நீதித்துறை பணியிடத்திற்கான எழுத்துத்தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
நீதித்துறை காலி பணியிடம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:– சென்னை ஐகோர்ட்டு பணிகளில் நீதிபதிக்கான நேர்முக உதவியாளர், நேர்முக உதவியாளர், உதவியாளர், கணினி இயக்குபவர், தட்டச்சர் ஆகிய பணியிடங்களில் உள்ள 268 காலி பணிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 23–
ந்தேதி எழுத்துத்தேர்வு நடந்தது. இந்த தேர்வில் 27,983 விண்ணப்பதாரர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் நீதிபதிக்கான நேர்முக உதவியாளர், நேர்முக உதவியாளர் மற்றும் தட்டச்சர் ஆகிய பணியிடங்களில் 3,631 விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எழுத்துத்தேர்வு முடிவு வெளியீடு
பணியிட ஒதுக்கீட்டுக்குரிய ஒவ்வொரு வகுப்பு பிரிவிலும் தெரிவு செய்யப்படுவதற்குரிய கடைசி விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண்களுக்கு ஒத்த மதிப்பெண்கள் பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திறனறித் தேர்வு நடைபெறும் நாள், நேரம் மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும். இதேபோன்று உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பதவிகளுக்கான நேர்முகத்தேர்விற்கு அனுமதிக்கப்பட்ட தகுதியினை கண்டறிய சான்றிதழ் சரிபார்ப்பிற்காக 390 விண்ணப்பதாரர்கள் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இணையவழி விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்களை சரிபார்ப்பதற்காக சான்றிதழ்களின் நகல்களை ஜூன் 13–ந்தேதிக்குள் அஞ்சல் வழியாக தேர்வாணையத்திற்கு அனுப்பவேண்டும்.
இணையதளத்தில் பார்க்கலாம்
சென்னை ஐகோர்ட்டு பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான திறனறித்தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in –ல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 2008–09 மற்றும் 2010–12 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு மீன்வள சார்நிலைப்பணியில் உள்ள மீன்வள உதவி ஆய்வாளர் மற்றும் 2009–10 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணியில் உள்ள மாநில பணிமனையின் உதவி பொறியாளர் பதவிகளுக்கான நேர்முகத்தேர்விற்கு அனுமதிக்கப்பட்ட தகுதி கண்டறிய சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியலும் www.tnpsc.gov.in –ல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sent from my iPad
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக