மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 10ஆம்தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக, முதன்மைக்கல்வி அலுவலர் சி.அமுதவல்லி தெரிவித்தார்.
தமிழகத்தில், பிளஸ்2 அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 3-ஆம் தேதி துவங்கி,மார்ச் 25 வரை நடைபெறவுள்ளது. 150 மதிப்பெண்களுக்காக நடைபெறும் இந்தஎழுத்துத் தேர்வுக்கு, இந்த ஆண்டு முதல் புதிய நடைமுறையில்விடைத்தாள்கள் தயாரிக்கப் பட்டுள்ளன. மாணவ, மாணவியரின் பதிவெண்ணுடன் கூடிய விடைத்தாள் கட்டு, ரகசிய குறியீடு(பார்கோடு)ஆகியவற்றுடன் இந்த விடைத்தாள்கள் தயாரிக்கப் பட்டுளளன. இதன் மூலம், பதிவெண்ணை மறந்துவிடுவது அல்லது மாற்றி பதிவெண்ணை எழுதுவது பிரச்னைகள் தவிர்க்கப்படும். தேர்வெழுதும் மாணவ, மாணவியர் கூடுதல்விடைத்தாள்களுக்காக, அடிக்கடி எழுந்து செல்ல வேண்டிய அவசியமும்இருக்காது. மேற்பார்வையாளர்களுக்கும் சுமை தவிர்க்கப்படும்.
முன்னதாக, பிளஸ்2 அறிவியல், கணிதம்-அறிவியல் மற்றும் தொழில்கல்வி பாடங்கள் படிக்கும் மாணவ, மாணவியருக்கான செய்முறைத் தேர்வுகளை பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க தேர்வுகள்துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. 2013-ஆம் ஆண்டு தேர்வு வரை, செய்முறைத்தேர்வு மதிப்பெண்கள் தேர்வுத்துறைக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது . இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள்இருந்து வந்தது.
இந்த ஆண்டு முதல் தினமும் செய்முறைத் தேர்வு முடிவடைந்ததும் ஆன்லைனில் மதிப்பெண்களை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில், பிளஸ்2 செய்முறைத் தேர்வுகளை பிப்ரவரி 10-ஆம் தேதி துவங்கி, பிப்ரவரி 22-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக, முதன்மைக் கல்வி அலுவலர் சி.அமுதவல்லி தெரிவித்தார். மேலும் அவர் கூறியது: பெரிய பள்ளிகளில் 3 முதல் 4 பேட்ஜ்களாகக் காலை, மாலையில் நடத்திக் கொள்ள அனுமதிக்கப்படும். இத்தேர்வுக்கான
வினாத்தாள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. எந்தெந்தத் தேர்வை எந்த
தேதியில் நடத்துவது என பட்டியல் தயாரித்து இன்னும் ஓரிரு நாளில்முறைப்படி அறிவிப்பு செய்யப்படும், என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக