வேலை தேடுபவர்களையும், வேலை கொடுப்பவர்களையும் இணைக்க தனி இணையதளம் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த ஆண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர்
கே.ரோசய்யா உரையுடன் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை தொடங்கியது. அவரது உரையில், வேலைவாய்ப்புக்கென தனி இணையதளம்பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
தமிழகத்தின் மக்கள் தொகையில் உழைக்கும் வயதுடையவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்தச் சாதகமான சூழலைப் பயன்படுத்திக்கொள்ளத் தேவையான சமூக, பொருளாதாரக் கட்டமைப்புகளை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மாணவர்களுக்கு விலையில்லா லேப்-டாப் கம்ப்யூட்டர் வழங்குவது இதற்கானமுன்னோடித் திட்டங்களில் ஒன்றாகும். தமிழக இளைஞர்களின்வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்க தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கம்என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வேலை தேடுபவர்களையும்,வேலைவாய்ப்பு அளிப்பவர்களையும் இணைக்க, மாநிலவேலைவாய்ப்பு இணையதளம் என்ற தனி இணையதளம் தொடங்கப்படும்.
என்னென்ன தகவல்கள்?
வேலைவாய்ப்பு ஆலோசனைகள், பயிற்சிகள்,வேலை பெறுவதற்கான உதவிகள் குறித்த தகவல்களை இந்த இணையதளத்தில் பெறலாம். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கத்துக்காக, சர்வதேசநிதி நிறுவனங்களிடமிருந்து நிதி மற்றும் தொழில்நுட்ப
உதவிகளை தமிழகம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது உரையில்
ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து பெருமிதம்தெரிவித்த அவர், காவல் துறையில்இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை தமிழக அரசு ஏற்படுத்தித் தருவதாகக்
கூறினார். தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் பாதுகாப்புப் படைக்கான 10ஆயிரத்து 500 பணியிடங்கள் உள்பட 24 ஆயிரத்து 503 கூடுதல்பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஆளுநர்கே.ரோசய்யா தனது உரையில் தெரிவித்துள்ளார்.
திருவொற்றியூருக்கு மெட்ரோ ரயில்:
சென்னையில்செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் குறித்து புதிய அறிவிப்பையும்
அவர் வெளியிட்டார். வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் செல்லும் வழித்
தடத்துக்கு மத்திய அரசிடம் இருந்து விரைவில் ஒப்புதல் பெறவும், இரண்டாவது கட்டத்துக்கான புதிய வழித் தடங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும்ஆளுநர் தனது உரையில் கூறியுள்ளார்.
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் தமிழகத்தின் வளர்ச்சி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஆளுநர்,மாநிலத்துக்குத் தேவையான நிதியை 14-வது நிதிக்குழு பாரபட்சமின்றி வழங்கும் என்று நம்புவதாகத் தெரிவித்தார். பொருளாதார நெருக்கடி நிலையிலும், நடப்பு நிதியாண்டில்வளர்ச்சி விகிதம் 5 சதவீதத்தை மிஞ்சும் எனத் தெரிவித்த அவர்,திட்டங்களுக்கான செலவினம் வரும் நிதியாண்டில் மேலும் ரூ.5 ஆயிரம்கோடி அளவுக்கு உயர்த்தப்படும் எனத் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழர் பிரச்னை, தமிழக மீனவர் பிரச்னை ஆகியவற்றில் முதல்வர்
ஜெயலலிதா உறுதியான நிலைப்பாட்டுடன்நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன் அவரின் சிறப்பான முயற்சியால்,நீண்டகாலமாக இலங்கையால் கைது செய்யப்பட்டிருந்த 295 மீனவர்களும்,அவர்களின் 45 படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாககூறி ஆளுநர்
ரோசய்யா பாராட்டுத் தெரிவித்தார்.
மக்கள் நலம் பேணும் தமிழகம்:
மற்ற மாநிலங்கள் கண்டு வியக்கும் வகையில் பல தனிச் சிறப்பு வாய்ந்த நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு,முன்மாதிரியான மக்கள் நலம் பேணும் மாநிலமாகத் தமிழகம் திகழ்வதாகஆளுநர் பெருமிதம் தெரிவித்தார். தேசிய அளவில் பின்னர் செயல்படுத்தக் கூடியதிட்டங்களை முன்னரே செயல்படுத்தி, தேசியத் திட்டங்களுக்கு முன்னோடியாக தமிழகம் விளங்குகிறது என அவர்பாராட்டினார்.
பெண்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினருக்கும் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் இந்த அரசின் போற்றத்தக்க முயற்சிகள், சமூகப் பொருளாதார நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவியை உறுதி செய்யும் முன்னோடி மாநிலமாக தமிழகம் முன்னிறுத்தப்பட்டுள்ளது என ஆளுநர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக