திங்கள், 24 பிப்ரவரி, 2014

தருமபுரி மாவட்டத்தில் 9 பேருக்கு பட்டதாரி ஆசிரியர் பணி நியமன ஆணை

பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் 10 பேருக்கு பதவி உயர்வுக்கான ஆணைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணியாற்றி, பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு பெற்ற 498 பேருக்கு ஆன்லைன் கலந்தாய்வு மூலம் பதவி உயர்வு ஆணை வழங்கும்நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி,தருமபுரி மாவட்டத்தில் பதவி உயர்வு பெற்ற 10 பேருக்கு ஆன்லைன்கலந்தாய்வு மூலம் பதவி உயர்வு ஆணை, கடந்தாண்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் பட்டதாரி ஆசிரியர்களாகத் தேர்ச்சி பெற்ற 9 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலக்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர் 10 பேர், 9 பேருக்கு பட்டதாரி ஆசிரியர் பணி நியமன ஆணையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக