கரூர் மாவட்டம், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின், குளித்தலை வட்ட கிளை பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதீர்மானங்கள்: ஆசிரியர் கூட்டணி சார்பில், 7 அம்சக் கோரிக்கைகளைநிறைவேற்ற வலியுறுத்தி பிப். 25-ல் மாநில அளவில் நடைபெறவுள்ள ஒரு நாள்உள்ளிருப்பு போராட்டத்தில், குளித்தலை வட்டாரத்தில் உள்ள பள்ளிகளில்
இக்கூட்டணியைச் சேர்ந்த 129 ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்று இப்போராட்டம் வெற்றியடையச் செய்ய வேண்டும். இதைத்தொடர்ந்து, இதே கோரிக்கையை வலியுறுத்தி, பிப். 26-ல் ஒருநாள்தற்செயல் விடுப்பு எடுத்து, பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில்அனைத்து ஆசிரிய, ஆசிரியைகளும் பங்கேற்று கோரிக்கைகள் வெற்றி பெற போராட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக