வெள்ளி, 30 மே, 2014

கால்நடை மருத்துவப்படிப்பில் சேர விண்ணப்பங்கள் பெற இன்று கடைசி நாள்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்குழு தலைவர் எம்.திருநாவுக்கரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:– கால்நடை மருத்துவம், உணவு தொழில்நுட்பம் மற்றும் கோழியின உற்பத்தி தொழில்நுட்ப இளநிலை பட்டப்படிப்புகளில் 2014–15–ம் ஆண்டு மாணவ சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த 12–ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகத்தின் 14 விற்பனை நிலையங்களில் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை கால்நடை மருத்துவம், உணவு தொழில்நுட்பம் மற்றும் கோழியின உற்பத்தி தொழில்நுட்ப இளநிலை பட்டப்படிப்புகளில் சேர 19 ஆயிரத்து 56 பேர் விண்ணப்பங்களை பெற்று சென்றுள்ளனர்.

விண்ணப்பங்கள் பெறுவதற்கு இன்று (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும். விண்ணப்பங்களை மாலை 5 மணி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடுத்த மாதம் (ஜூன்) 2–ந்தேதி மாலை 5.45 மணிக்குள் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்படும் விண்ணப்பங்களும் அடுத்த மாதம் (ஜூன்) 2–ந்தேதி மாலை 5.45 மணிக்குள் பல்கலைக்கழக இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக