வெள்ளி, 8 மே, 2015

மார்குகள் என்கிற போதைமயக்கம்

இந்த கல்விமுறைய மிகப்பெரிய தவறான ஒன்றாகும். என்ஜினீயரிங் படித்த மாணவர்களின் திறமையை வெளிநாடுகளில்பார்க்க சொல்லுங்கள். வெளிநாடுகளில் படிக்கும் பள்ளிபிள்ளைகளின் பொது அறிவின் அளவுக்கு இல்லை என்பதேஉண்மை.
ஒவ்வோர் ஆண்டிலும் முதலிடம் என்று பரபரப்பான செய்திகளில் தோற்றம் காணும் பிள்ளைகளில் எத்தனைபேர் இன்று வெளி உலகிற்கு தெரிகின்றார்கள்? அவர்களின் பதவி என்ன? அவர்களின் கல்வியின் நிலை என்ன என்று சொல்லும்படி செய்திகள் வந்துள்ளனவா இதுவரை? ஒன்றே ஒன்று உதாரணம் சொல்ல முடியுமா என்ன? இந்த மார்குகள் என்கிற போதைமயக்கம் பிள்ளைகளை விட இந்த பெற்றோர்களுக்கு மிக அதிகம். பிள்ளைகள் பெயர் வாங்குவதை காட்டிலும் தாங்கள்
அதனை பெருமைபடுத்தி காட்டவே படாத பாடு படுகின்றார்கள். அத்தகைய பிள்ளைகள் எவ்வளவோ இழக்கின்றார்கள் வாழ்கையில்.
குறைந்த மார்க்குகள் பெற்ற பிள்ளைகள் எல்லாம் தெருவிலா தூக்கி எறியப்படுகின்றார்கள்? இல்லையே..சொல்லப்போனால்அவர்கள்தான் வாழ்கையை முழுமையாக உணர்ந்தவர்களாக துணிச்சல் மிக்கவர்களாக மிளிர்கின்றார்கள்.
அரசு பள்ளியோ..தனியார்பள்ளியோ..எதுவானாலும் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களால் குறுக்கு வழிகளில் வினாத்தாள்களை பெறுவதற்கு முயற்சித்து தோல்வியுற்றவர்கள் பின்தங்குவதும்..வினாத்தாள்களை பெறுபவர்கள் தேர்ச்சி சதவிகிதத்தில் முன்னேறுவதும் காலம்காலமாக நாடாகும் கேவலங்களே. தனியார் பள்ளிகளில் பல லட்சங்களை வாங்கிகொண்டு தேர்ச்சி பெற கொடுமைபடுத்துகின்றார்கள் பள்ளிபிள்ளைகளை..ஆனால் அரசு பள்ளிகளில் கட்டணமே இல்லாமல் மார்க் எனும் போதைக்குஅவர்களும் அடிமையாகி ஸ்பெஷல் கிளாஸ் என்று பயறிசி கொடுக்கின்றார்கள்.

அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகள் மீதுள்ளமோகத்தில் பெற்றோர்களும் அலைகின்றார்கள்..எப்படியாயினும் இந்த ஆசிரியர்களும்..இந்த பெற்றோர்களும் ஏன்தான் இப்படிஅலையோ அலை என்று அலைகின்றார்களோ மார்க் எனும் போதைக்கு..

இழிவான நடைமுறை..சீர்திருத்தம் அவசியமான பள்ளி கல்விமுறை..படித்தவர்களுக்கும் இது தெரியாது..புரியாது..ஏனென்றால் அவர்களும் இப்படித்தா மார்க் வாங்கு மார்க் வாங்கு என்றுகொடுமைபடுத்தப்பட்டு இந்த உயர் போஸ்ட்டுக்கு வந்தவர்கள்..அதனால் ஒருபோதும் நமது கல்வி முறையில் மாற்றம் செய்திட யாருக்குமே தோன்றாது..வீணான பயத்தில் பிள்ளைகள் ஒவ்வோர் ஆண்டிலும்..தொடர்கதை இது..

- Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக