22,374 வாக்குகளில் சரித்திர சாதனையைத் தவறவிட்ட மோடி
வதோதரா தொகுதியில் அபார வெற்றி பெற்ற பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 22,374 வாக்குகளில் தேர்தல் சாதனையைத் தவறவிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தல் சரித்திரத்தில், ராம்விலாஸ் பாஸ்வான், சிபிஎம் கட்சியின் அனில் பாசுவுக்கு அடுத்தபடியாக மோடி அதிகபட்ச வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற வேட்பாளராகத் திகழ்கிறார்.
5 லட்சம் வாக்குகளுக்கும் மேல் பெற்று வென்ற 3வது வேட்பாளர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சிபிஎம். வேட்பாளர் அனில் பாசு மேற்குவங்கத்தின் ஆரம்பாக் தொகுதியில் 2004ஆம் ஆண்டு தேர்தலில் 5,92,502 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதே இந்திய சாதனையாக இருந்து வருகிறது.
இந்தத் தேர்தலில் நரேந்திர மொடி வதோதராவில் 5,70,128 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஆனால் சாதனையை முறியடிக்கத் தவறிவிட்டார். இவருக்கும் அனில் பாசுவுக்கும் இடையிலான வித்தியாசம் சுமார் 22,374 வாக்குகள்.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக