வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

கேட் தேர்வில் ஒரு வினாவுக்கு கூட பதில் அளிக்காதவருக்கு 165 மதிப்பெண்கள்-சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (ஐ.ஐ.எம்.) இந்தோர் மையத்தில் 8இடங்களை காலியாக வைக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
கேட் தேர்வின் விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு நடந்ததாக தேர்வில்பங்கேற்றவர்கள் தாக்கல் செய்த மனுவுக்கு நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கேட் தேர்வில் பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த 8 பேர்உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
பொது நுழைவுத்தேர்வு என்பது இந்தியாவில் உள்ள 13 ஐ.ஐ.எம்.மில் ஏதாவது ஒரு மையத்தில்சேர்வதற்கான முதல் கட்ட நடவடிக்கை. இதர மேலாண்மை நிறுவனங்களும்
அனுமதி சேர்க்கையில் இது போன்ற தேர்வை பயன்படுத்துகின்றன. இந்த நிலையில் கடந்த ஆண்டு கேட் தேர்வு கணினி முறையில்நடத்தப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் 16-ஆம் தேதி முதல் 20 நாள்களில் 40தேர்வு மையங்களில் இந்தத் தேர்வு நடந்தது. இதில் கேட்கப்பட்டவினாத்தாள்கள் கடினமாக இருந்தன. இதனால், அதற்கான மதிப்பெண்களை சமமாக வழங்குவதற்காக சில வழிமுறைகள் பின்பற்றப்பட்டன.
அதில், எங்களுக்கு பின்பற்றப்பட்ட மதிப்பெண் வழங்கும் முறை தவறானது. இதில், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணில் முறைகேடுகள்நடந்தது தெரிய வந்தது. தேர்வின்போது வினாக்களுக்கு பதில் அளிக்காத மாணவர் அதிக மதிப்பெண்கள் பெற்றது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால், கேட் தேர்வில் பங்கேற்ற 1.7 லட்சம் பேரில் 50 சதவீதத்துக்கும் மேலானவர்கள் பூஜ்ஜியம் அல்லது குறைந்த அளவு மதிபெண்களை பெற்றனர்.
தேர்வு மையங்கள், தேர்வு வினாத்தாள் தாயரித்தல், விடைத்தாள் மதிப்பீடு மற்றும் தேர்வு முடிவுகளை வெளியிடுதல் போன்ற அனைத்து நடவடிக்கைக்கும் குர்காவ்னைச் சேர்ந்த புரோமெட்ரிக் டெஸ்டிங்பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் 14-ஆம் தேதி தேர்வு முடிவுகள்வெளியிடப்பட்டன. தேர்வு முடிவு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. ஏனென்றால், அது முறையற்றதாகவும் முரண்பாடுடையதாகவும் இருந்தது. பல ஆயிரம் தேர்வர்களுக்கு வினாவுக்கு அவர்கள் அளித்த விடைகளுக்கு ஏற்பமதிப்பெண்கள் வழங்கப்படவில்லை.
கேரீர் லான்ச்சர் இந்தியா லமிடெட் நிறுவனத்தின் ஆசிரியர் ஒருவர் ஆண்டுதோறும் கேட் தேர்வில் பங்கேற்பார். கடந்த ஆண்டு நடந்த கேட் தேர்வில் அவர் ஒரு வினாவுக்கு கூட பதில் அளிக்கவில்லை. இந்நிலையில், 450 மதிப்பெண்களுக்கு 165 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இது மிகவும் சாத்தியமற்றது. தேர்வு விடைத்தாள்கள் மதிப்பிடும்நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லாததே இதற்கு காரணம். எனவே,2013-ஆம் ஆண்டு கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை, 13 ஐ.ஐ.எம்.நிறுவனங்களில் அனுமதிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி இந்தூரில் உள்ள ஐ.ஐ.எம்.மில் மனுதாரர்கள்ஒவ்வொருவருக்கும் தலா ஒரு இடத்தை காலியாக வைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக