மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில், கேட்கப்பட்ட தமிழ்
வினாக்களில், ஏராளமான பிழைகள் இருந்தன. இதனால், தேர்வர்கள் சிரமப்பட்டனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு, மே 21 ல் ஆசிரியர்
தகுதித்தேர்வு நடந்தது. 4,476 பேர் பங்கேற்றனர். தமிழ் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட
வினாக்களில், ஏராளமான பிழைகள் இருந்தன. 'டி சீரியல்' வினாத்தாளில்,
கேள்வி எண் 43 ல், 'பொய் என்பதன் அளபெடை' என, கேட்கப்பட்டிருந்தது. 'பொய்'என்பது அளபெடை சொல்லே இல்லை.
கேள்வி எண் 47 ல், 'முக்தி அடைந்த மாவட்டம் 12 தட்சின சித்திரம் என்பது'என, கேட்கப்பட்டிருந்தது. 'தட்சிண சித்திரம் என்பது' என்று இருக்க வேண்டும். அதில் குறிப்பிடப்பட்ட'முக்தி அடைந்த மாவட்டம் 12' என்ற தொடர் சம்பந்தமே இல்லாமல் இடம்பெற்றிருந்தது.கேள்வி எண்
48 ல், 'இலக்கத்தை குலைத்து விடும்' என, கேட்கப்பட்டு இருந்தது. அதில், 'இணக்கத்தை குலைத்து விடும்'என்று இருக்க வேண்டும்.
கேள்வி எண் 56 ல், தமிழ் எண்கள் தவறுதலாக இருந்தன. கேள்வி எண் 59 ல், இரட்டை கிளவி சொல் 'சலசல' என்பதற்கு பதிலாக,'சளசள' என, தவறுதலாக கேட்கப்பட்டிருந்தது.
இதனால் மாற்றுத் திறனாளிகள் சிரமம்அடைந்தனர்.திண்டுக்கல்லை சேர்ந்த தமிழாசிரியர் தியாகராஜன் கூறுகையில், "ஆசிரியர் தகுதித்தேர்விலேயே ஏராளமான பிழைகளுடன் கேள்விகள் கேட்டிருப்பது வேதனையாக உள்ளது," என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக