தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காலியாக உள்ள வரலாற்று ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனபட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட வேலையில்லா வரலாற்று பாட ஆசிரியர்கள்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் தருமபுரியில் நடைபெற்றது. சங்கத் தலைவர் தி.கா.தியாகராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்பி.காசிநாதன், துணைத் தலைவர் எஸ்.சிங்காரவேலு முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற வரலாற்று பாடஆசிரியர்களை உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும். தருமபுரி,கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காலியாக உள்ள வரலாற்று பாட ஆசிரியர்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 45 வயதைக் கடந்தபட்டதாரிகளுக்கு கருணை அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி அருகேயுள்ள அதியமான் கோட்டையிலிருந்து சென்னைக்கு நடைபயணம் மேற்கொள்வது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் சங்கத்தின் செயலர்கள் எம்.பாலசுப்பிரமணியம், வீரமணி உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக