திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெறுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் 45 பேருக்கு,பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு கலந்தாய்வு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சந்திரசேகர் தலைமையில் திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளியில் சனிக்கிழமை காலை 9 மணி முதல்நடைபெறுகிறது.
பிற்பகல் 2 மணியளவில், 7 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நேரடி பணி நியமனஆணைகள் வழங்கப்படுகின்றன என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக