நாளை காலை, 10:00 மணிக்குபிளஸ் 2 தேர்வு முடிவுகள்,
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை காலை, 10:00 மணிக்கு, தேர்வுத் துறையின்,
நான்கு இணையதளங்களில் வெளியிடப்படுகிறது. 8.26 லட்சம் மாணவ, மாணவியர்,
தேர்வு முடிவை, ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடந்தமார்ச், 3ம் தேதி முதல் 25ம் தேதி வரை, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்தது. 2,242 மையங்களில்நடந்த தேர்வை, 8.26 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர்.இதன் முடிவை, நாளை காலை, 10:00 மணிக்கு, தேர்வுத் துறை வெளியிடுகிறது. தேர்வுத் துறையின், நான்கு இணையதளங்களில், தேர்வு முடிவு வெளியிடப்படுவது உடன், நூலகங்கள், அந்தந்தபள்ளிகளிலும், தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது. இணையதளங்களில், தேர்வு முடிவை பார்க்க, பதிவு எண்களுடன், பிறந்த தேதியை பதிவு செய்ய வேண்டும். கடந்த ஆண்டு, 88.1 சதவீத மாணவ, மாணவியர்தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டும், இதே அளவிற்கோ அல்லது 2 சதவீதம் கூடுதலாகவோ தேர்ச்சி இருக்கலாம்
என, எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு முடிவு வெளியாகும் இணையதள முகவரிகள்:
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக