ஆசிரியர் கல்வியைத் தனியார்மயமாக்குவது கல்வித் தரத்தை கடுமையாக பாதிக்கும் என்று கல்விக்கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கல்வி மேம்பாட்டுக் கூட்டமை ப்பு ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியிருப்ப தாவது:
தமிழ்நாட்டில் ஏற்கன வே 657 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தக்கல்வியா ண்டில் புதிதாக 40 தனியார் ஆசிரியர் கல்வி நிறுவனங்களைத் தொடங்க தமிழக அரசு அனுமதிவழங்க உள்ளது.தமிழ்நாட்டில் தற் போதேசுமார் 10 இலட்சம் பேர்ஆசிரியர் கல்விபடிப்பை முடித்துவிட்டு வேலைவாய்ப்புக்காக
காத்துக்கொண்டிருக்கின்றனர். இப்போதுள்ள ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் மூலம் ஆண்டுதோறும் சுமார்ஒரு இலட்சத்திற்கும் அதிக மானோர் ஆசிரியர் கல்விப் படிப்பை முடிக்கின்றனர். இவர்களில் ஆண்டுக்கு சுமார் 30 ஆயிரம் பேர் மட்டுமே தனியார் பள்ளிகளி லும், அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியர்பணிவாய்ப்பைப் பெறமுடிகிறது.இந்நிலையில் மேலும் புதிதாக 40 தனியார் ஆசிரி யர் கல்வி நிறுவனங்களுக்கு தமிழகஅரசு அனுமதி அளிப்பது அவசியமற்றது.பெரும்பாலும்வசதி வாய்ப்பற்றவர்களே வங்கிக் கடன் பெற்று ஆசிரியர் கல்விப்
படிப்பை படித்து வருகின்றனர்.
இந்தச் சூழ் நிலையில் ஆசிரியர்களுக் கான வேலைவாய்ப்பு மற்றும் தேவையான எண்ணிக் கையினர் பற்றி கவலைகொள்ளாமல் புற்றீசல் போல் இலட்சக்கணக்கில் ஆசிரியர் கல்விப் படிப்பை முடித்தவர்களை உரு வாக்குவது இளையதலைமுறையினரின் எதிர்கால வாழ்க்கையைச்சீரழிக்கும் செயலாகும்.
இதன்மூலம் தனியார் பள்ளிகளில் மிகக் குறைந்த ஊதியத்தில் ஆசிரியர்களை வேலைக்கு அமர்த்துவது, கொத்தடிமை ஆசிரியர்களை உருவாக்குவது போன்ற விரும்பத்தகாத நிலை மைகள் ஏற்படும். மேலும் தரமானஆசிரியர்களை உரு வாக்கத் தேவையானஆசி ரியர் பயிற்சிமுறை, ஆசிரியர் கல்விப்பாடத்திட்டம்ஆகியவற்றில் புதிய மாற்றங்களைச் செய்வதைப்புறந் தள்ளி விட்டு புதிதாக தனி யார் ஆசிரியர்கல்வி நிறு வனங்களுக்கு அனுமதிய ளிப்பது ஆசிரியர் கல்வியின் தரத்தை மேலும் பாழ்படுத்தும்.
கடந்தஇரண்டு ஆண்டு களில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 10 விழுக்காட்டிற்கும் குறைவான எண்ணிக்கையினரே தேர்ச்சி பெற்றுள்ளது ஆசிரியர்கல்வியின் தரம் தாழ்ந்துள்ளதையே காட்டுகிறது. எனவே தமிழக அரசு ஆசிரியர் கல்வியின் தரத்தை உயர்த்த ஆசிரியர் கல்வியை தனியார்மயமாக்குவதையும்வணிகமயமாக்குவதையும் தவிர்க்க வேண்டும். தரமான கல்வியை வழங்க தகுதியு ள்ள ஆசிரியர்களை உருவா க்க தமிழகஅரசு நடவடிக் கை மேற்கொள்ள வேண்டும் என்று கல்விமேம்பாட்டுக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சு.
மூர்த்தி கேட்டுக் கொண்டி ருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக