வெள்ளி, 23 மே, 2014

எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் - 2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு உடனடி சிறப்பு துணைத் தேர்வுகள் நடத்தப்படுகிறது.

எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் - 2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு உடனடி சிறப்பு துணைத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. தற்போது தேர்வு முடிவு கள் வெளியாகி உள்ள சூழ்நிலையில் எஸ்.எஸ்.எல்.சி சிறப்பு துணைத் தேர்வு ஜூன் மாதம் 23-ந் தேதி முதல் 30-ந் தேதி வரையிலும் பிளஸ் - 2 சிறப்புத் துணைத்தேர்வு ஜூன் 18-ந் தேதி முதல் 30-ந் தேதி வரையிலும் நடைபெறுகிறது. எஸ்.எஸ்.எல்.சி துணைத் தேர்வு ஜூன் 23-ந் தேதி தமிழ் முதல் தாள், 24-ந் தேதி தமிழ் இரண்டாம் தாள், 25-ந் தேதி ஆங்கிலம் முதல் தாள், 26-ந் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள், 27-ந் தேதி கணிதம், 28-ந் தேதி அறிவியல், 30-ந் தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடக்கிறது. தனித் தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் இன்றே வினியோகம் செய்யப்பட்டது. மற்றவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். எந்தவொரு பாடத்துக்கும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 26-ந் தேதி முதல் 31-ந் தேதி மாலை 5 மணி வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி மூலமாகவும், தனி தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக