அவன் இரவில் வருகிறான். அவளைப் பார்க்கதான் வருகிறான். அவளுக்கும் அவனை அப்படித் தினமும் சந்திப்பது மகிழ்ச்சிதான்.
ஆனால், இப்படி பயந்து காதலிப்பது எத்தனை நாளைக்கு? ஊர் நாலுவிதமாகப் பேசுமுன் திருமணம் செய்துகொள்ள வேண்டுமல்லவா? அவன் எப்போது அவளைப் பெண் கேட்க வருவான்?
இதை நேரடியாகக் கேட்க அவளால் இயலவில்லை. அவனைப் பார்த்தால் அந்தக் கணமே எல்லாவற்றையும் மறந்து அணைத்துக்கொள்ளதான் தோன்றுகிறது.
இதனால், காதலனுக்கு அவனுடைய பொறுப்பை நினைவுபடுத்தித் திருமணப் பேச்சை எடுக்க வேண்டிய பணி தோழிக்கு. அவள் மெதுவாக அந்தப் பேச்சைத் தொடங்க எண்ணுகிறாள்.
அந்தக் காதலன் வளமான ஊரைச் சேர்ந்தவன். அங்கே ஆண் யானையும், பெண் யானையும் சேர்ந்து வாழைத் தோட்டங்களில் மேயும். பிறகு, அது திகட்டிவிட்டது என்று பலா மரத்தை நோக்கிக் கிளம்பும். அதைப் பார்த்து மக்களெல்லாம் பயந்து அலறுவார்கள். அப்படிப்பட்ட ஊரைச் சேர்ந்தவன், இவளைச் சந்திக்க ஒவ்வோர் இரவிலும் வருகிறான். ஆனால், பகல் நேரத்தில் வந்து பெண் கேட்கவில்லை.
ஒருநாள், அவன் தன் காதலியைச் சந்தித்துவிட்டுப் புறப்படும் நேரமாகப் பார்த்து, 'என்ன, கிளம்பியாச்சா?' என்கிறாள் தோழி.
'ஆமாம்!'
'மறுபடி எப்ப வருவீங்க?' என்று கேட்டுவிட்டு, அவன் பதில் சொல்வதற்குள், 'நீங்க வர்றவரைக்கும் இவளுக்கு உங்க ஞாபகமா எதையாவது தரலாமே!'
'எதையாவதுன்னா?'
'கழுத்துல மாலை போட்டிருக்கீங்களே, அதைக் கொடுத்துட்டுப் போங்க!'
'இந்த மாலையா, அது எதுக்கு?'
'நீங்க இல்லாதபோது உங்களை நினைச்சு இவ கவலையில இருப்பா, அப்போ இந்த மாலை இருந்தா, அதைத் தழுவிகிட்டுக் கொஞ்சநேரம் மனசு மாறுவா, அதனாலதான்!'
தோழி கேட்பது சாதாரண மாலை அல்ல. திருமணப் பேச்சைதான் அப்படிக் குறிப்பிடுகிறாள். இந்த விஷயம் காதலனுக்குப் புரியுமா?
நற்றிணையில் முறுவெங்கண்ணனார் எழுதிய அழகான பாடல் இது -
சிறுகண் யானைப் பெரும்கை ஈரினம்
குளவித் தண்கயம் குழையத் தீண்டிச்
சோலை வாழை முணைஇ அயலது
வேரல் வேலிச் சிறுகுடி அலறச்
செங்கால் பலவின் தீம்பழ மிசையும்
மாமலை நாட! தாமம் நல்கு என
வேண்டுதும், வாழிய! எந்தை வேங்கை
வீயுக விரிந்த முன்றில்
கல்கெழு பாக்கத்து அல்கினை செலினே.
திரைப்படமொன்றில் ஒரு காதலி தன்னைப் பிரிந்து செல்லும் காதலனிடம் இதேபோல் கேட்கிறாள். அவன் திரும்பி வரும்வரை தன்னுடைய ஞாபகமாக அவளுக்கு ஒரு நாணயத்தைத் தந்து செல்கிறான்.
அதன்பிறகு, அவள் பார்க்கும் வட்ட வடிவப் பொருள்கள் எல்லாமே நாணயம்போல் அவளுக்குத் தெரிகின்றன. இதனை யுகபாரதி எழுதுகிறார் -
பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்,
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன்,
துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்,
கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்,
செவ்வந்திப் பூவின் நடுவில் பார்த்தேன்,
தேசியக் கொடியில் சக்கரம் பார்த்தேன்,
இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்த்தேன்...
ஒற்றை நாணயம்!
அவள் மனம் உணர்ந்த அந்தக் காதலன் சொல்கிறான் -
'காலம்முழுவதும் காத்திருப்பேன், நீ
காணும் இடத்தினில் பூத்திருப்பேன்,
ஒற்றை ரூபாய்ப் பக்கம் இரண்டும்
எந்தன் அன்பு சேர்ந்திருக்கும்,
நெஞ்சில் வைத்துக் காத்திரு!'
மேற்கண்ட நற்றிணைப் பாடலில் யானை பலாப்பழம் சாப்பிடுகிற காட்சியை ஏன் தோழி காதலனிடம் சொல்ல வேண்டும்? அவர்கள் நாட்டை வர்ணிக்க வேறு விஷயமா இல்லை?
யானை ஜோடியாகப் பலாப் பழம் தின்ன வருகிறது. அதைப் பார்த்து ஊர் மக்கள் பயந்து ஓடுகிறார்கள்.
இங்கே ஊர் மக்கள் என்பது, காதலன், காதலியைப் பற்றிப் பலவிதமாகப் பேசுகிறவர்களைக் குறிக்கிறது. அவர்கள் முன்னால் கை கோத்துக்கொண்டு நீங்கள் ஜோடியாக நடக்க வேண்டும், இப்போது கேலி பேசுகிறவர்கள் அப்போது முகத்தை எங்கே வைத்துக்கொள்வார்கள்? அதை நான் பார்க்க வேண்டும் என்று தோழி சொல்லாமல் சொல்கிறாள்.
குறுந்தொகையில் கபிலர் எழுதிய ஒரு பாடலில், பலாப்பழம் வேறுவிதமான கருத்தைச் சொல்லப் பயன்படுகிறது. அங்கேயும் காதலன் காதலியை இரவில் சந்தித்துவிட்டுக் கிளம்புகிறான். தோழி அவனிடம் பேசுகிறாள்.
'உங்க ஊர்ல பலா மரம் உண்டா?'
'நிறைய உண்டே. அதுக்கென்ன?'
'பலா மரத்தோட காம்பு எப்படி இருக்கும்ன்னு பார்த்திருக்கீங்களா?'
'ஓ, நல்லா தடிமனா இருக்கும்!'
'ஒருவேளை, ஒரு சின்னக் காம்புல பெரிய பலாப்பழம் பழுத்துட்டா என்ன ஆகும்?'
'அந்தப் பழத்தோட எடையைத் தாங்கமுடியாம அந்தக் காம்பு உடைஞ்சுபோகும்.'
'அதுக்கப்புறம்?'
'பலாப்பழம் கீழே விழுந்து சிதறிப்போகும்!'
'உங்க காதலியும் அப்படிதான்!' என்கிறாள் தோழி, 'அவளோட உயிர் ரொம்பச் சின்னது, அதுக்குள்ள இருக்கிற காதல் ரொம்பப் பெரிசு.'
அவள் அவ்வளவுதான் சொல்கிறாள். அதன் உட்பொருள், 'என் தோழி இன்னும் எவ்ளோ நாள் இந்தக் காதல் கனத்தைத் தாங்கிட்டிருப்பா? சீக்கிரமா கல்யாணப் பேச்சைத் தொடங்குங்க!'
வேரல்வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார் அஃது அறிந்திசினோரே? சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்குஇவள்
உயிர் தவச்சிறிது, காமமோ பெரிதே!
இன்னொரு காதலன், அவன் ஊரிலும் பலா மரங்கள் அதிகம். அவற்றில் பலாப் பழங்கள் மரம்முழுக்க ஒன்றோடொன்று சேர்த்துத் தொடுத்ததுபோல் தொங்கிக்கொண்டிருக்குமாம்.
அந்தக் காதலனின் காதலி, தன் தோழியிடம் சொல்கிறாள், 'எனக்கு ஓர் எதிரி வந்திருக்கான்.'
'யார் அது?'
'என்னுடைய காதல்தான் எனக்கு எதிரி' என்கிறாள் காதலி.
'காதலை ஏன் எதிரின்னு சொல்றே?'
'என் காதலன் வரும்போது, இந்த எதிரி வந்து என்னைச் சூழ்ந்துக்கறான். சரி, அவன் கிளம்பிப் போனப்புறம் இவனும் கிளம்பவேண்டியதுதானே? இங்கேயே என் பக்கத்துல உட்கார்ந்துகிட்டுத் தொல்லை பண்றான்!' என்கிறாள் காதலி, 'அவனோடு சேர்ந்தாலும் காதல், அவனைப் பிரிந்தாலும் காதல்' என்பதால், அதைப் 'பகை' என்று குறிப்பிடுகிறாள்.
உறையூர்ச் சிறுகந்தன் எழுதிய குறுந்தொகைப் பாடல் இது -
வேரும் முதலும் கோடும் ஒராங்குத்
தொடுத்தபோலத் தூங்குபு தொடரிக்
கீழ்தாழ்வன்ன வீழ்கோட் பலவின்
ஆர்கலி வெற்பன் வருந்தொறும் வரூஉம்
அகலினும் அகலாதாகி
இகலும் தோழி நம் காமத்துப் பகையே!
கிட்டத்தட்ட இதேமாதிரி பிரச்னை கொண்ட ஒரு காதலியைத் திருவள்ளுவர் காட்டுகிறார்.
அவளுடைய காதலன் அவளைப் பார்க்க வந்திருக்கிறான். இருவரும் மகிழ்ச்சியாகப் பேசுகிறார்கள்.
பிறகு, அவன் கிளம்புகிறான். அப்படி அவன் திரும்பி நடந்த மறுகணம், இவள் உடலில் பசலை படர்ந்துவிடுகிறது. அவனை எப்போது மீண்டும் காண்பது என்று ஏங்கத் தொடங்கிவிடுகிறாள்:
உவக்காண் எம் காதலர் செல்வார் இவக்காண் என்
மேனி பசப்பு ஊர்வது!
இதையே ஒரு நாட்டுப்புறக் காதலியும் சொல்கிறாள்.
எலும்பிருக்க, தசைகுறைய
என்ன குத்தம் செய்தேனய்யா?
ஊரைச் சேர்ந்தவன், இவளைச் சந்திக்க ஒவ்வோர் இரவிலும் வருகிறான். ஆனால், பகல் நேரத்தில் வந்து பெண் கேட்கவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக