ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

குறுமன்' ஜாதி அந்தஸ்து குறித்த அறிக்கை : ஆர்.டி.ஓ.,க்களுக்கு அனுப்ப ஐகோர்ட் உத்தரவு

பழங்குடியின, "குறுமன்' பிரிவின், சிறப்பு தன்மைகள் அடங்கிய விவரங்களை, வருவாய்
கோட்ட அதிகாரிகளுக்கு (ஆர்.டி.ஓ.,) அனுப்புமாறு, பழங்குடியின நல இயக்குனருக்கு,
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம், அஸ்தம்பட்டியைச் சேர்ந்த, மாணிக்கம் என்பவர், தமிழ்நாடு குறுமன் நல சங்கம் மற்றும் ஆதிவாசிகள் கூட்டமைப்பின், பொதுச்செயலராக உள்ளார். இவர், தாக்கல் செய்த மனு:
பழங்குடியின பட்டியலில், "குறுமன்' பிரிவு இடம் பெற்றுள்ளது. தற்போது, "குறுமன்' ஜாதி சான்றிதழ் கிடைப்பதில், சிரமம் உள்ளது. பொதுவாக, கல்வி மற்றும் வருவாய்
ஆவணங்களை பார்த்து விட்டு, ஜாதி சான்றிதழை, ஆர்.டி.ஓ.,க்கள் வழங்குகின்றனர். "குறுமன்' பிரிவினரின்விசேஷ குணம், சிறப்பு தன்மை, கலாசாரம் பற்றி, அவர்களுக்கு தெரியாது. ஜாதி சான்றிதழ் வழங்குவதற்கு,தகுதி படைத்த, ஆர்.டி.ஓ.,க்களுக்கு, "குறுமன்' இனத்தவர் பற்றிய விவரங்களை அளித்திருக்க வேண்டும்.அவ்வாறு வழங்காததால், உண்மையான, "குறுமன்' யார் என்பதை, ஆர்.டி.ஓ.,க்களால் கண்டுபிடிக்க முடியாது.
எனவே, "குறுமன்' இனம் பற்றி, ஊட்டியில் உள்ள, பழங்குடியின ஆராய்ச்சி மையம் சமர்ப்பித்துள்ள அறிக்கையை, அனைத்து ஆர்.டி.ஓ.,க்களுக்கும் அனுப்ப, பழங்குடியின நலத் துறை இயக்குனருக்கு, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த, நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், தேவதாஸ் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவில், "குறுமன்' ஜாதி அந்தஸ்தை முடிவு செய்வதற்கு, வேறு எந்த அறிக்கையையும் இல்லை என்றால், பழங்குடியின நலத் துறை இயக்குனரிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை, அனைத்து ஆர்.டி.ஓ.,க்களுக்கும்வழங்க வேண்டும்' என, கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக