ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை மூலம்தேர்ச்சி பெற்றவர்களுக்கு மார்ச் 12-ஆம் தேதி முதல் சான்றிதழ்சரிபார்ப்பு நடைபெற உள்ளது.
முதல்கட்டமாக, ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில்தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் எனவும்,அதனைத் தொடர்ந்து இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப்
பிறகு கூடுதலாக 46 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தச் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இடம், நாள்கள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் www.trb.tn.nic.in விரைவில் வெளியிடப்படும். தேர்வர்கள் தங்களது பதிவு எண்ணைக் குறிப்பிட்டு அழைப்புக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகளுக்கு எந்தவித பாதிப்பும் வராத வகையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர்
தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் மொத்தம் 5 மண்டலங்களாகப் பிரித்து சான்றிதழ்சரிபார்ப்பு நடத்தப்படுகிறது. பொதுத்தேர்வுகள் நடைபெறுவதால், மொத்தமாக சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த முடியாது என்பதால் 40 நாள்கள் வரை இந்த முறை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஏற்கெனவே நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க முடியாதவர்களும் இதில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக