ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட்17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இத்தேர்வுகளில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு இம்மாதம் 20ம் தேதி முதல் 27-ம் தேதிவரை அந்தந்த மாவட்டங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. இந்த சான்றிதழ் சரிபார்ப்பில் வருகை புரியாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்கும் வகையில்நாளை ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள மையத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
2012-ம் ஆண்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தகுதிபெற்று, சான்றிதழ் சரிபார்ப்புக்கு வருகைபுரியாத தேர்வர்களும், நாளை தத்தம் மாவட்டங்களில்
சான்றிதழ் சரிபார்ப்பு மையத்திற்கு உரிய ஆவணங்களுடன் சென்று கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
2012 மற்றும் 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்புக்கு இதுவே இறுதி வாய்ப்பாகும் என்றும்,இனி எவ்வித வாய்ப்பும் வழங்கப்பட மாட்டாது என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக