் 221 மீட்கப்பட்ட குழைந்தத் தொழிலாளர்கள்பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதியுள்ளனர். இவர்களில் 185 பேர்
தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 40 பேர் 400-க்கு மேல் மதிப்பெண்
பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தருமபுரியில் ஜருகு பகுதியில் கல்குவாரியிலிருந்து மீட்கப்பட்ட டி.சிவா 473, நாமக்கலில் விசைத்தறி பட்டறையிலிருந்து மீட்கப்பட்ட மாணவி விணு 465, காஞ்சனா 463, சுவர்ணசுதா 452 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். வேலூரில் பேரணாம்பட்டைச் சேர்ந்த மாணவி ஈமா 422, கிருஷ்ணகிரியில் செங்கல் சூளையிலிருந்து மீட்கப்பட்ட போச்சம்பள்ளியைச் சேர்ந்த எஸ்தர் 454 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் மீட்கப்பட்டகுழந்தைத் தொழிலாளிகள் 40 பேர் தேர்வு எழுதினர். இதில் 38 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக