மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் தேசியஇளந்திரு விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த 8 சிறுவர்கள்தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அகில இந்திய அளவில் மேடைக்கலை, படைப்புக்கலை, அறிவியல் கலை,எழுத்துக்கலை ஆகியவற்றில் புதுமைகள் படைத்திடும் 9 வயது முதல் 16வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை ஆண்டுதோறும் தேர்வு செய்து தேசியஇளந்திரு விருது குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு ஜவஹர் சிறுவர் மன்றம் புதுமைகள் படைத்திடும் சிறந்த
குழந்தைகளை, புதுதில்லி தேசிய சிறுவர் மன்றத்தால் நடத்தப்படும் தேசியஇளந்திரு விருதுக்கான போட்டிகளுக்கு மாணவர்களை ஆண்டுதோறும்அனுப்பி வருகிறது. இந்த விருதுக்கான தேர்வுகள் முதலில் உள்ளூர் அளவிலும்,தொடர்ந்து தென் மண்டல அளவிலும் (தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி),இறுதியாக தேர்ந்தெடுக்கப்படுவோர் தேசிய அளவில் நடைபெறும்போட்டிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவர்.
2000-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு ஜவஹர் சிறுவர்மன்றம் சார்பில் மொத்தம் 26 மாணவர்கள் இவ்விருதினை பெற்றுள்ளனர். 2012-ஆம் ஆண்டு தமிழகத்தில் தேசிய சிறுவர் மன்றத்தில் இணைவு பெற்றுள்ள 21ஜவஹர் சிறுவர் மன்றங்களில் உள்ளூர் அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு,தமிழக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 76 மாணவர்கள் தென் மண்டல அளவிலானபோட்டியில் கலந்து கொண்டனர். அதில் தேர்வு பெற்ற 27 சிறுவர்கள் புதுதில்லியில் நடைபெற்ற தேசியஅளவிலான போட்டியில் கலந்து கொண்டனர். அதில் 8 சிறுவர்கள் 2012-ஆம் ஆண்டுக்கான தேசிய இளந்திரு விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அகில இந்திய அளவில் மொத்தம் 62 பேர் இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முதல் முறையாக ஒரே ஆண்டில்தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். 2012-ஆம் ஆண்டுக்கான தேசிய இளந்திரு விருது பெறுவோர் பட்டியல்:
1. அனந்திதா ராமச்சந்திரன், மேடைக்கலை (பரதநாட்டியம்), 10-ஆம் வகுப்பு, சர்
சிவசாமி கலாலயா மேல்நிலைப்பள்ளி, மயிலாப்பூர், சென்னை.
2. கமலாதேவி லிங்கா ரவீந்திரநாத், மேடைக்கலை (பரதநாட்டியம்),
11-ஆம்வகுப்பு, பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளி, கே.கே.நகர், சென்னை.
3. கே.முத்துக்குமாரசாமி, படைப்புக்கலை (கைவினை),
10-ஆம் வகுப்பு,செயின்ட் தாமஸ் மெட்ரிக் பள்ளி, பிராட்வே, சென்னை.
4. தீபரக்ஷனா, படைப்புக்கலை (ஓவியம்), 10-ஆம் வகுப்பு, அண்ணா ஆதர்ஷ்
மெட்ரிக் பள்ளி, அண்ணாநகர், சென்னை.
5. அனுபமா ரவிச்சந்திரன், எழுத்துக்கலை, 10-ஆம் வகுப்பு,
பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளி, நுங்கம்பாக்கம், சென்னை.
6. செஷாங் (பிளஸ் 2), எழுத்துக்கலை, பிளஸ் 2, சிஷ்யா மேல்நிலைப்பள்ளி,
ஒசூர், தருமபுரி மாவட்டம்.
7. தியாகராஜன் மனோ அரவிந்த், எழுத்துக்கலை, 9-ஆம் வகுப்பு,
ஏ.ஆர்.எல்.எம். மெட்ரிக் பள்ளி, கடலூர்.
8. நிகிலா ராமன், எழுத்துக்கலை, பிளஸ் 2, பி.எஸ்.பி.பி.மில்லினியம் பள்ளி,
கிருகம்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்.
தேசிய இளந்திரு விருது பெறும் மாணவர்களுக்கு குடியரசுத் தலைவர்
மாளிகையில் நடைபெறும் விழாவில் விருதுடன் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள
கிஷான் விகாஸ் பத்திரம், நினைவுப்பரிசு, சான்றிதழ் ஆகியவை குடியரசுத்
தலைவரால் விரைவில் வழங்கப்படவுள்ளது. மேலும் இந்த மாணவர்களுக்கு தமிழக அரசு தலா ரூ.10 ஆயிரம்நிதியுதவி வழங்க உள்ளது. இதே விழாவில் 2011-ஆம் ஆண்டு தேர்வு பெற்ற 3 பேருக்கும் விருதுகள்வழங்கப்படும்.
Sent from my iPad
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக