வெள்ளி, 29 மே, 2015

கல்வி:முன்னேற்றப்பாதையில் தருமபுரி மாவட்டம் முதன்மைக்கல்வி அலுவலர் பெருமிதம்

பொறியியல் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் குறையுமா?


பொறியியல் படிப்புக்கு , இதுவரையில் ஒரு லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதால், பொறியியல் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் குறையுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்ற ஆண்டு பொறியியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 75 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர். ஏறத்தாழ - ஒரு லட்சம் இடங்கள் காலியாக இருந்தன. கடந்த ஆண்டுடன் ஒப் பிடும்போது, விண்ணப்ப விற்பனை மந்தம்தான். கடந்த ஆண்டு 2 லட்சத்து 13 ஆயிரம் விண்ணப் பங்கள் விற்பனையாயின. தற்போது, அண்ணா பல்கலைக்கழ கம் நீங்கலாக மற்ற இடங்களில் விண்ணப்ப விற்பனை நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 785 விண்ணப்பங்கள் விற்பனையாகி இருக்கின்றன.

நேற்று மாலை 5 மணி நிலவரப்படி, 1,20,000-க்கும் மேற்பட்டவர்கள் பூர்த்தி செய் யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப் பித்துள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரி யர் வி.ரைமன்ட் உத்தரிய ராஜ் தெரிவித்தார். விண்ணப்பிக்க இன்று ஒரு நாள் மட்டுமே இருப்பதால் விண்ணப் பிப்பவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தை எட்டுவது சந்தேகம்தான்.

பொதுவாக, கலந்தாய்வு தொடங்கியதும், முதலில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அதன் உறுப்புக் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், சென்னையைச் சுற்றியுள்ள புகழ்பெற்ற தனியார் பொறியியல் கல்லூரிகள் முதல் நிலை, தனியார் கல்லூரிகள் 2-ம் நிலை என்ற வரிசையில்தான் இடங்கள் நிரம்பும். இந்த கல்லூரிகளில் காலியிடங்கள் முடிந்த பின்னரே இதர கல்லூரிகளை மாணவர்கள் தேடுவார்கள்.

கடந்த ஆண்டு ஒரு லட்சம் இடங்கள் நிரம்பவில்லை. தற் போதைய சூழலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு காலி இடங்களின் எண்ணிக்கை 1,20,000-த்தை தாண்டக்கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இதற்கான காரணங்கள் குறித்து கல்வி ஆலோசகரான பேராசிரியர் மூர்த்தி செல்வகுமரன் கூறியதாவது:

''அண்மைக் காலமாக பொறியி யல் படிப்பில் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள்தான் அதி களவில் சேருகிறார்கள். அவர்கள் கலந்தாய்வு மூலம் ஒதுக்கீடு பெற்றால்தான் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்விக் கட்டண சலுகையைப் பெற முடியும். எனவே, கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கிறார்கள்.

கலந்தாய்வு மூலம் ஒதுக்கீடு பெற்று தனியார் கல்லூரிகளில் சேர்ந்தாலும், நிர்வாக ஒதுக்கீட் டின் கீழ் சேர்ந்தாலும் கட்ட ணம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. அப்படி இருக்கும் போது பின்னர் எதற்காக விண் ணப்பித்துவிட்டு கலந்தாய்வுக்கு போய்வர வேண்டும் என்ற எண் ணம் மாணவர்களுக்கும், அவர் களின் பெற்றோருக்கும் மேலோங்கி வருகிறது. இப்போது கூட தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை மும்முரமாக நடந்து வருகிறது.

அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேரும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்விக் கட்டணமாக அரசு ரூ.40 ஆயிரம் வழங்குகிறது. அதே மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் சேர்ந்தால் ரூ.70 ஆயிரம் கிடைக்கும்.

இவ்வளவு தொகை கிடைப் பதால், இடங்கள் நிரம்பினாலே போதும் என்று கருதும் சாதாரண மான கல்லூரிகள் "விடுதி இலவ சம்" என்று சொல்லி எஸ்சி, எஸ்டி மாணவர்களை ஈர்க்கின்றன. இதன் காரணமாகவும், அந்த வகுப் பைச் சேர்ந்த மாணவ-மாணவி கள் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரவே ஆர்வம் காட்டுகிறார்கள்.

கடந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் ஏறத்தாழ ஒரு லட்சம் இடங்கள் (அரசு ஒதுக்கீடு) காலியாக கிடந்தன. தற்போதைய நிலையைப் பார்க்கும்போது இந்த ஆண்டு கூடுதலாக 20 ஆயிரம் இடங்கள் (மொத்தம் 1.20 லட்சம்) காலியாக இருக்கும்போல் தெரிகிறது.

அதேபோல், கட் ஆப் மதிப் பெண்ணும் கடந்த ஆண்டை விட 1 முதல் 1.5 மதிப்பெண் வரை குறைய வாய்ப்பிருக்கிறது.''

இவ்வாறு அவர் கூறினார்.

மொத்த பொறியியல் கல்லூரிகள் - 538

கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் உத்தேச இடங்கள் - 1.8 லட்சம்

இதுவரை பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் - 1.20 லட்சம்



இந்தியாவிலேயே முதல் முறையாக மேற்கு வங்கத்தில் திருநங்கை ஒருவர் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்


மனாபி பானர்ஜி. | படம்:ராய்ட்டர்ஸ்.
மனாபி பானர்ஜி. | படம்:ராய்ட்டர்ஸ்.

இந்தியாவிலேயே முதல் முறையாக மேற்கு வங்கத்தில் திருநங்கை ஒருவர் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மாணவர்கள், பேராசிரியர்கள், அதிகாரிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மனாபி பானர்ஜி.. இந்தப் பெயர் இப்போது மேற்குவங்கம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிரபலமாகி விட்டது. சமூக வலைதளங்களில் மனாபிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இவர் ஒரு திருநங்கை. ஆனால், படித்து கல்லூரி பேராசிரியரானார். அதன்பின் ஆயிரமாயிரம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணியில் ஈடுபட்டார். இவரது சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், கிரிஷ்நகர் பெண்கள் கல்லூரி முதல்வராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் கல்லூரி முதல்வர் பதவிகளுக்கு தகுதியுள்ளவர்களை தேர்வு செய்யும் கல்விக் குழுவின் தலைவர் தீபக் கே.கர் கூறும்போது, "கிரிஷ்நகர் பெண்கள் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள மனாபி, ஜூன் 9-ம் தேதி பொறுப்பேற்பார். கடந்த 20 ஆண்டுகளாக கல்லூரி பேராசிரியராக மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார். அவருக்கு சிறந்த நிர்வாக அனுபவமும் உள்ளது. வழக்கமான நடைமுறைகளின்படிதான் தேர்வு நடந்தது. அதன்பின், ஒருமனதாக மனாபியை முதல்வராக தேர்ந்தெடுத்தோம்" என்றார்.

திருநங்கைகளின் உரிமைகளுக்காக செயல்பட்டு வரும் 'மித்ரு அறக்கட்டளை' இயக்குநர் ருத்ராணி செட்ரி கூறும்போது, "எங்களுக்கு இது பெருமைப்பட்டுக் கொள்ளும் நேரம். மூன்றாம் பாலினத்தவர்களை மக்கள் ஏற்றுக் கொள்ள தொடங்கி விட்டனர். மனாபியை முதல்வராக நியமித்ததற்கு ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டும்" என்றார்.

திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவர்களாக சட்டப்பூர்வமாக அங்கீகரித்து உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அதன்மூலம் சிறுபான்மையினர் அந்தஸ்தும், கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதார திட்டங்களில் முன்னுரிமையும் இவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பின், சில கல்லூரிகளில் சேர்க்கை விண்ணப்பத்தில் மூன்றாம் பாலினத்தவர் என்று குறிப்பிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

தற்போது விவேகானந்தா சடோபார்ஷிகி மகாவித்யாலா கல்லூரியில், பெங்காலி பேராசிரியராக உள்ள மனாபி பானர்ஜி, ஜூன் 9-ம் தேதி கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார்.

இந்நிலையில், மனாபி பானர்ஜி தான் முதல்வராகப் பணிபுரியப் போகும் கிரிஷ்நகர் கல்லூரிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்றார். அவருடன் மனாபியின் வளர்ப்பு மகன் தேபேசிஷ் மனாபிபுத்ரோ, திருநங்கை தோழி ஜோதி சமந்தா ஆகியோரும் சென்றனர்.அங்கு பேராசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் மனாபியை உற்சாகத்தோடு வரவேற்றனர்.

திருநங்கைகளின் பரிதாப நிலை குறித்து மனாபி கூறியதாவது:

திருநங்கைகள் சந்திக்கும் பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றை தீர்க்க நிறைய மாற்றங்கள் வர வேண்டும்.குறிப்பாக உடல்ரீதியாக மாற்றங்கள் ஏற்பட்டு தவிக்கும் போது, பெரும்பாலான பெற்றோர் தங்கள் மகனுக்கு மனரீதியான பிரச்சினை என்றே நினைக்கின்றனர்.

பாலின மாற்று அறுவை சிகிச்சை பலருக்கு கனவாக இருக்கிறது. ஆனால், ஒரு சிலருக்கே அந்த அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிகிறது. இந்தப் பிரச்சினைகளால் சிக்கித் தவிக்கும் பல சிறுவர்களை சந்தித்திருக்கிறேன். அவர்களுக்கு பெற்றோரிடம் இருந்து ஆதரவு கிடைக்கவில்லை. பெற்றோரின் ஒப்புதல் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்ய அவர்களால் முடியவில்லை. அதனால், குழந்தை பிறப்பை தடுக்கும் மாத்திரைகளை உட்கொள்ள தொடங்கி விடுகின்றனர். அதன்மூலம் ஈஸ்ரோஜன் தங்களை பெண்களை போல் பாவித்துக் கொள்ள உதவும் என்று நம்புகின்றனர். ஆனால், அந்த மாத்திரைகள் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. இவ்வாறு மனாபி கூறினார்.

 

தன்னம்பிக்கை இருந்தால் வாழ்வில் குறையொன்றுமில்லை


மோனிகா மோர்| படம்: சிறப்பு ஏற்பாடு.
மோனிகா மோர்

தன்னம்பிக்கை இருந்தால் வாழ்வில் குறையொன்றுமில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் தனது இரண்டு கைகளையும் இழந்த பின்னரும் பிளஸ் 2 தேர்வில் 63% மதிப்பெண் பெற்றுள்ளார் மும்பை இளம் பெண் ஒருவர்.

மோனிகா மோர் (18). 2014 ஆண்டு தொடக்கம் தனது கைகளை பறித்துக் கொள்ளும் என அவர் அறிந்திருக்கவில்லை. 2014 ஜனவரி மாதத்தில் ஒரு நாள். மும்பை கட்கோபர் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலுக்காக காத்துக்கொண்டிருந்தார் மோனிகா மோர். ரயிலில் ஏற முயற்சித்தபோது அவர் பிளாட்பாரத்தும் ரயிலுக்கும் இடையேயான குறுகிய இடைவெளியில் தவறி விழுந்தார். ஆயிரக்கணக்கான பயணிகள் கண் முன் அவரது கைகள் இரண்டும் ரயில் சக்கரங்களில் சிக்கி துண்டாகின.

மொத்த ரயில் நிலையமுமே அதிர்ச்சியில் இருந்த அந்த வேளையில், அங்கே காத்திருந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் விரைந்து செயல்பட்டு மோனிகாவை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவரது கைகள் மீண்டும் பொருத்தும் நிலையில் இல்லை. அளவுக்கு அதிகமாக சிதைந்திருந்தது.

மும்பை கெம் மருத்துவமனையில் 6 மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்றார். அவரது சிகிச்சைக்கு கிரேட்டர் மும்பை முனிசிபல் நிர்வாகம் ரூ.23 லட்சம் நிதியுதவி அளித்தது.

அதனைக் கொண்டு ஜெர்மன் நிறுவனமான ஓட்டோ போக் தயாரித்த செயற்க்கௌ கைகள் மோனிகாவுக்கு பொருத்தப்பட்டது. பேட்டரியால் இயங்கும் அந்த செயற்கை கைகள் அதிநவீனமானவை.

அந்தக் கைகளைக் கொண்டு மோனிகா வழக்கம்போல் எழுதலாம், கணினியை இயக்கலாம், சாப்பிடலாம், தண்ணீர் டம்ப்ளரை எடுக்கலாம், இன்னும் சிற்சில வேலைகளை செய்துகொள்ளலாம்.

செயற்கை கைகளை பொருத்தப்பட்ட நிலையில் மோனிகா தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார். மகாராஷ்டிரா மாநில உயர்கல்வித் துறை நடத்திய பிளஸ் 2 தேர்வில் மோனிகா 63% மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றி குறித்து மோனிகா கூறும்போது, "நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தேர்வெழுத எனக்கு உதவிய எனது தோழி ஐஸ்வர்யாவுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

வாழ்க்கையில் எதை இழந்தாலும் நம்பிக்கையை இழக்கக்கூடாது என்பதற்கு மோனிகா ஓர் எடுத்துக்காட்டு.

 

மனதில் உறுதியோடும், தெளிந்த எண்ணங் களோடும் இலக்கு நோக்கிப் பயணித்தால் வெற்றி வசப்படும்


கோவையில் வணிகவரித் துறை உதவி ஆணையராகவும், இலக்கிய தளத்தில் குறிப்பிடத்தக்க படைப் பாளியாகவும், இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் மேடைப் பேச்சாளராகவும் பன்முகம் காட்டிவரு பவர் சென்னிமலை தண்டபாணி.

ஏழு அண்ணன்கள், ஒரு அக்கா கொண்ட பெரிய குடும்பத்தில் கடைசிக் குழந்தையாய் பிறந்தவர். 6 மாதக் குழந்தையாக இருந்த போது, இளம்பிள்ளை வாதத்தால் 2 கால்களும் செயலிழந்தன. 6 வயதில் தந்தை இறந்துவிட, பெரிய அண்ணனின் உதவியோடு படித்து, இன்றைக்கு உயர்ந்த நிலைக்கு வந்துள்ளார். 'மனதில் உறுதியோடும், தெளிந்த எண்ணங் களோடும் இலக்கு நோக்கிப் பயணித்தால் வெற்றி வசப்படும்' என்பதையே தன் வாழ்வியல் மந்திரமாக கொண்டுள்ள கவிஞர் சென்னிமலை தண்டபாணி தனது அனுபவத்தை  பகிர்ந்துகொள்கிறார்..

''பிறந்தது படித்தது எல்லாமே ஈரோடு மாவட்டம் சென்னிமலை. புத்தக வாசிப்பு என்பது சிறுவயதிலேயே எனக்கு மிகவும் பிடித்த மான ஒன்று. அப்போதே கவிதைகளும் எழுதுவேன். பாவேந்தர் பாரதிதாசனையும், வங்கக்கவி தாகூரையும் படித்த பின்னால், சந்தத்தோடு கூடிய இசைப்பாடல் களையும் எழுதத் தொடங்கினேன்.

படிக்காத நேரம் போக மற்ற நேரங்களில் வானொலி கேட்பது வழக்கம். முன்பெல்லாம் கோவை வானொலியில் அடிக்கடி கவிஞர்கள் சிற்பி, புவியரசு எழுதின கால் மணிநேரச் சிந்தனைகளை ஒலிபரப்புவார்கள். அதைக் கேட்டுஉந்துதல் பெற்று வானொலி நாடகங்கள் எழுதத் தொடங்கினேன்.

என் எழுத்து முயற்சியில் புத்தர், மகாவீரர் பற்றிய 2 நாடகங்களும் புதிய அனுபவத்தைத் தந்தவை. அவர்களது போதனைகளை அடிப்படையாகக் கொண்டு வானொலிக் காக எழுதப்பட்ட தொடர் நாடகங் கள், பிறகு நூல்களாகவும் வந்து பரவலான பாராட்டைப் பெற்றன.

நான் பெரியாரிய சிந்தனைகளில் ஈடுபாடு உடையவன். சிவானந் தரின் வாழ்க்கை நிகழ்வு களை கவிதை நாடகமாக எழுத முடிந்தது எப்படி என்று கேட்கிறார்கள்.

குருதேவர் சிவானந்தரும் பெரியாரும் என் இரு கண்களைப் போன்றவர்கள். என் சிந்தனை வளர்ச்சிக்கு பெரியார் நீர் ஊற்றி னார் என்றால், என் வாழ்வியல் வளர்ச்சிக்கு வித்திட்டவர் குருதே வர். இருவரிடம் இருந்தும் நான் கற்றவை அதிகம். அவர்கள் இருவரும் என்னைச் செதுக்கிய மகா சக்திகள்.

நீ எந்த அளவுக்கு உயரமாகச் செல்ல விரும்புகிறாயோ, அந்த அளவுக்கு நீ சிரமப்பட்டாக வேண் டும் என்றார் சுவாமி விவேகானந்தர். இன்றைய சமுதாயத்தில் இளை ஞர்கள் நம்பிக்கையோடு இருக் கிறார்கள். ஆனால், தொடர் முயற்சி கிடையாது. தொடர்ந்து முயற்சிப் பதில் தயக்கம் கூடாது. பல இடங்களில் சிறுசிறு குழிகள் தோண்டு வதில் பயனில்லை. ஒரே இடத்தில் தொடர்ந்து தோண்டினால்தான் கிணறு உருவாகும். நீர் கிடைக்கும்.

ஒவ்வொரு நாளும் புதிதாகப் பிறக்கிறது. அதை நாம் நம்பிக் கையோடு எதிர்கொள்ள வேண்டும். 'ஒரு குரு, ஓர் இலக்கு, ஓர் இடம்' என்பதை மனதில் வைத்து செயலில் இறங்கினால், வெற்றியை எட்டிப் பிடிக்கலாம்...'' என உற்சாகமாகக் கூறுகிறார் கவி ஞர் சென்னிமலை தண்டபாணி.

'வசந்தம் உனது வாசலில்', 'உன் கண்களும் என் கவிதைகளும்' என்கிற இவரது கவிதைத் தொகுப்

பின் பெயர்களும், 'வெளிச்சத்தின் பாதை', 'பண்படுத்தும் எண்ணங் கள்' என்கிற வாழ்வியல் வழிகாட்டும் நூல்களும் இவரை தனித்து அடை யாளம் காட்டுகின்றன.

18க்கும் மேற்பட்ட நூல்கள், அதற்கென பெங்களூரு தமிழ்ச்சங்கம், சிற்பி இலக்கியப் பரிசு உள்ளிட்ட விருதுகள், இளைஞர் கள், மாணவர்களுக்கான நல்வழி காட்டும் மேடைப் பேச்சுகள்என இவரது பயணம் சலனமின்றி ஓடுகிறது. இவரது 3-வது மூத்த சகோதரர் கவிஞர் ஈரோடு தமிழன்பன் என்பது குறிப்பிடத்தக்கது.


திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதிபள்ளிகள் திறக்கப்படும்: ''பெற்றோர் வதந்திகளை நம்பி குழம்ப வேண்டாம்-இயக்குனர்

திட்டமிட்டபடி, ஜூன் 1ம் தேதி,பள்ளிகள் திறக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி
இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.
கோடை விடுமுறைக்கு பின், வரும் ஜூன் 1ம் தேதி, பள்ளிகள் துவங்கும் என, கல்வித்
துறை அறிவித்திருந்தது.ஆனால், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள தால், மாணவர் நலன் கருதி, பள்ளி திறக்கும் தேதியை நீட்டிக்க வேண்டும் என,பல்வேறு ஆசிரியர் சங்கத்தினர், தனியார் பள்ளி நிர்வாகிகள், அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.இதனால், பெற்றோர், மாணவ,மாணவியர் மத்தியில், ஒருவித குழப்பம் நிலவி வருகிறது. இதுகுறித்து, தினமும், மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு, நேரடியாகவும், போன் வாயிலாகவும், பெற்றோர் விசாரித்து வருகின்றனர்.இதுகுறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர்கண்ணப்பன் கூறியதாவது:பள்ளிதிறக்கும் தேதியில், எவ்வித மாற்றமும் செய்யவில்லை. ஏற்கனவே அறிவித்தபடி, ஜூன் 1ம் தேதி,பள்ளிகள் திறக்கப்படும்.பாட புத்தகங்கள், சீருடைகள் வழங்குவதற்கான முன்னேற்பாடுகள், தீவிரமாக நடந்து வருகின்றன.பெற்றோர், எவ்விதகுழப்பமும் அடைய தேவையில்லை.இவ்வாறு, அவர்தெரிவித்தார்.

திங்கள், 25 மே, 2015

TRB PG TAMIL சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் -தூது




தூது
நொடிப்பொழுது யுகமாவதும் யுகம் கூட கண நேரமாவதும் காதலில் விளைந்திடும் அதிசயம். பிரிவும் சேரலும் செய்யும் ரசவாதம்.
பிரிந்திருக்கும் காதலர்கள் தங்கள் எண்ணங்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளவும் பகர்ந்து சொல்லவும் ஏதாவது ஒரு வகையில் தூது நடைபெறும். தூது அனுப்புதல் எல்லாக் காலங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
காப்பியங்களில் கதைத் தலைவனோ தலைவியோ கிளியையோ அன்னத்தையோ தூதாக அனுப்பியதை படித்திருப்போம். அது காப்பியத்தில் ஒரு பகுதியாக அமைந்திருக்கும். ஆனால் தூது பற்றி மட்டும் எழுதினால் அது தூது எனும் சிற்றிலக்கியமாகிடும்.
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணியில் குணமாலை கிளியை தூது அனுப்புகிறாள். நளவெண்பாவில் நளன் அன்னத்தைத் தூது அனுப்புகிறான்.
தூது இலக்கியம் என்பது காதல் கொண்ட தலைவனோ, தலைவியோ தங்கள் காதலை வெளிப்படுத்துவதற்கு உயர்திணைப் பொருட்களையோ, அஃறிணைப் பொருட்களையோ தூதுப் பொருளாக கொண்டு பாடப்படுவதாகும்.
அப்படியானால் அவை என்னென்ன?
இயம்புகின்ற காலத்து எகினம், மயில், கிள்ளை பயில்பெறு மேகம், பூவை, பாங்கி
நயந்த குயில் பேதை நெஞ்சம், தென்றல், பிரமரம்
ஈரைந்து மே தூது ரைத்து வாங்கும் தொடை.
- (பிரபந்தத் திரட்டு)
என்று கூறப்பட்டுள்ளது.
இதில் பிரமரம் என்பது வண்டு. பாடலில் கூறப்பட்டுள்ள பத்து இனங்கள் தவிர நாரை, காக்கை, கழுகு, பணம், துகில், ஜவ்வாது, நெல், விறலி, தமிழ், புகையிலை, கழுதை போன்றவையும் தூதுப் பொருளாக பாடப்பட்டுள்ளன. பாடல்வகை கலிவெண்பாவில்தான் அமைந்திடும். நூலின் பெயர் தூதுப் பொருளின் பெயரால் விளங்கிடும். காதலில் மட்டும் தான் தூது இடம் பெறும் என்றில்லை. பிற துறைகளிலும் தூது இடம் பெறும். 
தூது நூல்கள் அகத்தூது, புறத்தூது என இரு வகையில் அமையும். அகநானூறு 170ம் பாடலில் தலைவி நண்டைத் தூது அனுப்புகிறாள். நற்றிணை 54, 70ம் பாடல்களில் வெள்ளாங்குருகும் 102ம் பாடலில் கிளியும் தூது அனுப்பப்படுகிறது. மகாபாரதத்தில் கண்ணன் தூதும், கந்தபுராணத்தில் வீரபாகுத்தேவர் தூதும் புறத்தூதாக நிகழ்கிறது. தமிழ் விடுதூதும், அகத்தூதாகவே அமைகிறது. அதன் சிறப்பான வரிகளாக பலராலும் மேற்கோள் காட்டப்படும் வரிகள், இருந்தமிழே உன்னால் இருந்தேன்.
இமையோர், விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் (151) என்பதாகும். இது தமிழின் சிறப்பை உணர்த்தும் தலைவியின் வார்த்தைகளாய் வருகின்றன.
கி.பி.14ஆம் நூற்றாண்டில் உமாபதி சிவாச்சாரியார் நெஞ்சுவிடுதூது எனும் நூலை எழுதியுள்ளார். பல பட்டடைச் சொக்கநாதப் புலவர் அழகர் கிள்ளை விடுதூது, கச்சியப்ப முனிவர் வண்டு விடு தூது , சுப்ர தீபக் கவிராயர் கூளப்ப நாயக்கன் விறலி விடுதூது, சரவணப் பெருமாள் கவிராயர் சேதுபதி விறலி விடு தூது ஆகியவற்றை எழுதியுள்ளனர். விறலி விடுதூது நூல்கள் காமரசம் கொண்டவையாகும். 
"தூது சொல்ல ஒரு தோழி இல்லை என துயர் கொண்டாயோ தலைவி" எனும் திரைப்பாடல் அவ்வப்போது நம் காதுகளில் விழுந்திருக்கும். காலம் மாறுகிறது தூதும் மாறுகிறது. இன்னும் ஒரு தலைவி, "கிழக்கே போகும் ரயிலே நீதான் எனக்கொரு தோழி தூது போவாயோ" என்று ரயிலைத் தூது அனுப்புகிறாள். எனவே ஏதாவது ஒரு வடிவில் தூது தொடரவே செய்கிறது.


 

நொடிப்பொழுது யுகமாவதும் யுகம் கூட கண நேரமாவதும் காதலில் விளைந்திடும் அதிசயம். பிரிவும் சேரலும் செய்யும் ரசவாதம்.

 

பிரிந்திருக்கும் காதலர்கள் தங்கள் எண்ணங்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளவும் பகர்ந்து சொல்லவும் ஏதாவது ஒரு வகையில் தூது நடைபெறும். தூது அனுப்புதல் எல்லாக் காலங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

 

காப்பியங்களில் கதைத் தலைவனோ தலைவியோ கிளியையோ அன்னத்தையோ தூதாக அனுப்பியதை படித்திருப்போம். அது காப்பியத்தில் ஒரு பகுதியாக அமைந்திருக்கும். ஆனால் தூது பற்றி மட்டும் எழுதினால் அது தூது எனும் சிற்றிலக்கியமாகிடும்.

 

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணியில் குணமாலை கிளியை தூது அனுப்புகிறாள். நளவெண்பாவில் நளன் அன்னத்தைத் தூது அனுப்புகிறான்.

 

தூது இலக்கியம் என்பது காதல் கொண்ட தலைவனோ, தலைவியோ தங்கள் காதலை வெளிப்படுத்துவதற்கு உயர்திணைப் பொருட்களையோ, அஃறிணைப் பொருட்களையோ தூதுப் பொருளாக கொண்டு பாடப்படுவதாகும்.

 

அப்படியானால் அவை என்னென்ன?

 

இயம்புகின்ற காலத்து எகினம், மயில், கிள்ளை பயில்பெறு மேகம், பூவை, பாங்கி

நயந்த குயில் பேதை நெஞ்சம், தென்றல், பிரமரம்

ஈரைந்து மே தூது ரைத்து வாங்கும் தொடை.

 

- (பிரபந்தத் திரட்டு)

 

என்று கூறப்பட்டுள்ளது.

 

இதில் பிரமரம் என்பது வண்டு. பாடலில் கூறப்பட்டுள்ள பத்து இனங்கள் தவிர நாரை, காக்கை, கழுகு, பணம், துகில், ஜவ்வாது, நெல், விறலி, தமிழ், புகையிலை, கழுதை போன்றவையும் தூதுப் பொருளாக பாடப்பட்டுள்ளன. பாடல்வகை கலிவெண்பாவில்தான் அமைந்திடும். நூலின் பெயர் தூதுப் பொருளின் பெயரால் விளங்கிடும். காதலில் மட்டும் தான் தூது இடம் பெறும் என்றில்லை. பிற துறைகளிலும் தூது இடம் பெறும். 

 

தூது நூல்கள் அகத்தூது, புறத்தூது என இரு வகையில் அமையும். அகநானூறு 170ம் பாடலில் தலைவி நண்டைத் தூது அனுப்புகிறாள். நற்றிணை 54, 70ம் பாடல்களில் வெள்ளாங்குருகும் 102ம் பாடலில் கிளியும் தூது அனுப்பப்படுகிறது. மகாபாரதத்தில் கண்ணன் தூதும், கந்தபுராணத்தில் வீரபாகுத்தேவர் தூதும் புறத்தூதாக நிகழ்கிறது. தமிழ் விடுதூதும், அகத்தூதாகவே அமைகிறது. அதன் சிறப்பான வரிகளாக பலராலும் மேற்கோள் காட்டப்படும் வரிகள், இருந்தமிழே உன்னால் இருந்தேன்.

 

இமையோர், விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் (151) என்பதாகும். இது தமிழின் சிறப்பை உணர்த்தும் தலைவியின் வார்த்தைகளாய் வருகின்றன.

 

கி.பி.14ஆம் நூற்றாண்டில் உமாபதி சிவாச்சாரியார் நெஞ்சுவிடுதூது எனும் நூலை எழுதியுள்ளார். பல பட்டடைச் சொக்கநாதப் புலவர் அழகர் கிள்ளை விடுதூது, கச்சியப்ப முனிவர் வண்டு விடு தூது , சுப்ர தீபக் கவிராயர் கூளப்ப நாயக்கன் விறலி விடுதூது, சரவணப் பெருமாள் கவிராயர் சேதுபதி விறலி விடு தூது ஆகியவற்றை எழுதியுள்ளனர். விறலி விடுதூது நூல்கள் காமரசம் கொண்டவையாகும். 

 

"தூது சொல்ல ஒரு தோழி இல்லை என துயர் கொண்டாயோ தலைவி" எனும் திரைப்பாடல் அவ்வப்போது நம் காதுகளில் விழுந்திருக்கும். காலம் மாறுகிறது தூதும் மாறுகிறது. இன்னும் ஒரு தலைவி, "கிழக்கே போகும் ரயிலே நீதான் எனக்கொரு தோழி தூது போவாயோ" என்று ரயிலைத் தூது அனுப்புகிறாள். எனவே ஏதாவது ஒரு வடிவில் தூது தொடரவே செய்கிறது.



TRB PG TAMIL : சிற்றிலக்கிய வடிவங்கள்


 சிற்றிலக்கிய வடிவங்கள்

2	பல்லவர் கால சிற்றிலக்கிய வடிவங்கள்

தமிழில் சிற்றிலக்கியம் தோன்றி வளர்ந்த வரலாற்றினை முன் வைக்கும் முனைவர் ந.வீ.ஜெயராமன் "தொல்காப்பியர் காலத்தில் இடம்பெற்ற சிற்றிலக்கிய வித்து சங்க காலத்தில் ஆற்றுப்படையாக முளைவிட்டுஇ ஐந்தாம் நூற்றாண்டில் அந்தாதியாகத் துளிர்த்துஇ ஏழாம் நூற்றாண்டில் கோவையாகிச் செடியாகிஇ எட்டாம் நூற்றாண்டில் உலாவாக மரமாகி ஒன்பதாம் நூற்றாண்டில் கலம்பகமாகக் கிளைத்துஇபதினோராம் நூற்றாண்டில் சதகமாகவும் பரணியாகவும் அரும்பி பன்னிரண்டாம் நூற்றாண்டில் பிள்ளைத் தமிழாக மொட்டாகிஇ பதினான்காம் நூற்றாண்டில் பள்ளாகக் காய்த்துஇ பதினெட்டாம் நூற்றாண்டில் குறவஞ்சியாகக் கனிந்தது" என்று குறிப்பிடுகிறார். 
2.1 தோற்றம் 

சங்க காலத்திலேயே சிற்றிலக்கியத்திற்கான தோற்றம் தொடங்கியது எனலாம். 

.                                 
1. திருமுருகாற்றுப் படை

 நக்கீரர் குமரவேள் 
2. பொருநராற்றுப்படை

 முடத்தாமக் கண்ணியார் கரிகாற் சோழன் 
3. சிறுபாணாற்றுப் படை

 நத்தத்தனார் நல்லியக் கோடன் 

4. பெரும்பாணாற்றுப் 
படை கடியலூர் உருத்திரங் கண்ணனார்  தொண்டைமான் இளந்திரையன் 
5. மலைபடுகடாம் 
(அல்லது) 
கூத்தராற்றுப் படை பெருங் கௌசிகனார் நன்னன் 

பிரபந்தம் என்ற சொல்லைத் தமிழில் யாப்பு என்ற சொல்லோடு இணைத்துப் பார்க்கலாம்.இரண்டும் கட்டுதல் என்ற பொருளிலேயே வழங்கப்படுகின்றன. பாட்டியல் நூல்களின்படி 96 வகைப் பிரபந்தங்களின் பட்டியலைப் பார்த்தால் அதில் காப்பியம்  புராணம் சிறு நூல்கள் என அனைத்தும் இடம் பெற்றிருப்பதை அறிய முடிகிறது. பிரபந்தம் என்ற சொல் தமிழில் சிறிய இலக்கியங்களைக் குறிக்கலாயிற்று. 
2.2 நூல்களின் அமைப்பு 
அளவில் சிறிதாகச் சிற்றிலக்கியங்கள் அமைகின்றன. பல துறை சார்ந்த பெரிய நூல் போல் அமையாமல்இ ஒரு சிலதுறைகளைப் பற்றிய ஆழமான பார்வை உடையனவாக அவை அமைகின்றன. அளவு சுருக்கமானதாக அமைவதால்இ குறைந்த காலத்தில் படிக்கும் எளிமை உடையனவாக அமைகின்றன. வட்டாரச் சார்புடையனவாகத் திகழ்கின்றன. காப்பியங்களைப் போல் உலகப் பார்வையை இவை பெறுவதில்லை . தெய்வத்தைஇ மன்னனைஇ வள்ளலைப் புகழ்வதற்காக எழுதப்பட்டன. இவற்றுள் பல சிற்றிலக்கியங்கள் தமிழ் மண் சார்ந்தஇ தமிழ் மரபு சார்ந்த கருத்துக்கேளாடு அமைகின்றன. பக்தி சார்ந்த சிற்றிலக்கியங்கள் அதிகமாய் அமைகின்றன. 
2.3 காலம் 
ஆற்றுப்படை இலக்கியங்கள் தோன்றிய சங்க காலத்திலிருந்தே சிற்றிலக்கியங்கள் தோற்றம் பெற்றாலும்இ சிற்றிலக்கியம் உச்ச நிலையில் இருந்த காலத்தை நாம் கணக்கில் கொள்ள வேண்டி உள்ளது. "பல்லவர் காலத்தைப் பக்தி இலக்கியக் காலமென்றும் இடைக்காலச் சோழர் காலத்தைக் காப்பியக் காலமென்றும் அதன் மேலோங்கிய தன்மையாற் கூறுகிறோமே அதுபோல நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கியக் காலம் என்று அழைக்கலாம்"என்கிறார் டாக்டர் தமிழண்ணல். அதாவது கி.பி.15இ 16இ 17ஆம் நூற்றாண்டுகளை நாம் சிற்றிலக்கியக் காலமென்று அழைக்கலாம். நாயக்கர் காலத்தில் தமிழில் சிற்றிலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றி வளர்ந்தன. 
2.4 வகைகள் 
புற்றீசல் போல முந்நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றிலக்கிய வகை தமிழில் இருந்தாலும் அவற்றுள் தலையாயவையாக இருப்பன பதினான்கு வகைகளே ஆகும். 
(1) ஆற்றுப்படை 
(2) அந்தாதி 
(3) மாலை 
(4) பதிகம் 
(5) கோவை 
(6) உலா 
(7) பரணி 
(8) கலம்பகம் 
(9) பிள்ளைத் தமிழ் 
(10) தூது 
(11) சதகம் 
(12) மடல் 
(13) பள்ளு 
(14) குறவஞ்சி 
எனும் 14 வகைகள் தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் புகழ் மிக்கனவாய்த் திகழ்கின்றன. 


2.5 பதிகம் 
சமய நூல்கள் இறைவனைப் போற்றிப் புகழ்பவை. பக்தி இயக்கக் காலத்தில் தோன்றிய சமயநூல்கள் பக்தி இலக்கியமாயின. அவற்றுள் இறைவனைப் போற்றுவதற்குப் பல்வேறு இலக்கிய உத்திகளைப் பெரியோர் பயன்படுத்தினர். அவ்உத்திகளையே வளர்த்துத் தனி இலக்கியமாக அமைத்தனர் பின்னால் வந்த புலவர்கள். அவ்வாறு அமைந்தவையே சிற்றிலக்கியம் எனப் பெற்றன. 
பத்துஇ பதிகம் என்பன சிற்றிலக்கிய வகைகளுள் அடங்குவன. ஒருவகைப் பாவினால் பத்துப் பாடல்கள் பாடுவதால் பதிகம்இ பத்து என்று அழைத்தனர். பத்து எண்ணிக்கையில் சிறிதுகூட்டியோஇ குறைத்தோ வந்தாலும் பதிகம் எனப்பட்டது. பத்துக்களே வகைமைப் பெயர்களாக மாறும்போது பதிகம் என்று பெயரிட்டனர். பதிகங்கள் ஒவ்வொன்றும் பதினொரு பாடல்கள் கொண்டவையாகத் திகழ்கின்றன. பதினோராம் பாடல் பாடியோர் பெயரையும் பத்துப்பாடல்களைப் படிப்பதன் பயனையும் கூறுவதாக அமையும். ஒரு பா ஒருபஃதுஇ இருபா இருபஃது என்பன வெண்பாவினாலோஇ அகவற்பாவினாலோ பதிகங்கள் அமைவனவாகும். 
இவ்வகைமைக்குச் சான்றாகஇ சங்க இலக்கியத்துள் பதிற்றுப்பத்தும்இ ஐங்குறுநூறும் பத்துக்களைத் தோற்றுவித்தன. ஐங்குறுநூற்றிலும் திருவாசகத்தினுள்ளும் தெய்யோப் பத்துஇ அச்சோப்பத்துஇ பிடித்த பத்துஇ ஆசைப்பத்து என்று பிரிவுகள் பத்து எனும் பெயரிலேயே அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகு;ம். காலத்தால் முந்திய பதிகங்களாகஇ காரைக்காலம்மையார் பாடிய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் இரண்டினையும;குறிப்பிடலாம். 

பதிகத்தின் வளர்ச்சியேஇ தசாங்கம் என்பதாம். அரசனுடைய கொடிஇ குடைஇ படை முதலிய பத்து அங்கங்களையும் புகழ்வதாக அமைவதே தசாங்கம் ஆகும். மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தசாங்கத்தை மையப்படுத்தியும்இ புதுமையாகவும்இ பாரதமாதா திருப்பள்ளி எழுச்சிஇ பாரத தேவியின் திருத்தசாங்கம் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சைவத் திருமுறைகள் 
அப்பர்இ சம்பந்தர்இ சுந்தரர்இ மாணிக்க வாசகர் ஆகிய சமய குரவர் நால்வரின் பாடல்களும்இ ஒனபதாம் திருமுறைத் தொகுப்பில் உள்ள காரைக்கால் அம்மையார் பொன்றோரின் பாடல்களும் பதிக முறையிலேயே அமைந்துள்ளன. 
திருக்கடைக் காப்பு - சம்பந்தர்இ சுந்தரர் பாடல்களில் பதிகத்தின் இறுதியில் பதினோராம் பாடல் ஒன்று வரும். இது பதிகத்தின் கடைசியில் பதிகத்துக்கும்இ பதிகம் பாடுவோருக்கும் காப்பாக அமையும் பாடல். 
ஆழ்வார் பாடல்கள் 
திருவாய்மொழி தொகுப்பில் உள்ள நம்மாழ்வார் பாடல்கள் பா வடிவ அளவினைப் பொருத்த பாடல்களாகவும்இ பொருள்நோக்குத் தொகுப்புப் பாடல்களாகவும் உள்ளன. பெரியாழ்வார் பாடல்கள் பொருள் நோக்கிலும்இ ஊர்நோக்கிலும் அமைந்துள்ளன. இவை 10. 10இ ... பாடல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. 
பல சுருதி - பெரியாழ்வார் பாடல்களில் 10 பாடல் (சில பத்தில் 9 பாடல்) முடிந்த பின்னர்இ 11-வது (சிலவற்றில் 10-வது) பாடல் ஒன்று வரும். இதனைப் பல சுருதி என்பர். இது பதிகத்தைப் பாடுவோர் அடையும் பயனைக் கூறும். பயனைக் குறிக்கும் வடசொல் பலன் என்பர். 

3.2 அந்தாதி 
அந்தாதி என்பது யாப்பியலில் ஒரு தொடை வகையையும்இ ஒரு பிரபந்த வகையையும் குறிக்கும். அந்தாதி என்னும் சொல் முடிவு என்னும் பொருள்படும் அந்தம்இ தொடக்கம் என்னும் பொருள்படும் ஆதி ஆகிய இரு சமசுக்கிருதச் சொற்களின் சேர்க்கையால் உருவானது. இதற்கேற்பஇ ஒரு பாடல் முடிவில் உள்ள எழுத்துஇ அசைஇ சீர்இ சொல்சொல் அல்லது அடி அடுத்து வரும் பாடலின் தொடக்கமாக அமையும் பாடல்களால் ஆனது அந்தாதிச் செய்யுள் ஆகும். அடுத்தடுத்து வரும் அடிகள் அந்தாதியாக அமையும் போது அது அந்தாதித் தொடை எனப்படும். அந்தாதி அமைப்பு பாடல்களை வரிசையாக மனப்பாடம் செய்வதற்கு வசதியாக உள்ளது. 
சங்க இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்தின் நான்காம் பத்தில் அந்தாதி அமைப்பு உண்டு. எனினும் அந்தாதி இலக்கியமாகத் தனியே அமைந்தவற்றில் இன்று கிடைக்கும் பழைய நூல் காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதி ஆகும். தவிர பன்னிரு திருமுறைகளில் பதினோராம் திருமுறையில் உள்ள நூல்களில் எட்டு அந்தாதி வடிவில் அமைந்துள்ளன. 
மாணிக்கவாசகரின் திருவாசகம்இ திருமூலரின் திருமந்திரம்இ நம்மாழ்வாரின் திருவாய்மொழி ஆகியவற்றிலும் அந்தாதி வடிவில் அமைந்த பாடல்களைக் காண முடியும். இவை தவிர பிரபந்த வகையைச் சேர்ந்த நான்மணிமாலைஇ இரட்டைமணிமாலைஇ அட்டமங்கலம்இ நவமணிமாலைஇ ஒருபா ஒருபதுஇ இருபா இருபதுஇ மும்மணிக்கோவைஇ மும்மணிமாலைஇ கலம்பகம் என்பவை அந்தாதியாக அமைகின்றன. 
பன்னிரு ஆழ்வார்களில் முதல் ஆழ்வாராம் பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதியும் 2வது ஆழ்வாராம் பூதத்தாழ்வார் 2ம் திருவந்தாதியும் எழுதியுள்ளனர். அவர் 100 வெண்பாக்களை பாடியுள்ளார். பேயாழ்வார் 3ம் திருவந்தாதியும் திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதியும் நம்மாழ்வார் பெரிய திருவந்தாதியும் படைத்துள்ளனர். 

அற்புதத் திருவந்தாதி என்னும் நூல் சைவத்திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுதியில் உள்ள ஒரு நூலாகும். இதனைக் காரைக்கால் அம்மையார் எழுதியுள்ளார். இது 101 வெண்பாப் பாடல்களைக் கொண்டது. இதில் காரைக்கால் அம்மையாரின் சிவ அனுபவத்தின் முழுப் பரிணாமமும் தெரிகிறது. அம்மையார் இறைவனை நீ எனக்கு உதவி செய்யலாகாதா என்று கெஞ்சுகின்ற இடங்களும் உள்ளன. இறைவனை அடைதல் மிக எளிது என்று மற்றவர்க்கு உரைக்கும் பாடல்களும் உள;ளன்;. இறைவனை அடைந்துவிட்டேன்இ இனி எனக்கு ஒரு கவலையுமில்லை என்று பூரிப்படையும் செய்யுள்களும் உள்ளன. இறைவனைத் தாயின் உரிமையோடு கிண்டல் செய்யும் நிந்தா ஸ்துதிகளும் (தூற்றுவது போலும் போற்றும் பாக்களும்) உள;ளன. 
பொன்வண்ணத்தந்தாதி 
பொன்வண்ணம் என்று இந்த நூல் தொடங்குவதால் இதற்குப் பொன்வண்ணத்து அந்தாதி என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்றான அந்தாதி வகையினது. 
நூலின் காலம் 650-710. இது சேரமான் பெருமாள் நாயனாரால் பாடப்பட்ட நூல். இவர் 63 நாயன்மார்களில் ஒருவர். அந்தாதி முறையில் தொடுக்கப்பட்டுள்ள 100 கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் இதில் உள்ளன. 
நூலின் முதல் பாடல் 
"பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்தியங்கும் 
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடைஇ வெள்ளிக்குன்றம் 
தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடைஇ தன்னைக்கொண்ட 
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே." 


3.3 உலா 
பெருங்காப்பியங்களில் பாட்டுடைத்தலைவர் பவனி வருதல் சுருக்கமாகக் குறிக்கப் பெறும். இப்பவனி வருதலை மட்டுமே உயிர்நாடியாகக் கொண்டு தெய்வமே உலா வருவதும்இ அவ்வுலாக் கண்டு மகிழ்ச்சி கொண்ட ஏழுவகைப் பெண்டிர்கள் அவன்மீது விருப்பமுற்று மயங்குவதாகவும் கலிவெண்பாவால் பாடப்படுவது உலா என்னும் சிற்றிலக்கியமாகும். இவ்வுலாவை 'உலாப்புறம் என்றும்இ புற உலா என்றும்இ உலாமாலை என்றும் கூறுவர். புலவர் தங்கள் புலமை நலத்துடன் கற்பனை வளம்இ காலம்இ சமயம்இ சமுதாயம்இ வரலாறு முதலியன சிறப்பிக்கப் படுவதே உலா நூலின் தன்மையாகும். காலப்போக்கில் அரசன் உலா வருவதாக அமைத்துப் பாடப்பட்டது. 

'ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப' என்ற தொல்காப்பிய சூத்திரமே உலாவிற்கு அடிப்படையாகும். இவ்வடிப்படைஇ காப்பியங்களில் ஒரு கூறாகிஇ பிற்காலத்தில் தனியொரு இலக்கியமாக மலர்ச்சி பெற்றது. உலா இலக்கியத்தில் முற்பகுதியில் உலாவரும் தலைவனது குலம்இ குடிப்பிறப்புஇ மரபுஇ அழகுஇ அறிவுஇ ஆண்மைஇ அன்பு ஆகியன கூறப்பெறும். பிற்பகுதி உலா வரும் தலைவனைக் கண்டுஇ ஏழு பருவ மங்கையர்களும் விரும்பி மயங்கிப் பாடுவதாகும். பெதும்பைப் பருவ மகளிரின் மனநிலையைப் பாடுவது அரிதாகும் என்பதனைப் 'பேசும் உலாவில் பெதும்பை புலி' என வழங்கும் வழக்கு மொழியால் அறியலாம். 
ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சேரமான் பெருமாள் நாயனார் பாடிய திருக்கைலாய ஞான உலாவே ஆதி உலாஇ தெய்வீக உலா எனப் புகழ்ப்பெற்ற உலா நூலாகும். இந்நூலில் சிவபெருமானின் காட்சியும் அருள் திறமும் மிக விரிவாகப் பேசப்படுகின்றன. 
பதினொன்றாம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தர் மீது நம்பியாண்டர் நம்பிகள் பாடிய 'ஆளுடைய பிள்ளையார் திருஉலா மாலையும் குறிப்பிடத்தக்கது. சிவப்பிரகாசர் பாடிய திருவெங்கையுலாஇ இரட்டைப் புலவர்கள் பாடிய ஏகாம்பரநாதர் உலாஇ அந்தகக் கவி வீரராகவ முதலியாரின் திருவாரூர் உலாஇ திருக்கழுக்குன்றத்து உலா இ திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலநாதருலாஇ திருக்காளத்திநாதர் உலாஇ தத்துவராயரின் சொக்கநாதருலாஇ திருப்பூவணநாதர் உலா போன்ற நூல்கள் குறிக்கத்தக்கவை. 
சோழர் மூவர் மீது ஒட்டக்கூத்தர் பாடிய மூவருலா மிகவும் பாராட்டப் பெற்றதாகும் . இது மட்டுமே அரசன் உலாப் போந்ததைப் பாடுகிறது. பிற யாவும் இறைவன் உலாப்பற்றிப் பாடுகின்றன 
திருக்கைலாய ஞானஉலா 
பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று உலா வகையினது. 
நூலின் காலம் 650-710. சேரமான் பெருமாள் நாயனார் பாடிய இந்த உலா நூல் ஆதியுலா எனப் போற்றப்படுகிறது. (காரணம் உலா இலக்கியத்தில் இது முதல்நூல்). "ஆதி" எனப்படும் கைலாய நாதன் உலாவருவதைப் பாடுவதாலும் இது ஆதியுலா எனப்பட்டது. 
இதில் 197 கண்ணிகள் உள்ளன. இறுதியில் ஒரு வெண்பாவும் உள்ளது. இந்த வெண்பா சங்ககாலத் தொகுப்புநூல் பத்துப்பாட்டு ஒவ்வொன்றின் இறுதியிலும் சேர்க்கப்பட்டுள்ள வெண்பா போன்றது. சிவன் உலா வரும்போது ஏழு பருவத்துப் பெண்களும் அவன்மீது காதல் கொள்கின்றனர். 
இந்த நூலிலிருந்து சில கண்ணிகள் 
நன்றறி வார்சொல் நலம்தோற்று நாண்தோற்று 
நின்றறிவு தோற்று நிறைதோற்று – நன்றாகக் 
கைவண்டும் கண்வண்டும் ஓடக் கலைஓட 
நெய்விண்ட பூங்குழலாள் நின்றொழிந்தாள் – பெதும்பை பருவத்துப் பெண் (கண்ணி 98இ 99) 
பொருள்: நலம் தோற்றுஇ நாண் தோற்றுஇ அறிவு தோற்றுஇ நிறை தோற்றுஇ கைவண்டு (வளையல்) ஓடஇ கண்வண்டு (விழி) ஓடஇ கலை (அணிந்துள்ள ஆடை) ஓடஇ நின்று உள்ளம் ஒழிந்து ஒப்புக்கு நின்றுகொண்டிருந்தாள். இவ்வாறாக பல்லவர் காலத்தில் உலா இலக்கியம் காணப்படுகின்றது. 
3.4 கலம்பகம் 
தமிழ் இலக்கியத்தில்இ கலம்பகம் என்பது பலவகைச் செய்யுள்களால் ஆகியதும்இ பல பொருள்கள் பற்றியதுமான சிற்றிலக்கியங்களில் ஒன்றாகும். கலம்பகம் என்பது கலப்புஇ அகம் என்னும் இரு சொற்களின் இணைப்பால் உருவானது. பலவகைப் பாடல்கள் ஒருங்கிணைந்து உருவாவதால் இந்தச் சிற்றிலக்கிய வகைக்கு இப் பெயர் ஏற்பட்டது. 
பன்னிரு பாட்டியல் என்னும் நூல் இதன் இலக்கணத்தைக் கூறுகிறது. கலம்பகம் எனும் சொல்லில் கலம் என்பது பன்னிரெண்டையும்இ பகம்(கலத்தில் பாதி) ஆறினையும் குறிக்கும். ஆக பதினெட்டு உறுப்புகள் அமைய பாடப்படுவதே கலம்பகம் என அழைக்கப்படுகிறது. தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் நந்திக் கலம்பகம் ஆகும். 

ஒருபோகும்இ வெண்பாவும்இ முதல் கலியுறுப்பாக முற்கூறப்பெற்றுப் புயவகுப்புஇ மதங்கம்இ அம்மானைஇ காலம்இ சம்பிரதம்இ கார்இ தவம்இ குறம்இ மறம்இ பாண்இ களிஇ சித்துஇ இரங்கல்இ கைக்கிளைஇ தூதுஇ வண்டுஇ தழைஇ ஊசல் என்னும் பதினெட்டுப் பொருட் கூற்று உறுப்புக்களும் இயையஇ மடக்குஇ மருட்பாஇ ஆசிரியப்பாஇ கலிப்பாஇ வஞ்சிப்பாஇ ஆசிரிய விருத்தம்இ கலி விருத்தம்இ கலித்தாழிசைஇ வஞ்சி விருத்தம்இ வஞ்சித்துறைஇ வெண்துறை என்னும் இவற்றால்இ இடையே வெண்பா கலித்துறை விரவ அந்தாதித் தொடையால் பாடுவது கலம்பகம். 
கலம்பகத்திலே பாடப்படுபவரின் சமூகத் தகுதிக்கு ஏற்பப் பாடல்களின் எண்ணிக்கை அமையவேண்டும் எனத் தமிழ் யாப்பியல் நூல்கள் கூறுகின்றன. இது அதிகபட்சம் 100 பாடல்களிலிருந்து 50 பாடல்கள் வரை இருக்கலாம். எனினும் 100 க்கு அதிகமாகவும்இ 50 க்குக் குறைவாகவும் உள்ள பாடல்களைக் கொண்ட கலம்பகங்களும் உள்ளன. 
நந்திக் கலம்பகம் 
நந்திக் கலம்பகம் தமிழில் உருவான கலம்பக இலக்கியங்களில் ஒன்று. இது காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ மன்னன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன் குறித்துப் பாடப்பட்டது. இதுவே கலம்பக நூல்களில் காலத்தால் முற்பட்டு விளங்குவதாகும். மூன்றாம் நந்திவர்மனின் காலம் கி.பி.825-850 என்பதால் நந்திக் கலம்பகத்தின் காலம் கி.பி.9 ஆம் நூற்றாண்டு ஆகும். காஞ்சிஇ மல்லை (மாமல்ல புரம்)இ மயிலை( மயிலாப்பூர்) ஆகிய நகரங்கள் பற்றி இந்நூலில் சிறப்பாகப் போற்றப்பட்டுள்ளது. சிறந்த சொற்சுவை பொருட்சுவையோடு கற்பனை வளமும் நிறைந்த இந்நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை. 
நந்திவர்மனிடம் இருந்து அரசைக் கவரும் நோக்கில் அவனது தம்பியால் ஒழுங்குசெய்யப்பட்டு அறம் பாடுதல் என்னும் முறையில் இப்பாடல்கள் பாடப்பட்டன. அறம் வைத்துப்பாடிய நூலின் பாடலைத் தற்செயலாகக் கேட்ட நந்தி வர்மன் அப்பாடலின் சிறப்பில் மனம் பறிகொடுத்து பாடல் முழுவதையும் பாட விரும்பினான். நூல் முழுவதையும் கேட்டால மன்னன் உடல் எரிந்து இறப்பான் என்பதை அறிந்தும் தமிழின் மீதுள்ள தனியாத காதலால் உயிரையும் பொருட்படுத்தாதுஇ எரியும் பந்தலின் கீழிருந்து கேட்டு உயிர் இறந்தான் என்று கூறப்படுகிறது. 'நந்திஇ கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்' - என்னும் சோமேசர் முதுமொழி வெண்பா என்னும் நூலின் வெண்பா வரிகளும்இ கள்ளாரும் செஞ்சொல் கலம்பகமே கொண்டுஇ காயம் விட்ட தெள்ளாறை நந்தி -என்னும் தொண்டை மண்டலச் சதகப்பாடல் வரிகளும் இக்கருத்தை வலியுறுத்துகின்றன. இதற்கேற்ப இந்நூலிலும் பல வசைக்குறிப்புகள் இடம் பெறுகின்றன. இதனை மறுத்துக் கூறுவாரும் உள்ளனர். 
கடவுளர்க்கு 100இ முனிவர்க்கு-95இ அரசர்க்கு -90 அமைச்சர்க்கு- 70இ வணிகர்க்கு- 50 வேளாளர்க்கு -30 எனும் அளவில் கலம்பகப் பாடல்கள் அமைய வேன்டும் என்பது விதி. இந்த அளவினை மீறி கலம்பகங்கள் பாடப்பட்டுள்ளன. நந்திக் கலம்பகத்தில் அகம் இபுறம்இ ஆகிய துறைகள் கலந்து வர அமையப்பெற்ற போதும் அவற்றுள் அகத்திணைச் செய்திக்ள் பெரும்பான்மையினதாகவும் புறத்திணைச் செய்திகள் சிறுபான்மையினதாகவும் இடம் பெறுகின்றது. நந்திக் கலம்பகத்தில் 144 பாடல்கள் காணப்படுகின்றன. ஆனால் அரசர் மீது பாடப்பெறும் கலம்பகம் 90 பாடல்களுடையதாய் இருக்க வேண்டும் என்பது நியதியாகும். எனவெஇ இதில் உள்ள அதிகப்படியான 54 பாடல்கள் பிற்காலத்தில் எழுதிச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. 
இந்நூலில் நந்தி வர்மனின் தெள்ளாறு வெற்றியைப் பற்றி மட்டும் 16 பாடல்களில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.கொற்ற வாயில் முற்றம்இ வெறியலூர்இ வெள்ளாறுஇ தெள்ளாறு போன்ற பல்வேறு போர்க்களங்களைப் பற்றிக் கூறும் சிறந்த வரலாற்று நூலாகவும் இது திகழ்கிறது. 
3.5 கோவை 
ஒத்த தலைவனும் தலைவியும் தெய்வத்தால் தம்முள் எதிர்ப்பட்டுக் காதல் கொண்டு பின்பு கற்பு வாழ்க்கையில் ஒன்றி இல்லறம் நடத்தும் இனிய நிகழ்ச்சிகளைக் கோத்துத் தரும் நூலே கோவை எனப்படும். அகப்பொருள் செய்திகளை அடிப்படையாகக் கொண்டமையால் இது 'அகப்பொருள் கோவை' என அழைக்கப்படும். ஐந்து திணைகளின் நிகழ்வுகளை நிரல்படக் கூறுவதால் இதனைஇ 'ஐந்திணைக்கோவை' எனவும் அழைப்பார்கள். 
கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பில் 400 பாடல்களைக் கொண்டு பாடுவது 'கோவை' என்னும் சிற்றிலக்கியமாகும். 
சிற்றிலக்கிய வகைகளுள் கோவை என்னும் இலக்கியம் எளிதில் பாட இயலாத ஒரு நூலாகும். கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பு எழுத்தெண்ணிப் பாடுவதாகும். இவ்வருமை கருதியே 'யாவையும் பாடிக்கோவை பாடு' எனும் வழக்கு மொழியும் வழங்கியுள்ளமையினைத் தெரிந்துணரலாம். 
இக்கோவை இலக்கிய வகையே இறைவனுக்கு உகந்த ஒன்றாக உள்ளது எனலாம். 'பாவை பாடிய வாயால் ஒரு கோவை பாடுக' என இறைவன் மாணிக்கவாசகரிடத்தில் வேண்டஇ அவர் திருக்கோவையார் என்னும் திருச்சிற்றம்பலக் கோவையார் பாடியுள்ளார். இதனாலேயே இந்நூலைக் 'இராசாக் கோவை' என்றும் சிறப்பிப்பர். 
தலைவியை இயற்கைப் புணர்ச்சியின் மூலம் சந்தித்துப் பிரிந்த தலைவனின் மெலிந்த நிலைகண்டு பாங்கன் அந்நிலைக்குரிய காரணம் இதுவா? இதுவா? என வினவுவதைத் திருக்கோவையாரில் பின்வருமாறு அமைத்துள்ளார் மாணிக்கவாசகர். 
"சிறைவான் புனல்தில்லைச் சிற்றம்பலத்துமென் சிந்தையுள்ளும் 
உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்தவொண் தீந்தமிழின் 
துறைவாய் நுழைந்தனையோஅன்றி யேழிசைச் சூழல் புக்கோ 
இறைவா தடவரைத் தோட்கென் கொலாம் புகுந்தெய்தியதே " 
இராசாக்கோவை என்னும் திருச்கோவையாருக்கு அடுத்துஇ 'மந்திரிக்கோவை' என்று சிறப்பித்துக் கூறப்படுவது திருவெங்கைக் கோவையாகும். இந்நூலைப் பாடியவர் சிவப்பிரகாச சுவாமிகள் இவர் பதினேழாம் நூற்றண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்.மேலும் சோமேச்சுரக் கோவைஇ திருவாரூர்க்கோவைஇ சீர்காழிக்கோவைஇ குன்றத்தூர்க்கோவைஇ திருவாவடுதுறைக் கோவைஇ மயூரகிரிக்கோவை முதலான நூல்கள் சிறப்புக்குரியனவாம். 
அமிர்த கவிராயர் 'நாணிக்கண் புதைத்தல்' என்னும் ஒரு துறையை ஒட்டியே 400 பாடல்கள் பாடியுள்ளார் என்பதும் குறிக்கத்தக்கது. அதனாலேயே அது ஒருதுறைக் கோவை என்று பெயர் பெற்றது. 
சுருங்கக் கூறின் சங்ககாலத்திற்குப் பின் சிறப்பான நிலையில் அகப்பொருள்களைப் பாடும் கோவை நூல்களைத் தமிழறிஞர்கள்சங்க இலக்கிய வாயில் என்பார்கள். காலம்இ இடம்இ காட்சிஇ பேச்சுஇ அங்கம் முதலாயின எல்லாம் அமைவதால்இ நாடகச் சிற்றிலக்கியம்என்று இதனைக் கூறுவது குறிக்கத்தக்க ஒன்றாம். 
திருக்கோவையார் திருவாதவூரார் என்னும் மாணிக்கவாசகரால் இயற்றப்பட்டது. இது பன்னிரண்டு சைவத் திருமுறைகளில் எட்டாவது திருமுறையாகும். இதை திருச்சிற்றம்பலக்கோவையார் என்றும் அழைப்பர். இந்நூலுக்கு பெயர் திருக்கோவை என்பது இறைவணக்கத்தில்இ நண்ணியசீர்த் தேனூறு செஞ்சொல் "திருக்கோவை" என்கின்ற நானூறும் என்மனத்தே நல்கு என்பதால் விளங்கும். 
இந்நூல் 400 துறைகளை உடையது. இந்நூலை ஆரணம் (வேதம்) என்பர் சைவ சமய சாதகர்கள். இது 25 அதிகாரங்களை உடையது. இந்நூல் பேரின்ப நூல் ஆகும். மேலோட்டமாகக் காணும்பொழுது அகத்திணை நூல் போல் காட்சி தருகிறது. அன்பே சிவமாகவும்இ அருளே காரணமாகவும்இ சுத்த அவத்தையே நிலமாகவும்இ நாயகி பரம்பொருளாகவும்இ நாயகன் ஆன்மாவாகவும்இ தோழி திருவருளாகவும்இ தோழன் ஆன்மபோதமாகவும்இ நற்றாய் (அம்மை)பரையாகவும்இ சித்தரிக்கப் பட்டுள்ளனர். பாண்டிக்கோவை என்னும் நூலின் பாடல்கள் இறையனார் களவியல் நூலுக்கு நக்கீரர் எழுதிய உரையில் மேற்கோள் பாடல்களாகத் தரப்பட்டுள்ளன. மதுரையிலிருந்துகொண்டு நாடாண்ட பாண்டியன் 'அரிகேசரி நெல்வேலி வென்ற நெடுமாறன்' இதன் பாட்டுடைத் தலைவன். இவன் திருஞான சம்பந்தர் காலத்தவன். கி. பி. 7ஆம் நூற்றாண்டு. நக்கீரர் எழுதிய களவியல் உரை 10ஆம் நூற்றாண்டு. 
அதைத் தொடர்ந்து பாண்டிக்கோவைஇ தஞ்சைவாணன் கோவைஇ குலோத்துங்க சோழன் கோவைஇ அம்பிகாபதிக் கோவைஇ குளத்தூர் கோவை முதலியன எழுந்தன. "நாணிக்கண் புதைத்தல்" என்ற ஒரே துறையை அடிப்படையாகக் கொண்டு "ஒரு துறைக்கோவை" என்னும் நூல் பின்பு தோன்றியது. 
3.6 தாண்டகம் 
தாண்டகம் என்பது தமிழ்ச் செய்யுள் வகையில் ஒன்று. கி.பி. 6ஆம் நூற்றாண்டுக்குப் பின் எழுந்த இலக்கியங்களிலே இச்செய்யுள் வகையைக் காணலாம். 
ஆறுசீரடி அல்லது எண்சீரடி பயின்ற செய்யுளினால் ஆடவரையோ கடவுளரையோ பாடுவதற்குரியது தாண்டகம் எனும் சிற்றிலக்கிய வகை (பிரபந்தம்). ஆறுசீரடியினாலாகிய தாண்டகத்தினைக் குறுந்தாண்டகம் என்றும் எண்சீரடியால் அமைந்ததினை நெடுந்தாண்டகம் என்றும் பன்னிருபாட்டியல் பகருகிறது. பல்காயனார்இ மாபூதனார்இ சீத்தலையார் என்போரும் இக் கருத்தினையே ஏற்றுக் கொண்டுள்ளனர்ஜமேற்கோள் தேவைஸ. இவ்விருவகை தாண்டகச் செய்யுள்களும் பிற்காலத்துப்பெருகிய அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் என்பனவற்றிற்கு முன்மாதிரிகள் என மொழியலாம். 
• பாடலின் ஒவ்வொரு அடியும் இடையிலே தாண்டுவதை இந்தப் பாடல்களில் காணலாம். பாடலின் அகத்தே தாண்டுவது தாண்டகம். 
• திருநாவுக்கரசர் திருத்தாடகமும்இ திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகமும் ஒரே வகையான பாடல்கள். 
திருக்குறுந்தாண்டகம் 
திருக்குறுந்தாண்டகம் என்பது திருமங்கையாழ்வாரருளிய நூல். இது தாண்டகம் என்ற செய்யுள் வகையைச்சார்ந்து இயற்றப்பட்டதாகும். பாடலின் ஒவ்வொரு அடியும் இடையிலே தாண்டுவதை இந்தப் பாடல்களில் காணலாம். பாடலின் அகத்தே தாண்டுவது தாண்டகம். ஒவ்வொரு அடியிலும் ஆறு சீர்கள் வந்தால் அது குறுந்தாண்டகம் என்றுரைப்பர். திருக்குறுந்தாண்டகம் என்பது வைணவக்கடவுளைப் பற்றிய செய்யுளாதலால் 'திரு' என்று பெயர் தொடங்குகிறது இது நாலாயிரத்திவ்யப் பிரபந்தத்தில் 2032 முதல் 2051 வரையிலான பாடல்கள் இரண்டாவது ஆயிரத்தில் இடம்பெற்றுள்ளன. இதில் 20 பாடல்கள் உண்டு 
திருநெடுந்தாண்டகம் 
திருநெடுந்தாண்டகம் ஒவ்வொரு அடியிலும் எட்டு சீர்கள் வந்தால் அது நெடுந்தாண்டகம் என்றுரைப்பர். திருநெடுந்தாண்டகம் என்பது வைணவக்கடவுளைப் பற்றிய செய்யுளாதலால் 'திரு' என்று பெயர் தொடங்குகிறது. 
இது நாலாயிரத்திவ்யப் பிரபந்தத்தில் 2052 முதல் 2081 வரையிலான பாடல்கள் இரண்டாவது ஆயிரத்தில் இடம்பெற்றுள்ளன. இதில் 30 பாடல்கள் உண்டு. 

3.7 மடல் இலக்கியம் 
மடல் இலக்கியம் அகப்பொருள் சார்ந்த சிற்றிலக்கிய வகை ஆகும். இது காதல் குறித்த ஓர் இலக்கியம். 
மடல் ஏறுதல் 
இந்தச் சிற்றிலக்கிய வகைக்கு மடல் என்று ஏன் பெயர் வந்தது என்று பார்த்தால ;தலைவன் தலைவியைக் காதலிக்கின்றான். எவ்வளவோ முயன்றும் தலைவனால் தலைவியை அடைய முடியவில்லை. எனவே தலைவன் தலைவியை அடைவதற்கு இறுதி முயற்சியாக மடல் ஏறத் துணிகின்றான். சில சமயம் மடல் ஏறவும் செய்கின்றான். எனவேஇ தலைவன் தலைவியை அடைய மடல் ஏறுவதாகிய பாடு பொருளைக் கொண்ட இலக்கியம் ஆகையால் இதற்கு மடல் என்ற பெயர் ஏற்பட்டது எனலாம். 
தலைவன் தலைவியை அடைவதற்காக மடல் ஏறுவேன் என்று கூறுவது மடல் கூற்று என்கிறது. அவ்வாறு மடல் ஏற வேண்டாம் எனத் தலைவனை விலக்குவது அல்லது தடுப்பது மடல் விலக்கு என்கிறது. 
இவ்வாறுஇ இலக்கண நூல்களிலும்இ இலக்கியங்களிலும் காணப்படுகின்ற மடல்இ மடல் ஏறுதல் பற்றிய செய்திகளை அடிப்படையாகக் கொண்டு மடல் என்ற தனியான ஓர் இலக்கிய வகை தோன்றியது எனலாம். தமிழ்மொழியில் முதன் முதலில் தோன்றிய மடல் இலக்கியங்கள் திருமங்கையாழ்வார் பாடியவையே ஆகும். அவை சிறிய திருமடல்இ பெரிய திருமடல் என அழைக்கப்படுகின்றன. இறைவனைத் தலைவனாகவும் தம்மைத் தலைவியாகவும் கொண்டு பல பாடல்கள் பாடியுள்ளனர். இதைத் தலைவன் தலைவி பாவம் அல்லது நாயகன் நாயகி பாவம் என்பர். இவ்வகையில்இ நம் சங்க இலக்கிய அகப்பொருள் மரபுகளைஇ தொடர்ச்சியைப் பக்தி இலக்கியத்தில் பல இடங்களில் காண முடிகின்றது. பக்தி இலக்கியத்துள் சங்க இலக்கிய அகப்பொருள் மரபுகளைச் சில மாற்றங்களுடன் புகுத்த முயன்ற முயற்சியின் விளைவுகளுள் ஒன்றாக மடல் இலக்கியத்தைத் திருமங்கையாழ்வார் படைத்துள்ளார் எனலாம். 
இறைவன் மீது எல்லை இல்லாத காதல் கொண்டுள்ளாள் தலைவி. தலைவனாகிய இறைவனை அடைவதற்குரிய முயற்சியாகத் தலைவி மடல் ஏறுவேன் என்று கூறுகின்றாள். இவ்வகையில் அமைந்த நூல்கள் சிறிய திருமடல்இ பெரிய திருமடல் என்பனவாகும். எனவேஇ இலக்கணங்களில் பெண்கள் மடல் ஏறுதல் இல்லை என்ற மரபு மாறிப் பெண்களும் மடல் ஏறுவர் என்ற மரபு மாற்றம் ஏற்பட்டுள்ளது.இங்கு இடம்பெறுவது உலகியல் காதல் அல்ல. காமம் காரணமாகிய காதல் அல்ல. இங்கு இடம்பெறுவது பேரின்பக் காதல் ஆகும். எனவேஇ திருமங்கை ஆழ்வார் இவ்வாறு பாடியுள்ளார் எனலாம். 
பெரிய திருமடல் 
பெரிய திருமடல்இ மடல் என்னும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த ஒரு தமிழ் நூல். இதனை இயற்றியவர் திருமங்கையாழ்வார். இது நாராயணனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. மடல் இலக்கியவகையின் முன்னோடி நூல்களில் ஒன்றாகக் காணப்படும் இந்நூல் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தின் (பாசுரம்: 2713 - 2790) பகுதியாகும். பெண்கள் மடலூர்தல் இல்லை என்ற பழைய மரபை மாற்றி இயற்றப்பட்டுள்ளது இந்நூல். 
சிறிய திருமடல் 
சிறிய திருமடல் மடல் என்னும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த ஒரு தமிழ் நூல். இதனை இயற்றியவர் திருமங்கையாழ்வார். இது நாராயணனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. மடல் இலக்கியவகையின் முன்னோடி நூல்களில் ஒன்றாகக் காணப்படும் இந்நூல் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தின் (பாசுரம்: 2673 - 2712) பகுதியாகும். பெண்கள் மடலூர்தல் இல்லை என்ற பழைய மரபை மாற்றி இயற்றப்பட்டுள்ளது இந்நூல். 
தலைவன் "நாராயண"னின் பெயருக்கு ஏற்ப நூலின் ஒவ்வொரு அடியிலும் எதுகை அமைந்துள்ளது. 
3.8 அம்மானை 
அம்மானை என்பது தமிழ்நாட்டு மகளிர் விளையாட்டாகும். மூன்று பெண்கள் அமர்ந்து அம்மானைக் காயை வீசி விளையாடும் விளையாட்டாகும். இது விளையாட்டாக இருந்தாலும்இ கவிதை புனையும் அறிவுப்பூர்வமான அமைப்புடையதாக இருந்ததால் இவ்விளையாட்டு இலக்கிய வடிவம் பெற்றது. 
ஒருவர் ஆடுவது சங்ககாலப் பந்து விளையாட்டு. மூவர்இ ஐவர் எனக் கூடிப் பாட்டுப் பாடிக்கொண்டு ஆடுவது அம்மானை விளையாட்டு. இது அண்மைக்காலம் வரையில் தஞ்சைப்பகுதி அந்தணர் இல்லங்களில் விளையாடப்பட்டு வந்தது. இணைப்பு ஓவியமும் அவர்கள் விளையாடிய பாங்கைப் காட்டுவதேயாகும். 
மூன்று பேர் விளையாடுவதாலும்இ அம்மானைப் பாடல் மூன்று பேர் பாடுவதாக அமைந்துள்ளமையாலும் இதனை மூவர் அம்மானை என்றும் குறிப்பிடுஃகின்றனர். 
மாணிக்கவாசகர் அருளிச் செய்த அம்மானைப் பாட்டு திருவாசகத்தின் ஒரு பகுதியாக 'திருவம்மானை' என்று விளங்குகிறது. இது இறைவன் திருவருளைப் பெற வேண்டிப் பாடிஇ ஆடிய அம்மானையாதலால் 'திரு' என்று அடைமொழி கூட்டி திருவம்மானை எனப்பட்டது. இப்பாட்டு பலர் நின்று தத்தம் முறை வரும்போது ஒவ்வொரு கருத்தைப் பாடலாகப் பாடி ஆடும் முறையாக அமைந்திருக்கின்றது. எனவே இவ்விளையாட்டில் மூவர் என்ற வரையறை இன்றி சூழ்நிலைக்கேற்ப எத்தனை பேர் வேண்டுமானாலும் ஆடலாம் எனக் கொள்ளலாம். மாணிக்கவாசகர்இ அரசன்இ வள்ளல்களன்றி இறைவன் அருளை வேண்டி அம்மானையாகப் பாடியுள்ள முறை பிற்காலத்தில் சிற்றிலக்கியங்களாக பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. 
3.9 திருப்பள்ளியெழுச்சி 
திருப்பள்ளியெழுச்சி என்பது இறைவனைத் துயில் எழுப்புவதாகவும் நம்மில் ஆன்மீக விழிப்பின்றி உறங்கிக் கொண்டிருக்கும் ஆத்மாவைத் துயிலெழுப்பி இறைவனின் கருணையை உணரச் செய்வதாகவும் பாடப்படும் பாடல்கள் ஆகும். 'சுப்ரபாதம்' என்பது இதன் இணையான சமஸ்கிருதச் சொல்லாகும். 
திருவரங்கத்தைச் சேர்ந்த தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே திருப்பள்ளியெழுச்சிவகை படைப்புகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது. 
பாவை நோன்பு மற்றும் திருவெம்பாவை நோன்பு பொதுவாகக் கன்னிப் பெண்களே கடைப்பிடிப்பர். நோன்புகாலத்தில் கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து தம் தோழியரைத் துயில் எழுப்பி அழைத்துக் கொண்டு நீர் நிலைகளுக்குச் சென்று திருப்பாவையில் கண்ணன் மற்றும் திருவெம்பாவையில் அம்மையப்பர் புகழ்பாடி நீராடுவர். அப்பொழுதில் பாடும் பாடல்களாகவும் இவை கொள்ளப்படுகின்றன. 
தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி 
கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்! 
கனைஇருள் அகன்றதுஇ காலை அம் பொழுதாய்இ 
மது விரிந்து ஒழுகின மாமலர் எல்லாம்இ 
வானவர்இ அரசர்கள் வந்து வந்து ஈண்டி 
எதிர்திசை நிறைந்தனர்இ இவரொடும் புகுந்த 
இரும் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும் 
அதிர்தலில் அலைகடல் போன்று உளது எங்கும்இ 
அரங்கத்து அம்மாஇ பள்ளி எழுந்தருளாயே! 
மணிவாசகரின் திருப்பள்ளியெழுச்சி 
கூவின பூங்குயில்; கூவின கோழி; 
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம் ; 
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து 
ஓருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத் 
தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய் ! 
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே ! 
யாவரும் அறிவரியாய் ! எமக்கெளியாய் ! 
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே ! 

3.10 திருப்பாவை 

திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 473 தொடக்கம் 503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும். 
தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பு நோற்றனர். இதன் போது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர். இதனைப் பின்னணியாகக் கொண்டு எழுந்ததே இந் நூல். இதனால் தற்காலத்திலும் பாவை நோன்புக் காலத்தில் இப் பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன. 
இதன் இரண்டாம் பாடல்இ நெய் உண்ணமாட்டோம்இ பால் அருந்த மாட்டோம் என எவ்வித உணவு வகைகளையும் உட் கொள்ளாதிருத்தலையும்இ காலையிலே நீராடுவதையும்இ கண்ணுக்கு மையிடுதல்இ தலையைச் சீவி முடித்து மலர்களைச் சூட்டிக்கொள்ளுதல் முதலிய அழகூட்டும் வேலைகளைச் செய்யாதிருத்தலையும்இ செய்யத் தகாதனவற்றைச் செய்யாது தவிர்த்தலையும்இ தீக்குறளை (தீயதான கோள் சொல்லாதிருக்கையும்) இ பிச்சை முதலியன இட்டு நற்செயல்களில் ஈடுபடுவதையும்இ இறைவனைப் பாடித் துதித்தலையும் பாவை நோன்பு காலத்தில் செய்ய வேண்டியனவாகக் கூறி அந் நோன்பு நோக்கும் விதத்தை விளக்குகிறது. 

மூன்றாம் பாடல் அதனால் உண்டாகும் பயன்களையும் எடுத்துக் கூறுகிறது. நாடு முழுதும் மாதம் மும்மாரி பெய்யும்இ வயல்களில் நெற் பயிர் ஓங்கி வளரும். அவற்றிடையே கயல் மீன்கள் துள்ளும்இ பசுக்கள் நிறையப் பால் கொடுக்கும்இ எங்கும் நீங்காத செல்வம் நிறையும் என்பது அப் பயன்களாகும். பாடல்கள் அனைத்தும் இறைவனின் பெருமைகளைக் கூறிக் கன்னியரைத் துயில் எழுப்பும் பாங்கில் எழுதப்பட்டுள்ளன. 
தாய்லாந்தில் திருப்பாவைஇ திருவெம்பாவை மன்னர் முடிசூட்டலில் பாடப்படுகிறது.. மார்கழி மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடப்படுகிறது. 
3.11 பிள்ளைத்தமிழ் 
பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாம் தாம் விரும்பிய தெய்வங்கள்இ சமயா சாரியர்கள்இ புலவர் பெருமக்கள்இ ஆதீனகர்த்தர்இ அரசர்இ உபகாரிகள்இ அவர் அவர்கட்கு உகந்தவர்கள்இ ஆகியோரைக் குழந்தையாக உருவகித்துஇ கற்பனை பல அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும். குழந்தையாகக் கொண்டது பாவனையே ஆகும். அப்பாட்டுடைத் தலைவர்கள் செயற்கரும் செயல்களைக் குறித்துப் பிள்ளைக்கவியில் பாடவில்லை யாயின்இ நூல் என்னும் அமைப்புக்குள் அமையாமல்இ வெறும் பருவங்கள் மட்டும் அமைந்திருக்கும். ஆகவேஇ இதனை உளம் கொள்ளுதல் வேண்டும். 
இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ்இ பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரண்டு பால்களிலும் பாடப்படுவதுண்டு. மூன்று மாதம் முதல் இருபத்தொரு மாதம் வரையான குழந்தையின் வாழ்க்கைக் காலத்தைப் பத்துப் பருவங்களாகப் பிரித்துக் காண்பர். ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் வீதம் அமைத்துப் பாடப்படுவது வழக்கு. ஆண்பால் பிள்ளைத் தமிழ்க்குரிய பருவங்கள் இவைஇ பெண்பால் பிள்ளைத் தமிழ்க்குரிய பருவங்கள் இவை என்பனவும் முன்பே குறிக்கப்பட்டன. 
பெரியாழ்வார் பாடிய பிள்ளைத்தமிழ் 
பெரியாழ்வார்இ ஆழ்வார்கள்களில் ஒருவர். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். வைணவர். இவரது பாடல்கள் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூலில் முதல் 5 திருமொழிகளாக அமைந்துள்ளன. அவற்றில் 474 பாடல்கள் உள்ளன. இவற்றில் இவர் கண்ணனைப் பிள்ளையாகப் பாவித்துப் பாடிய பாடல்களும் உள்ளன. பாட்டியல் இலக்கண நூல்கள் பிள்ளைத்தமிழ் என்னும் இலக்கண நெறியை வகுப்பதற்கு முன்னர் தோன்றிய பிள்ளைத்தமிழ்ப் பாடல்கள் இவை. தொல்காப்பியம் கடவுளைக் குழந்தையாகப் பாவித்துப் பாடும் பகுதியைப் பாடாண் திணையின் பகுதியாகக் குறிப்பிடுகிறது. 
பெரியாழ்வார் கண்ணனைக் குழந்தையாகப் பாவித்துப் பாடிய பாடல்களின் வரிசை 
• திருத்தாலாட்டு 
• அம்புலிப் பருவம் 
• செங்கீரைப் பருவம் 
• சப்பாணிப் பருவம் 
• தளர்நடைப் பருவம் 
• அச்சோப் பருவம் 
• புறம் புல்கல் 
• பூச்சி காட்டுதல் 
• முலை உண்ணல் 
• காது குத்தல் 
• நீராட்டம் 
• குழல் வாரக் காக்கையை அழைத்தல் 
• கண்ணன் ஆநிரை மேய்க்கக் கோல் கொண்டு வா எனல் 
• பூச் சூட்டல் 
• காப்பிடல் 
• பால கிரீடை 
இது மேலும் தொடர்கிறது. கண்ணனைப்பற்றி அயலகத்தார் யசோதையிடம் முறையிடல்இ கண்ணனுக்கு முலைப்பால் தராதே எனல்இ முதலானவை இதன் தொடர்ச்சி. 
மாணிக்கம்கட்டி வயிரம்இடைகட்டி 
ஆணிப்பொன்னால்செய்த வண்ணச்சிறுத்தொட்டில் 
பேணிஉனக்குப் பிரமன்விடுதந்தான் 
மாணிக்குறளனே. தாலேலோ 
வையமளந்தானே. தாலேலோ . 

இவ்வானதொரு முறையில் பல்லவர் கால சிற்றிலக்கியங்களை நாம் பார்க்க முடியும்.