சனி, 2 மே, 2015

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்ப விநியோகம் நாளை தொடங்குகிறது.

தருமபுரி மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்ப விநியோகம் நாளை தொடங்குகிறது.இது குறித்து ஆட்சியர் விவேகானந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கட்டாயக் கல்விச் சட்டம் 2009-ன் படி தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற மற்றும் சுயநிதிப் பள்ளிகளில் நலிவடைந்தோரின் குழந்தைகளை 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்க விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது. மே 3-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இந்த விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங் களை 18-ம் தேதிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்திலேயே ஒப்படைக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் உள்ள நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டோர் தங்களின் குழந்தைகளை இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் சுயநிதி பள்ளிகளில் நுழைவுநிலை வகுப் பில் சேர்த்து பயனடையலாம்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதற்கான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளிலும், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ஆகிய மாவட்ட கல்வி அலுவலகங்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம், ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் இலவசமாக வருகிற 4-ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 18-ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் பெற்ற இடத்திலேயே இரு பிரதிகளில் அளித்திட வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமசாமி தெரிவித்துள்ளார்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக