தருமபுரி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டகருத்தாளர்களுக்கு மூன்று நாள் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
மாவட்டத்திலுள்ள குறுவள மைய அளவிலான பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்க கருத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கருத்தாளர்களுக்கு பயிற்சி முகாம் தருமபுரியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. முகாமை அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.ஆறுமுகம் தொடக்கிவைத்துப் பேசினார்.
மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவன பேராசிரியர் அசோகன், ஆசிரியர் பயிற்றுநர் பன்னீர்செல்வம், ஆசிரியர்கள் முருகன், செந்தில்ராஜா ஆகியோர்பயிற்சியளித்தனர். குழந்தைகளின் உரிமைகள், இலவச கட்டாயக் கல்வி, சுகாதாரம், அரசு நலத்
திட்டங்கள், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் குறிக்கோள்கள்குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
முகாமில், உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் தன்ராஜ், மாவட்டஒருங்கிணைப்பாளர் எம்.மோகனப் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக