கூடலூர் தனியார் மேல்நிலைப் பள்ளி மாணவர் தீக்குளித்த சம்பவத்துக்கு காரணமாகக் கூறப்படும் ஆசிரியரை இடைநீக்கம் செய்து,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
கூடலூரில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்விக்னேஷ்குமார் (14). இவர் பாடப் புத்தகங்கள் கொண்டு வராததால், ஆசிரியர்ராஜ்மோகன் வகுப்புக்குள் அனுமதிக்காமல், கடந்த 3 நாள்களாகவெளியிலேயே நிறுத்தி வைத்துள்ளார். இதனால், மனவேதனை அடைந்தமாணவர், தனது வீட்டுக்குச் சென்று மண்ணெண்ணெய்
ஊற்றி தீக்குளித்துள்ளார்.
தற்போது, தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வருகிறார் மாணவர் விக்னேஷ்குமார். இதனால், மாணவர் தீக்குளிக்கக் காரணமாகக் கூறப்படும் ஆசிரியர்ராஜ்மோகன் மற்றும் பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து, மாணவரின் உறவினர்கள்கூடலூரில் பள்ளி முன்பு தேனி-குமுளி தேசிய நெடுஞ்சாலையில்மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீஸார் உறவினர்களிடம்
பேச்சுவார்த்தை நடத்தினர். ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாகஉறுதி அளித்ததால், மறியலை கைவிட்டனர். இருப்பினும், பள்ளியை தொடர்ந்து உறவினர்கள் முற்றுகையிட்டு வந்ததால்,வியாழக்கிழமை பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.தொடர்ந்து,மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் வாசு, அரசு உதவிபெறும் இப்பள்ளியின்ஆசிரியர் ராஜ்மோகனை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக