பிற்காலச் சிற்றிலக்கியங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சிற்றிலக்கியம் வடமொழியில் பிரபந்தம் என அழைக்கப்படுகிறது. தமிழில் யாப்பு, செய்யுள் எனும் சொற்களைப் போன்றே பிரபந்தம் என்ற சொல்லுக்கும் நன்கு கட்டப்பட்டது என்று பொருள். சிற்றிலக்கிய நூல்கள் நெடிய பாடல்கள் போன்றவை. ஒருசில துறைகளைப் பற்றிய செய்தியை உள்ளடக்கமாகக் கொண்டவை. சுருங்கிய அளவில் எளிதில் படித்து முடிக்கக்கூடியனவாக அமைபவை. சங்க இலக்கியத்திலேயே சிற்றிலக்கிய வகைகள் பல கிளைவிட்டன. குறிப்பாக, பத்துப்பாட்டு நூல்கள் இறைவனை, அரசனை, வள்ளலைப் புகழ்ந்து பாடிய அடிப்படையிலேயே பிற்காலச் சிற்றிலக்கியங்கள் தோற்றம் கொண்டன. நீதி இலக்கியம், பக்தி இலக்கியம் சார்ந்த சிற்றிலக்கியங்களும் செழித்தன. பின்னர், சிறப்புப் பெற்ற பிள்ளைத்தமிழ், தூது, உலா போன்ற சிற்றிலக்கியங்கள் தழைத்தோங்கின. | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நான்கு உறுதிப் பொருள்களுள் ஏதேனும் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ குறைந்து வரப் படைப்பவை சிற்றிலக்கிய வகைகள். இவற்றைப் பாட்டியல் நூல்கள் பல்வேறாக வரையறுக்கின்றபோதிலும் பொதுவாகச் சிற்றிலக்கிய வகைகள் 96 எனும் வழக்குக் காணப்படுகின்றது. இத்தொண்ணூற்றாறு வகைகளுள் பரணி, தூது, உலா, கலம்பகம், பிள்ளைத்தமிழ், குறவஞ்சி, பள்ளு போன்றவை முக்கியமானவையாகக் கருதப்பெறுகின்றன. | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சிற்றிலக்கிய வகைகளுள் பெரும்பான்மை கடவுள் (அ) மன்னன் (அ) தலைவனைப் புகழ்வதாக அமைகின்றன. குறவஞ்சி மற்றும் பள்ளு இலக்கியங்கள் முறையே குறிஞ்சி நில, மருதநில மக்களின் வாழ்வியலை விளக்குகின்றன. | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிற சிற்றிலக்கிய வகைகள் (முதன்மையானவை)
|
சனி, 23 மே, 2015
TRB PG TAMIL :சிற்றிலக்கியங்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக