தமிழ் இலக்கியங்களைப் போலவே இலக்கணங்களும் பல்வேறு கால கட்டங்களில் பலவகையான பாக்களில் இயற்றப்பட்டுள்ளன. நிகண்டுகளின் யாப்பு வளர்ச்சியைக் காணும்போது ஆசிரியம், வெண்பா, கலித்துறை, விருத்தம் ஆகியவை பயன்பட்டுள்ளதை அறியலாம். முதல் ஆறு நிகண்டுகளின் யாப்பு அமைப்புகளைப் பின்வரும் அட்டவணையில் காணலாம். | ||||||||||
| ||||||||||
திவாகரரும் பிங்கலரும் நூற்பாவில் கூறிய நிகண்டினைப் பின்வந்தோர் வெண்பா, கட்டளைக் கலித்துறை, விருத்தம் ஆகிய பாக்களைப் பயன்படுத்தி இயற்றினர். ஆசிரியப்பாவை விட ஏனைய பாக்கள் எளிதாக மனப்பாடம் செய்ய உதவும். எதுகையும் மோனையும் தளையும் பாவின் வடிவத்தை மனத்தில் நன்கு நிறுத்தும். கட்டளைக் கலித்துறையில் எதுகை, மோனை, தளையுடன் எழுத்து வரையறையும் சேர்ந்து இனிமையாகின்றது. விருத்தப்பாவில் இவற்றோடு இசையமைதியும் பொருந்திப் பாடல்கள் மேலும் மனப்பாடத் தகுதியடைகின்றன. எனவே, காலத்திற்கேற்ற வளர்ச்சியில் பல யாப்புகள் பயன்படுத்தப்பட்டன. கருத்து அடிப்படையில் காணும்போது, நிகண்டுகளின் பொருள்களில் பெரும்பான்மையும் முன்பிருந்த நிகண்டுகளின் சொல் தொகுதிகள் அப்படியே எடுத்தாளப்படுகின்றன. ஆசிரியர்கள் தம் காலத்தில் தோன்றிய சொற்களையும் சேர்த்துக்கொள்வார்கள். இவ்வாறு சேர்த்து எழுதும்போது பழைய யாப்புமுறையைப் பயன்படுத்தாமல் வேறு யாப்பைப் பயன்படுத்துவது நூல்களுக்கிடையே வேறுபாட்டைக் காட்ட உதவும். எனவே, யாப்பின் புதுமைக்காகவும் கருத்துப் புதுமைக்காகவும் நிகண்டுகளின் யாப்பில் பல்வேறு வளர்ச்சிகளைக் காணமுடிகிறது. |
சனி, 23 மே, 2015
TRB PG TAMIL:நிகண்டு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக