என்ன வியூகம் வகுத்து, பிளஸ் 2 தேர்வை எதிர்கொண்டால், முழு மதிப்பெண் பெறலாம் என,
தனது கடந்தாண்டு அனுபவங்களை 'டிப்ஸாக' தருகிறார், 2013ம் ஆண்டில், பிளஸ் 2வில்,
மதுரை மாவட்டத்தில் முதல் 'ரேங்க்' பெற்ற சி.இ.ஓ.ஏ., பள்ளி மாணவி ராஜேஸ்வரி:
பொதுவாக, அரசு தேர்வு என்ற டென்ஷனை முதலில் மூட்டை கட்டிவிட வேண்டும். மனதை ரிலாக்ஸாகவைத்துக்கொண்டு, தேர்வு அறைக்குள் மாணவர்கள் நுழைந்தாலே, பாதி வெற்றி உறுதி.
ஒரு மார்க் வினாக்களுக்கு வேகமாக எழுதுவதன் மூலம், நெடுவினாவிற்கு தேவைப்படும் கூடுதல் நேரத்தை சரிக்கட்டலாம். எனவே, முடிந்த வரை இப்பகுதியை விரைவில் முடிக்க வேண்டும்.இப்பகுதியில், முழு மதிப்பெண் பெறுவது மிக முக்கியம்.
ஒவ்வொரு பாடத்திலும் கடின பகுதி என்பதை முன்கூட்டியே முடிவு செய்துகொள்ள வேண்டும். அதை, அதிகாலை எழுந்தவுடன் படித்தால், வினாத்தாளில் கடின பகுதி வந்து விடுமோ என்ற கவலை, பயம் இருக்காது.
குறைந்தது ஐந்து ஆண்டுகளில் கேட்கப்பட்ட, வினாவங்கியில் இடம் பெற்ற, கேள்விக்கான விடையை முழுமையாக படித்து வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, பழைய வினாத்தாள்களில் இருந்தே, அதிக ஒரு மார்க் கேள்விகள் இடம்பெறுகின்றன.
வினாத்தாள் 'புளு பிரிண்ட்' அமைப்பை, ஒவ்வொரு மாணவரும்
தெரிந்து வைத்திருந்தால், அவர்கள் தேர்வுக்கு தயாராவதில், திட்டமிட முடியும்.
புளு மை பேனாவால் எழுதும்மாணவர்கள், முக்கிய பகுதியை கருப்பு மை பேனாவால் எழுதினால், நல்லது. புளு, கருப்பு மை பேனாக்கள் தவிர வேறு கலரை தவிர்க்க வேண்டும். கையெழுத்து தெளிவாக இருக்க வேண்டும். ஒருசிலரது கையெழுத்து சுமாராக இருக்கும். அவர்கள் அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும்.
ஒரு பக்கத்தில், 20 வரிகள் எழுதினால் போதும். அப்போதுதான் திருத்துவோருக்கு நல்லெண்ணம் ஏற்படும். முதலில், நன்றாக தெரிந்த வினாக்களுக்கு விடை எழுதுவது நல்லது. ஒருசிலர் நெடு வினாவில் இருந்து எழுத துவங்குவார்கள். ஒருசிலர் ஒரு மார்க் பகுதியில் இருந்து எழுதுவார்கள். இதுவரை நீங்கள் பின்பற்றிய அந்த அந்த
முறைப்படியே, இத்தேர்விலும் தொடருவது நல்லது.
படிக்கும் போது தூக்கம் வந்தால்,முகத்தை கழுவி அதை விரட்டியடிக்கக் கூடாது. நன்றாக தூங்கிவிட்டு, பின் படிக்க துவங்குங்கள்.தேர்வு நேரத்தில், இரவு பல மணிநேரம் கண் விழித்து படித்தால், தேர்வு அறையில் உடல் சோர்வடைந்து விடும்.
தேர்வு நேரத்தில் முழு வயிற்றுக்கு சாப்பிடுவதையும், துரித உணவு வகைகளை சாப்பிடுவதையும் தவிர்ப்பதன் மூலம், தேவையில்லாத உபாதை பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.
கொடுக்கப்பட்டுள்ள மூன்று மணி நேரத்தை திட்டமிட்டு செலவிட வேண்டும்.பத்து நிமிடங்களுக்கு முன்பே தேர்வு எழுதி முடித்துவிட்டு,ஒரு முறை எழுதியதை திருப்பி பார்ப்பது முக்கியம்
.கடந்தாண்டுகளின் வினா வங்கியில் இருந்து,அவ்வப்போது ஒரு வினாத்தாளை எடுத்து, தேர்வு எழுதிப் பார்க்கலாம். இதை அடிக்கடி செய்தால்,தேர்வு சிரமமாக இருக்காது.
Sent from my iPad
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக