சனி, 1 பிப்ரவரி, 2014

""விருப்ப பாடங்களை தேர்வுசெய்வதில் தான் வெற்றி உள்ளது,''

""விருப்ப பாடங்களை தேர்வுசெய்வதில் தான் வெற்றி உள்ளது,'' என, ஐ.எப்.எஸ்.,தேர்வில் 56 வது இடம் பெற்ற செந்தில்பிரபு தெரிவித்தார்
.திண்டுக்கல்லை சேர்ந்தவர்செந்தில்பிரபு, 24. இவர், சென்னையில் உள்ள ஐ.ஏ.எஸ்., அகாடமியில் பயின்று, ஐ.எப்.எஸ்.,தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். திண்டுக்கல்லில் பி.இ., எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன்படித்துள்ளார். இவரது தந்தை வஞ்சிமுத்து, ஓட்டல் நடத்தி வருகிறார்.செந்தில்பிரபு கூறியதாவது:
பொறியியல் படிக்கும்போது, ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என, ஆவல் ஏற்பட்டது. படிப்பை முடித்ததும், பயிற்சி எடுக்க துவங்கினேன். முதல் முயற்சியிலேயே ஐ.எப்.எஸ்.,தேர்வில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. வனம், நிலவியல் ஆகிய பிரிவுகளை விருப்பப்பாடங்களாக எடுத்து படித்தேன். 10 பேர் சேர்ந்து பாடங்களை "குரூப் ஸ்டடி'யாக படித்தோம். விருப்ப பாடங்களை தேர்வுசெய்வதில் தான், வெற்றிவாய்ப்பு உள்ளது. மற்றவர்களை பார்த்து, பாடங்களை தேர்வுசெய்ய கூடாது. நமக்கு பிடித்த பாட பிரிவுகளை எடுத்து படிக்க வேண்டும். இரண்டு முறை சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, ஒருமுறை நேர்காணல் வரை சென்றுள்ளேன். மூன்றாவது முறையாக, சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு எழுதியுள்ளேன். அதில், வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ்., ஆவேன், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக