வெள்ளி, 2 மே, 2014

கால்நடை மருத்துவப்படிப்பில் சேர விண்ணப்பம் 12– ந்தேதி முதல் வினியோகிக்கப்பட உள்ளது.

கால்நடை மருத்துவப்படிப்பில் சேர விண்ணப்பம் 12– ந்தேதி முதல் வினியோகிக்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்க ஜூன் 2–ந்தேதி கடைசி நாள். கால்நடை மருத்துவப்படிப்பிற்கு விண்ணப்பம் தமிழ்நாட்டில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரிகளில் கால்நடை மருத்துவம், உணவுத்தொழில்நுட்பம், கோழியின உற்பத்தி தொழில்நுட்ப இளநிலைபட்டப்படிப்புகளில் சேர 12–ந்தேதி முதல் விண்ணப்பம் கொடுக்கப்பட உள்ளது. விண்ணப்பம் அனைத்து வேலை நாட்களிலும் 30–ந்தேதி வரை கொடுக்கப்படும். விண்ணப்பிக்க ஜூன் 2–ந்தேதி கடைசி நாள்.
விண்ணப்ப படிவம், சென்னையில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி, மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், நாமக்கல்லில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி ஸ்ரீபுரம் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோவை கால்நடை மருத்துவப்பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவப்பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், வேலூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,விழுப்புரம் வி.மருத்தூர் கால்நடைமருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மையம் உள்பட 12 இடங்களில் விண்ணப்பம் கொடுக்கப்பட உள்ளது. விண்ணப்பத்தின் விலை ரூ.600 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.300
அயல்நாடு வாழ் இந்தியர்கள், அயல்நாட்டினர், காஷ்மீரில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் ஆகியோருக்கு சில இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் விண்ணப்பித்த பிறகு ரேங்க் பட்டியல் ஜூன் மாதம் 3–வது வாரத்தில் வெளியிடப்பட இருக்கிறது. அதன் பின்னர் கலந்தாய்வு நடத்தப்படும். இந்த தகவலை தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக