பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தருமபுரி மாவட்டம் கடந்தாண்டைக்காட்டிலும் 6.54 சதக் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் 36 அரசுப்பள்ளிகள் 100 சதத் தேர்ச்சி பெற்றுள்ளன. தருமபுரி மாவட்டத்தில் அரசு, உதவி பெறும் மற்றும் மெட்ரிக் என 285பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் இருந்து 13,493 மாணவர்கள், 11,796மாணவிகள் என 25,289 பேர் தேர்வெழுதினர். இதில் 12,296 மாணவர்கள், 10,885 மாணவிகள் என 23,181 பேர்தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 91.13 சதமும், மாணவிகள் 92.28 சதம் பேர்தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 91.66 சதமாகும்.
தருமபுரி மாவட்டத்தைப் பொருத்தவரையில் கடந்தாண்டு நடைபெற்ற பத்தாம்வகுப்பு பொதுத் தேர்வில் 85.12 சதம் தேர்ச்சி பெற்றிருந்ததே அதிகபட்சமாகஇருந்தது. இந்த நிலையில், நிகழாண்டில் 6.54 சதம் தேர்ச்சி கூடுதல் பெற்று 25-வது இடத்தில் இருந்து 19-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
அதேபோல, கடந்தாண்டில் 14 அரசுப் பள்ளிகள் 100 சதத் தேர்ச்சி பெற்றிருந்தநிலையில் நிகழாண்டில் 36 அரசுப் பள்ளிகள், 58 தனியார் பள்ளிகள் 100 சதத்தேர்ச்சி பெற்றுள்ளன.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கே.பி.மகேஸ்வரி கூறியது: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களின் கடினமான உழைப்புதான் முக்கியக் காரணம். மேலும், பின்தங்கிய மாவட்டத்தை கல்வியால்தான் முன்னுக்கு கொண்டு வர முடியும் என்ற நோக்கில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின்கலந்தாய்வுக் கூட்டம் நடத்தியது, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்
சிறப்பு வகுப்புகள் நடத்தியது போன்றவைதான் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க முக்கியக் காரணமாக அமைந்தது என்றார் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக