வெள்ளி, 31 ஜனவரி, 2014

இடைநிலை ஆசிரியர் பணி நியமனம்: வெயிட்டேஜ் முறை இரத்து செய்திட வழக்கு

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 3 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது.இதற்காக அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தியது. இடைநிலை ஆசிரியர் பணிக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-ஐ ஏராளமானோர் எழுதியிருந்தனர்.இதில் 12,596 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு பெற்றிருந்தனர். 3 ஆயிரம் பணியிடங்களுக்கு 12 ஆயிரம் பேர் தேர்வு பெற்றதால், இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

அதாவது ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 தேர்ச்சிப் பெற்று பதிவுமூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர் என்று ஏற்கெனவே கல்வித் துறை அறிவித்திருந்தது.
ஆனால் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் பதிவுமூப்புக்கு பதிலாக வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்வது போல, இடைநிலை ஆசிரியர் நியமனமும் இருக்கும் என்று திடீரென அறிவிக்கப்பட்டது.
அதாவது பிளஸ் 2-வில் எடுத்த மதிப்பெண், இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு, ஆசிரியர் தகுதிச் தேர்வு முறையே 15, 25, 60 மதிப்பெண்கள் என வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன.இது தேர்ச்சி சதவீதத்துக்கு ஏற்ப மாறுபடும். இதனால் பதிவுமூப்பு அடிப்படையில் வேலை கிடைத்துவிடும் என்று எண்ணியவர்கள் கலக்கமடைந்தனர்

தொழில் பிரிவு மாணவர்களுக்கு பிராக்டிகல் பாடங்களில் எளிதாக 400 மதிப்பெண்கள் கிடைத்துவிடும். இதனால் வெயிட்டேஜ் முறையில் கணக்கிடப்படும்போது தொழில் பிரிவு மாணவர்கள் அதிக அளவில் தேர்வு பெறுகின்றனர்.இதேபோல் கலைப்பிரிவு மாணவர்களும் அதிக அளவில் தேர்வு பெறுகின்றனர்.ஆனால் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவு படித்தவர்கள் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் பாதிக்கப்பட்டுள்ளோம். இதனால் பதிவு மூப்பு அடிப்படையில் காத்திருந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம் . எனவே இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்தில் தற்போதைய நிலையே தொடரவேண்டும் எனவும் வெயிட்டேஜ் முறையில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் செய்யவேண்டும் எனக்கூறும் அரசணை 252 ஐ இரத்து. செய்திட வேண்டும் எனவும். சென்னை உயர்நீதி மன்றத்தில் சிலர் வழக்குதொடுத்துள்ளனர். இன்று (31.01.2014) அம் மனுக்கள் விசாணைக்கு வந்தன. மனுக்களை விசாணைக்கு ஏற்றுக்கொண்ட நீதியரசர் சுப்பையா அரசுக்கு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்தவாரத்துக்கு ஒத்தி வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக