செவ்வாய், 17 மே, 2016

அரசுப் பள்ளியில் பயின்று மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள்


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் அரசுப் பள்ளியில் பயின்று மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் விவரம் பின்வருமாறு:

மாநிலத்தில் முதலிடம் பிடித்தவர், ஆர்.சரண்யா - 1179/1200 - காஞ்சிபுரம் ஏகானம்பேட்டை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி. (தமிழ் வழியில் பயின்றவர்)

மாநிலத்தில் இரண்டாமிடம் பிடித்தவர், கே.சிவசத்யா - 1178/1200 - கோவை ஒத்தக்கல்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி

மாநிலத்தில் மூன்றாம் இடம் பிடித்தவர், எஸ்.அனு - 1177/1200 - அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரிய காஞ்சிபுரம்.