வேலூர் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 495 மதிப்பெண்எடுத்து அரசுப் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற கெஜல்நாயக்கன்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர்.நவீன்குமாருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான 4 சவரன் தங்கச் சங்கிலியை வேலூரில் டீக்கடைக்காரர் மகேஸ்வரன், ஆட்சியர் முன்னிலையில்வழங்கினார். அதை மாணவரின் தாயார் பெற்றுக் கொண்டார். அத்துடன் மாவட்டத்தில் 2 மற்றும் 3-ஆம் இடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவர் 5 பேருக்கு வெள்ளி நாணயங்கள் மற்றும் தலா ரூ.1000 ரொக்கப் பரிசு ஆகியவற்றையும் ஆட்சியர் இரா.நந்தகோபாலிடம் டீக்கடைக்காரர்
மகேஸ்வரன் வழங்கினார்.
வேலூர் பை-பாஸ் சாலையில் டீக்கடை நடத்தி வரும் மகேஸ்வரன், கடந்த சிலஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் சிறப்பாக படித்து வரும் ஏழை எளிய மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை மற்றும் ஊக்கத்தொகை அளித்து வருகிறார். தான் படிக்க முடியாத சூழலை உணர்ந்து, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இத்திட்டத்தை செயல்படுத்தி வரும் மகேஸ்வரன், இவ்வாண்டு 10-ஆம் வகுப்பில் முதலிடம் பெறும் மாணவருக்கு 4 சவரன் தங்கச் சங்கிலி பரிசாக வழங்கப்படும் என அறிவித்து அந்த சங்கிலியை தயார்நிலையில் வைத்திருந்தார். வெள்ளிக்கிழமை காலை தேர்வு முடிவுகள்
வந்ததும், அவர் உறுதியளித்தபடி பரிசுகளை ஆட்சியர் முன்னிலையில் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாநில அளவில் 2 மற்றும் 3-ஆம் இடம் பெற்ற 5 மாணவர்கள், மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பெற்ற 16மாணவர்களுக்கு ஆட்சியர் பரிசு வழங்கி மற்றும் பாராட்டு தெரிவித்தார். அத்துடன் மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி விழுக்காட்டை அளித்த 30 அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் பாராட்டு பெற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக