மதுரை காமராஜ் பல்கலையில், உதவி மற்றும் இணை பேராசிரியர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்குமாறு, ஐகோர்ட் கிளை, இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை காமராஜ் பல்கலை, தாழ்த்தப்பட்டோர் உயர்நிலை மற்றும்கடைநிலை பணியாளர்கள் நலச் சங்க செயலர், பார்த்தசாரதி தாக்கல் செய்த மனு:
மதுரை காமராஜ் பல்கலையில், ஆங்கிலம், இதழியல், அரசியல் அறிவியல் உட்பட
பல்வேறு துறைகளில், ஒன்பது உதவி பேராசிரியர்கள்; 17 இணை பேராசிரியர்கள் நியமனத்திற்கு, ஜன., 22ல், பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டார். ஒப்புதல் பெறவில்லை:அதில், 'பொதுசுழற்சி முறையில், தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்' என, உள்ளது.ஆதிதிராவிடர்கள், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு, பின்பற்றப்படவில்லை; கல்விக்குழுவின் ஒப்புதலும்பெறவில்லை.அனைத்துத் துறைகளிலும், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான, பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுக்குமாறு, 1993ல், அரசு உத்தரவிட்டது.உதவி மற்றும் இணைப்பேராசிரியர்கள் நியமனத்திற்கான நேர்காணல் முடிந்துள்ளது. நியமன உத்தரவு வழங்கும் நிலையில்,பல்கலை நிர்வாகம் உள்ளது. பதிவாளரின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். புதிய அறிவிப்பு வெளியிட்டு, ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை பின்பற்றி, நியமனம் மேற்கொள்ள உத்தரவிடவேண்டும்.இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டுஇருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள், ஆர்.கருப்பையா, வி.எஸ்.ரவி பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது.நீதிபதிகள்உத்தரவு:பணி நியமனத்திற்கு, தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதிப் பட்டியலை, வெளியிடக் கூடாது. ஜூன் 4வரை, பணி நியமன உத்தரவு வழங்கக் கூடாது. பல்கலை துணைவேந்தர், பதிவாளருக்கு 'நோட்டீஸ்'அனுப்பப்படுகிறது.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக